உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விமான நிலைய ஓடுபாதையில் மின்விளக்கு எரியவில்லை: விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு

விமான நிலைய ஓடுபாதையில் மின்விளக்கு எரியவில்லை: விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: பெங்களூரில் இருந்து திருவனந்தபுரம் சென்ற இண்டிகோ விமானம், திருவனந்தபுரம் ஓடுபாதையில் நடந்த குளறுபடி காரணமாக மதுரைக்கு திருப்பி விடப்பட்டது.இண்டிகோ ஏர்பஸ் விமானம் 172 பயணிகளுடன் பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரத்துக்கு இன்று மாலை சென்றது. இந்த விமானத்தில் மேற்குவங்க கவர்னர் ஆனந்த போஸ் பயணித்தார். விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஓடுபாதையில் தரையிறங்க முயற்சித்தது. அப்போது ஓடுபாதையில் மின் விளக்குகள் எதுவும் எரியவில்லை. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=09l8ot1q&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0விமான நிலைய நிர்வாகிகள், குளறுபடியை சரி செய்ய முயற்சித்தும் முடியவில்லை. வேறு வழியில்லாத நிலையில் விமானம் மதுரை விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. இந்த விமானம் மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரை இறங்கியது. விமான நிலைய ஓடுபாதையில் மின் விளக்குகள் எரியாத விவகாரம் குறித்து சிவில் விமான போக்குவரத்து துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அளகேஷ்
பிப் 17, 2025 16:10

சீன இறக்குமதி பல்பில் பெரிய்ய ஊழல் நடந்திருக்கு.


Raj Kamal
பிப் 17, 2025 11:01

அடிப்படை அறிவு கூட இல்லாத காசிமணி - எல்லா விமான நிலையங்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் யாதொரு தொடர்புமில்லை. ஆகையால், நீ எந்த கஷாயத்தை குடிக்கவேண்டுமென்று நீயே முடிவெடு...


Kasimani Baskaran
பிப் 17, 2025 07:34

அடிப்படை அறிவு கூட இல்லாத உடன்பிறப்புக்கள் தூங்குவதற்கு முன்னர் எதற்கும் மோடி/அமித்ஷா/அதானி/அம்பானி எதிர்ப்பு கசாயம் குடித்து விட்டு தூங்குவது நல்லது.


கவலைக்கண்ணு
பிப் 17, 2025 05:12

விமான நிலையங்கள் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கணுமே... பல்பு வாங்க நிதி ஒதுக்கீடு செய்ங்க ஐயா.


J.V. Iyer
பிப் 17, 2025 04:25

முதலில் பேருந்து நிலையங்களில் பிரச்சினை. பிறகு ரயில்வே நிலையங்களில். இப்போது விமான நிலையங்களில். பணியாளர்களின்மேல் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவர்கள் என்ன சும்மாவா வேலைபார்க்கிறார்கள்?


ஜெய்ஹிந்த்புரம்
பிப் 17, 2025 02:01

இந்த விமானநிலையம் ஒன்றிய ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா பொறுப்பில், அதானி குழுமத்தின் பராமரிப்பில் உள்ள ஒன்று. பல்லாயிரம் கோடி பணத்தை முழுங்கி விட்டு லைட்பல்ப்பை கூட மாற்றாமல் ஏப்பம் விட்டு கொண்டிருக்கிறவன் கையில் பல நூறு உயிர்களை கொடுத்து மோடிஜி வேடிக்கை காட்டுகிறார். எவ்வளவு கோடி லஞ்சம் கைமாறியது என்று சங்கிகள் சொல்வார்களா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை