பிரதமர் மோடி செய்த மேஜிக்
அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவிற்கு, 50 சதவீதம் வரி போட்டதால் இந்தியா ஸ்தம்பிக்க போகிறது என்றனர். நிறைகுடம் தளும்பாது என்பது போல பிரதமர் மோடி அனைத்திற்கும் அமைதி காத்தார். ஜப்பான் பிரதமர், சீனா அதிபர், ரஷ்ய அதிபர் ஆகியோரை சந்தித்து பிரச்னையை சுமுகமாக தீர்த்துள்ளார். பாகிஸ்தானுக்கு 'செக்' வைத்ததோடு, வல்லரசு நாடு என மார்தட்டிய அமெரிக்க அதிபர் டிரம்பிற்கும், செக் வைத்து அமைதியாக மோடி சாதித்துள்ளார். பிரதமர் மோடி மேஜிக் செய்துள்ளார். என் கையில் உள்ள கருங்காலி கட்டை, விஜயகாந்த் வைத்திருந்தது. அதை, நான் பயன்படுத்துகிறேன். - பிரேமலதா, பொதுச்செயலர், தே.மு.தி.க.,