உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரே மன உளைச்சல்: திருமாவளவன் உருக்கம்

ஒரே மன உளைச்சல்: திருமாவளவன் உருக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

''கட்சி நிர்வாகிகளால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். வரும் 2026ல் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தல் முடியும் வரை, கட்சி நிர்வாகிகள் யாரும் யு-டியூப் சேனலுக்கு பேட்டி கொடுக்கக்கூடாது,'' என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.இது குறித்து திருமாவளவன் வெளியிட்டு ள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: கட்சி கட்டுப்பாடு என்பது மிக முக்கியமானது. கட்சி வளர்ச்சி அடையும்போது, முன்னணி தலைவர்கள் இடையே முதிர்ச்சி வெளிப்பட வேண்டும். கட்சியில் ஒவ்வொருவரும் கட்டுப்பாடுகளோடு செயல்பட வேண்டும்; அந்த கட்டுப்பாடு, பிறருக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும். ஆனால், முன்னணி பொறுப்பாளர்களே சமூக வலைதளங்களில், இஷ்டத்துக்கும் பதிவிடுகின்றனர். அது கட்சிக்கும், தலைமைக்கும் களங்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால், கடும் மன வேதனையில் இருக்கிறேன். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், கட்சியினரின் செயல்பாடுகள் உள்ளன. கட்சி முன்னணியினரின் செயல்பாடுகளால் காயம் பட்டிருக்கிறேன். கட்சிக்குள், ஒருவருக்கு மற்றொருவர் முரண்பாடுகளுடன் இருக்கலாம். அதற்காக, முரண்பட்ட கருத்துகளையெல்லாம் சமூக வலைதளங்களில் பகிர்வது, கட்சிக்கு நல்லதல்ல. அப்படிப்பட்ட கருத்துகளை இனி, கட்சியினர் யாரும் பதிவு செய்யக்கூடாது. எல்லா விஷயங்களிலும் கட்சியினர் கவனமாக இருக்க வேண்டும். யு - டியூப் சேனலில் பேச அழைக்கின்றனர் என்றதும், சுய விளம்பரத்துக்காக எதைப் பற்றியும் கவலைப்படாமல் போய் விடக்கூடாது. பேச அழைப்பவர்கள், என்ன நோக்கத்திற்காக அழைக்கின்றனர் என பார்க்காமல், வாய்ப்பு கிடைக்கிறதே என்று செல்வதும், அங்கு சென்று இஷ்டத்துக்கு பேசுவதும் கவலைக்குரியது. யார் பேட்டிக்கு அழைத்தாலும், கட்சித் தலைமையின் அனுமதி பெற்றே செல்ல வேண்டும்.என்னை பொறுத்த வரை, வரும் 2026ல் நடக்கவிருக்கும் சட்ட சபைத் தேர்தல் வரை, கட்சி முன்னணியினர், யு - டியூப் சேனல்களுக்கு பேசச் செல்லாமல் இருப்பதோடு பேட்டி கொடுக்காமலும் இருப்பது நல்லது. வாய்ப்பு வந்தாலும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Thiyagarajan S
மார் 31, 2025 17:15

ரொம்ப அடிச்சிட்டானுங்களோ.....


M Ramachandran
மார் 31, 2025 16:45

அப்புறம் எங்களுக்கு என்ன வருமானம் தலைவரெ


M Ramachandran
மார் 31, 2025 16:42

செஞ்சட்டைய்ய காரர்களுக்கு 25 கோடி கருஞ்சட்டைய்ய நம்மக்கு பிசைந்து ஒன்னறை கோடி மட்டுமா? நமக்கு பிளாஸ்டிக் சேர் அவர்களுக்கு குஷன் சேரா? இதனால் படும் மன உளைச்சல்.


vijai hindu
மார் 31, 2025 08:32

பேசாம அரசியல் விட்டு ஒதுங்கி ஊருக்கு போய் சேருங்க பிளாஸ்டிக் சேர் வாழ்க்கை போதும்


Pats, Kongunadu, Bharat, Hindustan
மார் 31, 2025 08:20

அடங்க மறு, அத்து மீறு என்று சொன்ன கூமுட்டை கட்சியில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? செல்வ குவிக்கும் பெருந்தகையால் குருமா ஊசிப்போய்விட்டது.


Padmasridharan
மார் 31, 2025 08:08

புரிஞ்சிகிட்டீங்க, சொல்லிட்டீங்க. செயல்படுத்துங்க. வாய் சண்டை போடும் அரசியல் கட்சிகள் நல்ல செயலில் இறங்கினால் நன்றாகத்தான் இருக்கும். கட்சியை இறக்குறதுல காட்டுற ஆர்வம், நிஜமாவே மக்களின் நன்மைக்காகவா. அப்படி இருப்பின் ஏன் பல துறைகளில், பல குற்றங்களை செய்யத்தூண்டும் மதுக்கடைகள் மூடுவதற்கு வாய்ச்சண்டை போடும் அரசியல் கட்சிகள் ஒன்றாக இணையவில்லை.


Sivagiri
மார் 31, 2025 08:00

ஒரு இனத்துக்கு தலைவன் ஆனால், நல்வழியில் முன்னேற்ற பாதை காட்ட வேண்டும், தீய வழி காட்டுபவன், தானும் அழிந்து, இன துரோகி - குல துரோகி என்று பெயர் எடுக்கிறார்


Ramona
மார் 31, 2025 07:34

கட்சி கூட்டணி இடம் மாற, இது ஒரு ஒத்திகை, இனி தினமும் திகிலூட்டும் பரபரப்பு செய்திகள் கிடைக்கும்.


Mani . V
மார் 31, 2025 07:08

சூரியன் திரைப்படத்தில் கவுண்டமணி ஒரே குஷ்டமப்பா என்று சொல்லும் ஜோக் தான் நினைவுக்கு வருகிறது.


Mani . V
மார் 31, 2025 07:07

நீ கோபாலபுரம் வாழ்நாள் கொத்தடிமையாக இருக்கும் வரையிலும் மன உளைச்சலில் இருந்து தப்பிக்க முடியாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை