உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உரிய டிக்கெட் எடுக்காமல் முன்பதிவு பெட்டியில் பயணம் ரயில்களில் தொடரும் அவலம்

உரிய டிக்கெட் எடுக்காமல் முன்பதிவு பெட்டியில் பயணம் ரயில்களில் தொடரும் அவலம்

சென்னை:சமீப நாட்களாக, அனைத்து ரயில்களிலும் கூட்டம் அலைமோதுவதால், உரிய டிக்கெட் எடுக்காதவர்களும், முன்பதிவு பெட்டிகளில் ஏறி அமர்ந்து விடுகின்றனர். இதனால், முன்பதிவு செய்து பயணிப்போருக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. தற்போது, கோடை விடுமுறை துவங்கி உள்ளதால், தென்மாவட்டங்களுக்கு செல்லும் பாண்டியன், சிலம்பு, பொதிகை, நெல்லை உள்ளிட்ட விரைவு ரயில்களில், இந்த பிரச்னை தொடர்கிறது.தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தென்மாவட்ட பயணியரின் தேவையை ஒப்பிடுகையில், தினசரி ரயில்கள் குறைவாகவே உள்ளன. கூடுதல் பெட்டிகள் இணைப்பு, சிறப்பு ரயில்கள் இயக்கம் போன்ற நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். மேலும், நிரந்தர ரயில் சேவையை அதிகரிக்க, கூடுதல் பாதைகள் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. முன்பதிவு பெட்டிகளில், உரிய டிக்கெட் இல்லாமல் பயணிப்பவர் குறித்து, பயணியர் புகார் அளித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்க, ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

V.Mohan
மே 09, 2025 08:26

ரயில்வே அமைச்சர் அவரது மெயின் வேலையை விட்டுவிட்டு வேறு வேலைகளில் கவனம் செலுத்துவதால் இந்த அவலம். போதாக்குறைக்கு லஞ்சப்பிதா லாலு பிரசாத் யாதவ் அமைச்சராக இருந்த போது பீகார் மாநிலத்தவர்கள் அதிகம் பேரை வேலைக்கு அமர்த்தி தென் மாநிலங்களுக்கு அனுப்பியதால் ,பாஷையும் தெரியாமல் எவ்வித பொறுப்பும் எடுத்துக் கொள்ளாத முரட்டு மனிதர்கள், ரயில்வே ஊழியர்களாக இருப்பதால், இந்த அவல நிலை. அந்தந்த மாநிலத்தவர்கள் வேலையில் இருந்த போது ரயில்கள் பற்றாக்குறை இருந்தாலும், முன்பதிவு செய்த பயணிகள் பிரச்னைகள் குறைவாக இருந்தது. முன்பதிவு செய்யாத பயணிகளின் அடாவடித்தனம் குறைவாக இருந்தது. இப்போது எந்த ஸ்டேஷனிலும் , ஸ்டேஷன் மாஸ்டரிடமோ, அல்லது எந்த அதிகாரிகளிடமும் குறை தீர்க்குமாறு முறையிடுவதற்கு, அவர்களிடம் பேசவே முடியாது. அவர்கள் இந்தி தவிர எந்த மொழி பேசினாலும் கண்டுகொள்வதே இல்லை. """ரயில்வேதுறை கீழ்மட்ட, மத்தியதர மக்களை""" மதிப்பதே இல்லை. ஆடுமாடுகள் என நினைக்கின்றனர். எல்லா அரசு ஊழியர்கள் போல தங்களை ஏதோ ஸ்பெஷல் பிறவிகள் எனக் கருதிக் கொண்டு தரமற்ற சேவைகள் தருவதற்கு பயப்படுவதே இல்லை. அவர்களுடைய வேலையில் நிலைப்பதற்கு மதிப்பெண்கள் வழங்கும் முறை கொண்டு வந்தால் தான் இந்த நிலை மாறும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை