உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை மக்கள் தூக்கம் தொலைத்தது அ.தி.மு.க. ஆட்சிக்காலம்: முதல்வர்

சென்னை மக்கள் தூக்கம் தொலைத்தது அ.தி.மு.க. ஆட்சிக்காலம்: முதல்வர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தூங்கி வழிந்த நிர்வாகத்தால் - மனிதத்தவறுகளால் சென்னை மக்கள் தூக்கம் தொலைத்த இரவுகள் அ.தி.மு.க.,ஆட்சிக்காலம் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.பெஞ்சல் புயல் காரணமாக, சென்னையில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. அங்கு மீட்பு பணிகள் நடந்தன.இந்நிலையில், அந்த பகுதிகளை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்களுடனும், அதிகாரிகளுடனும் ஆய்வு செய்தார்.தொடர்ந்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தூங்கி வழிந்த நிர்வாகத்தால் - மனிதத்தவறுகளால் சென்னை மக்கள் தூக்கம் தொலைத்த இரவுகள் அ.தி.மு.க. ஆட்சிக்காலம்! இயற்கைச் சீற்றத்தை எதிர்கொண்டு, ஓரிரவில் இயல்பு நிலைக்குத் திரும்பிடும் காலம், நமது திராவிட மாடல் ஆட்சிக்காலம்!இயல்புநிலை திரும்பிய பகுதிகளைப் பார்வையிட்டபோது, மக்களின் அன்பையும் வாழ்த்துகளையும் பெற்றுக் கொண்டு, விழுப்புரம் - திண்டிவனம் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சீர்செய்யக் களத்தில் பணியாற்றும் துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்களுடன் ஆய்வில் ஈடுபட்டேன். இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

kulandai kannan
டிச 02, 2024 10:11

அப்படியே கொஞ்சம் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகளையும் ஸ்டாலின் படிக்க வேண்டும்.


orange தமிழன்
டிச 02, 2024 10:04

ஓரளவு உண்மை தான் சென்னைய ப் பொறுத்த வரை....எதற்கு எடுத்தாலும் அரசை குறை கூறக்கூடாது....ஆனால் ஒவ்வொரு வருடமும் மக்கள் பாதிப்பு அடையாமல் இருக்க permanent தீர்வு காண வேண்டும்.....


Kasimani Baskaran
டிச 02, 2024 06:27

ஊழல் செய்வதில் நோபல் பரிசு பெற்ற செபா போன்ற சிறப்பான பயிற்சி பெற்ற அதிமுகவினர்களை திம்க்கா அபகரித்த பின்னர் எப்படி அதிமுகவில் திறனாளர்கள் இருப்பார்கள்?


NellaiBaskar
டிச 01, 2024 22:44

உண்மைதான் அப்போது மழைக்காலத்தில் தூக்கம் தொலைத்தோம். இப்போது ஒவ்வொரு இரவும் தூக்கம் தொலைத்துக் கொண்டுதான் இருக்கிறோம். விழித்து எழுந்ததும் எந்த வரி உயரும் என்று.....


lana
டிச 01, 2024 21:46

ஆமா முன்னாடி தூக்கம் மட்டுமே தொலைந்து போனது. இப்பொழுது வாழ்க்கை தொலைந்து போய் விட்டது


Kumar
டிச 01, 2024 20:57

சும்மா அலட்டிக்க கூடாது. அதிமுக ஆட்சி காலத்துல பேஞ்ச மழையில பத்துல ஒரு பங்கு கூட இப்ப இல்ல அடையாறு ஆத்துல 1.50 இலட்சம் கன அடி நீருக்கு மேலாக கரை புரண்டது அப்போது .வேளச்சேரி தாம்பரம் பள்ளிக்கரணை போன்ற இடங்களில் எல்லாம் எவ்வாறு பாதிக்கப்பட்டார்கள் என்பது மக்களுக்கு புரியும்.


N.Balasubramanian
டிச 01, 2024 20:52

Nallar oruvar ularel avar poruttu ellorukkum peiyum mazhai


ManiK
டிச 01, 2024 20:13

புயல், மழை, வரட்சி எல்லாத்துலயும் அரசியல் அவியல் செஞ்சு ஊசி போகவிட்டுட்டார் இந்த ஸ்டாலின். போட்டோ, வீடியோ சூட்டிங் செஞ்சே காலத்தை ஓட்டுகிறார்.


Ramesh Sargam
டிச 01, 2024 20:11

மக்கள் திமுக, அதிமுக ஆட்சிகாலங்களில் தூக்கத்தை தொலைத்து எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டது. மக்கள் நிம்மதியாக தூங்கவேண்டுமென்றால், ஆட்சி மாறவேண்டும். தாமரை மலரவேண்டும்.


jayvee
டிச 01, 2024 19:40

அதிமுக ஆட்சியில் பொது மக்கள் தூக்கம் தொலைத்தது அந்த வெள்ளநேரத்தில் மட்டும்தான்.. ஆனால் இப்போது தினம் தினம் தூக்கத்தை நிம்மதியை செல்வத்தை சந்தோஷத்தை இழந்து தவிக்கிறார்கள் .. இதுதான் உண்மை.. ஆனாலும் திமுகவின் ஓவர் காணபிடென்ஸ் நல்லாத்தானிருக்கு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை