உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசின் கவனக்குறைவு தான் காரணம்; வி.சி.க., அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

அரசின் கவனக்குறைவு தான் காரணம்; வி.சி.க., அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

சென்னை: 'அரசின் கவனக்குறைவால் வான் படை சாகச நிகழ்வு சாதனை நிகழ்வாக மாறாமல் வேதனை நிகழ்வாக மாறிவிட்டது' என விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியுள்ளார்.அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படையின் வான்படை சாகச கண்காட்சியை காண மக்கள் கூட்டம் இவ்வளவு வரும் என்று அரசு ஏன் முன்கூட்டியே கவனிக்க தவறியது. கொளுத்தும் வெயிலில் சுமார் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடும் பொழுது அங்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும். அதன்காரணமாக உடலில் நீர்சத்து குறைந்து மயக்கம் ஏற்படும். சிலருக்கு மாரடைப்பும் ஏற்படும். இது அறிவியல் எதார்த்தம். இதையெல்லாம் திட்டமிட்டு ஏற்பாடுகளைச் செய்த பிறகே அரசு இந்த நிகழ்விற்கு பொதுமக்களை அனுமதித்திருக்க வேண்டும். கூடிய லட்சக்கணக்கான மக்கள் கூட்டத்திற்கு ஏற்ற வகையில் தேவையான குடிநீர் வசதியை ஏற்படுத்தவில்லை.

பற்றாக்குறை

ஆக்ஸிஜன் பற்றாக்குறையை அகற்ற போதிய இடவசதியை ஒருங்கு படுத்தவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முறையான முதல் உதவி சிகிச்சை மையங்களையும் ஏற்பாடு செய்யவில்லை என்றே தெரிகிறது. குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிப்புக்கு உள்ளானதையும் காண முடிகிறது.அப்படி பாதிப்புக்கு உள்ளானவர்களை ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லவும் முடியாத நிலையில் போக்குவரத்து நெருக்கடியும் இருந்துள்ளது.இவ்வளவு மக்கள் திரளும் போது மக்களை ஒழுங்குபடுத்தவும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முன் ஏற்பாடுகளை தமிழக காவல்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட துறையினர் போர்க்கால அடிப்படையில் முன்ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். அதில் போதிய கவனம் செலுத்தாமல் போனதாலேயே இந்த உயிர் இழப்புகளும் நடந்துள்ளது. அரசின் மூத்த நிர்வாகத்தினர் அனைவரும் வான்படை சாகச நிகழ்வை காணும் ஆர்வத்தில் மட்டுமே இருந்துள்ளனர்.

வேதனை நிகழ்வு

தேவையான அமைச்சர்களையோ, அதிகாரிகளையோ இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்க முடுக்கிவிடவில்லை என்பதை மக்களின் குமுறலில் இருந்தே அறிய முடிகிறது. எந்த அரசு தன்நலன் பேணாது தன் மக்கள் நலனையே பெரிதாக பேணும் அரசோ அந்த அரசே மக்களுக்கான அரசாக விளங்கும். அரசின் கவனக்குறைவால் வான் படை சாகச நிகழ்வு சாதனை நிகழ்வாக மாறாமல் வேதனை நிகழ்வாக மாறிவிட்டது. அரசு இனிவரும் காலங்களிலாவது இது போன்ற நிகழ்வுகளில் விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ரூ.25 லட்சம்

'சென்னையில் சாகச நிகழ்வில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். தன் கடமையில் இருந்து தவறிவிட்ட தமிழக அரசே உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்' என பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

சோகம்!

'வானில் சாகசம், தரையில் சோகம்' என சென்னை மெரினாவில் நடந்த, வான் சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

கவனமா இருங்க!

சமூகவலைதளத்தில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், ' மெரினாவில் ஏற்பட்ட உயிரிழப்பு வேதனையளிக்கிறது. அங்கு அடிப்படை வசதிகள் செய்யவில்லை என்று பொதுமக்கள் வேதனையை வெளிப்படுத்தி உள்ளனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பை திறம்படச் செயல்படுத்துவதில், இனி வரும் காலங்களில் கவனம் செலுத்த வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.

நிர்வாக சீர்கேடு!

சமூகவலைதளத்தில், தே.மு.தி.க., கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள பதிவில், ' மெரினாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் அழைப்பு விடுத்ததை நம்பி மக்களும் வந்துவிட்டனர். இது அரசின் நிர்வாக சீர்கேட்டிற்கான முன்னுதாரணம். தி.மு.க.,வின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஓட்டளித்து அவதிப்பட்டு கொண்டு இருக்கும் மக்கள் தமிழக அரசின் விமான சாகச நிகழ்வை காண வந்தும் ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர். மக்கள் கடும் அவதிக்கு உள்ளாக்கப்பட்டதற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். தமிழக அரசு இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 64 )

s.Raju
அக் 08, 2024 01:42

ஏன் இவர்கள் கட்சி சார்பாக தண்ணீர் பந்தல்கள் ஆங்காங்கே வைத்திருக்கலாமே..இது பொதுசேவைதானே...அரசைமட்டும் குறைசொல்வதை விட்டு நமது பங்களிப்பென்னன்னு யோசிங்கண்ணே... இது ப ம க ..ஐயாக்கும் இ பி எஸ் க்கும் ..பொருந்தும்.. வெறும் தலைவர்கள் பிறந்த நாட்கள் மட்டும் போதாது..


venugopal s
அக் 07, 2024 17:48

இவை எல்லாம் கூட்டணி மாறுவதற்கு முன் தென்படும் அறிகுறிகள், அவ்வளவு தான்!


வாய்மையே வெல்லும்
அக் 09, 2024 00:05

வேணுவிற்கு பிறர் அவியல் செஞ்சா பிடிக்காது இவரோட குருநாதர் ஐ டோன்ட் கேர் ஆசாமி அவிச்ச அவியல் தான் பிடிக்கும் ,.


Yaro Oruvan
அக் 13, 2024 18:15

200 ஒவ்வாயிக்கு முட்டு கொடுக்கும் நம்ம வேணு மாதிரி உப்பிஸ் உள்ளவரை கட்டுமரங்க வாழ்க்கை சுகபோகம்தான்... பரம்பரையா அடிமைகள் அதுல பெருமை hair வேற


aaruthirumalai
அக் 07, 2024 14:43

இதற்காக தண்டனை என்ன?


ஆரூர் ரங்
அக் 07, 2024 13:33

பொறுப்பற்று கிட்டத்தட்ட கொலைக்கு சமமான குற்றத்தை செய்துள்ளது. மாற்றுக் கட்சி அரசாக இருந்தால் திட்டித் தீர்த்திருப்பர். 500 வாங்கி மகாபாவிகளுக்கு ஓட்டுப் போட்ட பாவத்திற்கு மக்கள் அனுபவிக்கின்றனர்.


தமிழன்
அக் 07, 2024 13:26

சென்னை மாவட்ட காவல் ஆணையர் பதவி இறக்கம் மற்றும் பணி இடை நீக்கம் செய்யப்படுவாரா?


Sridhar
அக் 07, 2024 12:57

இதுக்கெல்லாம் கோபம் வரும், ஆனா ரெண்டே நாள்ல ஆறிடும். அப்புறம் இளிச்சிகிட்டு அந்த கையாலாகாத கட்சி அரசுக்கே வோட்டு போடுவாங்க. போன மழைக்காலத்தில் இவனுக அரசு இயந்திரங்கள் மிக கேவலமாக செயல்பட்டதை பார்த்து எல்லோரும் ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டாங்க. அப்புறம் என்ன ஆச்சு? எல்லாமே மக்களின் கவனக்குறைவுதான்


RAMESH
அக் 07, 2024 12:55

அரசு இயந்திரம் தோல்வி... முதல்வர் மற்றும் முக்கிய அதிகாரிகளும் தான் மனிதர்கள்.... மற்ற பொதுமக்கள் உயிர் பற்றி அக்கறை இல்லை...


J.Isaac
அக் 07, 2024 13:02

மக்களுக்கும் விழிப்புணர்வு வேண்டும். சாலைகளில் வாகனங்கள் ஓட்டுவதிலேயே கூட மக்களுக்கு ஒழுக்கம் இல்லையே.


Ganapathy
அக் 07, 2024 12:52

அட போப்பா நீ இன்னா ஏதோ பேசிகினு...இப்படி உபயோகமான பல கவலைகள் கடமைகள் எங்களுக்கு...உனக்கு இதுமாதிரி உருப்படியான கவலை எதுனாச்சும் இருக்கா...


Rajendra Kumar
அக் 07, 2024 12:39

இந்த அறிவு மற்ற விஷயங்களில் மற்றவரை குறைகூறும் போதும் இருக்கவேண்டும். தான் மட்டும்தான் பிணஅரசியல் செய்யலாம் என்று எண்ணக்கூடாது


Krishnamurthy Venkatesan
அக் 07, 2024 12:30

பொதுமக்களின் பகுத்தறிவு எங்கே போனது? பல லட்சம் பார்வையாளர்கள் கூடுவார்கள் என தெரிந்தே குழந்தைகளுடனும் பெண்களுடனும் அங்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன? இன்டர்நெட்டில் எல்லா நிகழ்ச்சிகளும் லைவ் ஆக ஒளிபரப்பு செய்யப்படும்போது நேரில் சென்றதை தவிர்த்திருக்கலாம். சுய புத்தி வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை