வாசகர்கள் கருத்துகள் ( 92 )
இவருக்காவது ஒரு தொகுதி தருவாரா இல்லை 234 தொகுதியிலும் விஜய் மட்டும் தானா
செங்கோட்டையன் அரசியல் கோட்டையை விட்டு வெளியேறி கனவுலக கோட்டையில் புகுந்து விட்டார். அரசியல் கனவு பலிக்காது. விஜய் பெரிய கட்சியுடன் கூட்டணி இல்லை என்றால்,, டி . ராஜேந்தர், சரத் குமார், பாக்கிய ராஜ்.. போன்றோர் நிலை தான். பெரிய கட்சிகள் 2, 3 ம் இடம் தான் தரும். ஏற்று கட்சியை வளர்க்க வேண்டும். கோட்டை விட்ட செங்கோட்டையன்?
Mr.Sengottainis senior leader. I am not sure, he is going to join TVK. If he accepts a cine Actor as leader for him, then better to accept as a character less guy and he lost his self respect. Very unfortunate. Then he can not be respectable guy.
செங்கோட்டையன் இடம் மாறுவதன் சூத்திரதாரி தி.மு.க வாக இருக்கலாம். கொங்கு மண்டலத்தில் பலமாக உள்ள அ.தி.மு.கவை பலவீனமாக்க வேண்டும். அதற்கு நேரடியாக தி.மு.கவில் சேர்ந்தால் எம்.எல்.ஏ சீட் , வெயிட்டான கட்சிப் பதவி மற்றும் அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும். வெளியில் பெரிதாக தெரியவில்லையே ஒழிய அ.தி.மு.கவில் இருந்து வந்தவர்களுக்குத்தான் இங்கு பதவி கிடைக்கிறது என தி.மு.கவில் ஏற்கெனவே புகைச்சல் ஆரம்பமாகி விட்டது. தவிர தி.மு.கவில் சேர்ந்து தி.மு.க விற்காக வாக்குகள் செங்கோட்டையன் கேட்டால் அவருக்கு ஆதரவு மன நிலை உள்ள அ.தி.மு.க காரர்களே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் . அதனால் தி.மு.க செங்கோட்டையனிடம் வேறு விதமாக டீலிங் பேசி இருக்கலாம். அவர்களுக்கு தேவை கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க வாக்குகளைப் பிரித்து அ.தி.மு.கவை சென்ற முறை போல் ஜெயிக்க விடமால் செய்ய வேண்டும். செங்கோட்டையன் ஆதரவு அ.தி.மு.க வாக்குகள் பிரிந்து த.வெ.கவிற்கு சென்றால் தி.மு.க எளிதில் வென்று விடலாம்.அதனால் நேரடியாக தி.மு.கவில் இப்போதைக்கு சேர வேண்டாம் . தேர்தல் முடிந்து தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் வேறு விதமாக உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப் படும் என உறுதியான வாக்குறுதிகள் அளிக்கப் பட்டிருக்கலாம். அ.தி.மு .க வில் இருந்து விலகியவர்கள் அல்லது நீக்கப் பட்டவர்கள் அனைவருமே இதுவரை தி.மு.கவில் சேர்ந்துள்ளனர். செங்கோட்டையன் மட்டும்தான் முதன் முதலாக த.வெ.க வில் சேர உள்ளார். நாம் ஒரு ஊருக்கு செல்கிறோம்.நாம் செல்லும் ஊருக்கான நேரடியாக செல்லும் பஸ் நிரம்பி விட்டதென்றால் வேறு ஊருக்கு சுற்றிப் போகும் பஸ்ஸில் ஏறி அந்த ஊருக்கு செல்வோம் இல்லையா அது போலத்தான் செங்கோட்டையன் ஏறப் போகும் பஸ்சும்
திமுக இன்றையதினம் ஒவ்வோர் ஓட்டு வைத்திருப்பவர்களை கட்சியில் சேர்த்துக்கொண்டு அவர்களை வைத்தே பிரச்சாரத்தை துவங்கிவிட்டது. உதாரணம் கருணாஸ். இப்போது அந்த ஆளை வைத்துக்கொண்டே அதிமுகவை தொடர்ந்து விமர்சிக்கின்றது. ஆனால் எடப்பாடியோ கட்சியில் ஒவ்வோர் முன்னோடியையும் விரட்டி விடுகின்ற கோலத்தை என்னென்பது? தன்னை ஒரு எம்ஜி யார் போலவும் அம்மாவை போலவும் நினைத்துக்கொண்டு சகட்டுமேனிக்கு நீக்குவதை பார்க்கும்போது அவர் திமுகவின் பி டீமோ என்றுதான் தோன்றுகின்றது. கொடநாடு வழக்கு தன்மீது பாயாமல் பார்த்துக்கொண்டு ஸ்டாலினுக்கு அவர் மறைமுகமாக உதவுகின்றாரோ என்று சந்தேகம் வருகின்றது. செங்கோட்டையன் ஒரு அனுபவமிக்க அரசியல்வாதி. அவருக்கு பாடம் கற்பிக்க விமர்சிப்போரை பார்த்தல் பாவமாக இருக்கின்ற்து.
திராவிட மாப்பிள்ளையின் விளையாட்டுகள்
செங்கோட்டையனை போன்ற களப்பணியாளர்களை ஒப்பீடு செய்திட இன்றைய சூழலில் ஒருவருமே கிடையாது என்பதுதான் உண்மை. தொகுதியில் ஒவ்வொருவரின் குடும்பத்தினரையும் நன்கு தெரிந்துவைத்திருப்பவர் செங்கோட்டையன். அம்மா ஜெ அவர்களுக்கு தொகுதி பிரச்சார சுற்றுப்பயணத்தை செங்கோட்டையன்தான் ஏற்பாடு செய்வார். அதிமுகவில் ஆரம்பகாலத்து உறுப்பினர் மட்டுமல்ல மந்திரியாக இருந்த நிலையிலும் திமுக இவரை பற்றி ஊழல்களை சொன்னது கிடையாது. திமுகவுக்கு சிம்மசொப்பனம்தான் செங்கோட்டையன். விஜய்க்கு சரியான வழிகாட்டி விஜய்க்கு அரசியல் குருவாக இருக்கப்போகிற நல்ல மனிதர். தான்தான் பெரிய ஆள். எம் ஜி யார் போன்று தன்னை எண்ணிக்கொண்டு எடப்பாடியால் கட்சியின் அழிவுக்கு செங்கோட்டையனை நீக்கினதில் வரலாற்று பிழை செய்தவர் எடப்பாடி. செங்கோட்டையன் தனக்கு பதவி வேண்டும் பணம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை. தொடர்ந்து அதிமுக தோல்வியை தழுவுகின்றதே என்கிற வருத்தத்தில் ஒன்றிணைய வேண்டும் என்கிறார். முன்னாள் துணை முதல்வரை நீக்கி தனது இடத்தை பாதுகாத்துக்கொண்ட பழனிச்சாமியின் செயல்கள் கட்சிக்கு அழிவையே தேடி தந்துவிட்டது என்று உறுதியாக சொல்வேன். அதிமுகவுக்கு இதில் சந்தேகத்துக்கு இடமில்லாமல் பின்னடைவே. தாம் தூம் என்று கட்சியை சிதறிடுக்கும் பழனிச்சாமிக்கு தேர்தல் முடிவுகள் பின்னடைவே. பாஜக கூட தேர்தலுக்கு பின்னர் வருந்தும். நொந்துகொள்ளும் பழனிச்சாமியே காரணம் என்று தெளிவுபட சொல்லும். கோவையில் பாஜகாவுக்கும் சரி அதிமுகவுக்கும் சரி சரிவைக்கொடுக்கும் என்பதிலே மாற்றுக்கருத்தே இல்லை என்பேன். அரவணைத்து அரசியல் செய்யத்தெரியாத பழனிச்சாமியின் செயல்தான் செங்கோட்டையனுக்கு செல்வாக்கினை கொடுக்கப்போகிறது. செங்கோட்டையனின் நல்ல மனதுக்கு எல்லாமே அவருக்கு புகழை கொடுக்கும் என்பதில் சந்தோசம்தான்.
செங்கோட்டையனை திடீரென சந்தித்த அமைச்சர் சேகர்பாபு.. திமுகவா?
அனுபவம் உள்ள சீனியர் அனுபவம் இல்லாத ஜூனியரின் கீழ் பயன்மிக்க வேண்டிய நிர்ப்பந்தம்
விஜய் எல்.கே.ஜி படிச்சா நேரத்தில் இவர் எம்.எல்.ஏ. அவ்வளவு ஜூனியர் விஜய் கிட்டே சரண்டர். கேவலம்
மேலும் செய்திகள்
வாய்க்கு வந்ததை விஜய் பேசுகிறார்: பொன்முடி எம்.எல்.ஏ., கிண்டல்
4 hour(s) ago | 4
இந்தியாவின் ஜி.டி.பி., மதிப்பு ரூ.360 லட்சம் கோடியை தாண்டும்
5 hour(s) ago | 7
கோவையில் நாளை அதிவேக ரயில் சோதனை ஓட்டம்
5 hour(s) ago