| ADDED : ஜூலை 28, 2025 03:33 AM
திருச்சி: சமூக வலைதளங்களில் 'கோ பேக் மோடி' என பதிவிட்டவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் இரவு துாத்துக்குடிக்கு வந்தார். அங்கு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, இரவு திருச்சி வந்து தங்கினார். நேற்று, அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் நடந்த சோழ மன்னன் ராஜேந்திர சோழனின் ஆடித் திருவாதிரை விழாவில் பங்கேற்றார். இந்நிலையில், பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, 'கோ பேக் மோடி' என்று, சமூக வலைதளங்களில் திருச்சி உறையூர், சவேரியார் கோவில் தெருவைச் சேர்ந்த மணிகண்டன், 42, என்பவர் பதிவிட்டார். இதையடுத்து, உறையூர் போலீசார் அவரை பிடித்து விசாரிக்கின்றனர்.