உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திண்டுக்கல்லில் சதம் அடித்தது சின்ன வெங்காய விலை!

திண்டுக்கல்லில் சதம் அடித்தது சின்ன வெங்காய விலை!

திண்டுக்கல்: மழை காரணமாக வரத்து குறைந்ததால் திண்டுக்கல் வெங்காய பேட்டையில் சின்ன வெங்காய விலை ரூ.100க்கு உயர்ந்து விற்பனையானது.திண்டுக்கல் சென்னமநாயக்கன்பட்டி அருகே உள்ள வெங்காய பேட்டைக்கு திருப்பூர் ,நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் 300 டன்னுக்கு மேல் சின்ன வெங்காயம் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=50ldi9yz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இங்கிருந்து திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வியாபாரிகள் சில்லறையாக வாங்கிச் சென்று விற்பனை செய்கின்றனர். கடந்த சில நாட்களாக முதல் தர சின்ன வெங்காயம் ரூ.80க்கு, 2ம் தர சின்ன வெங்காயம் ரூ.30க்கு விற்பனையானது. தற்போது மழை காரணமாக வெளி மாவட்டங்களில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரக்கூடிய சின்ன வெங்காயம் வரத்து குறைந்தது. இதனால் நேற்று முதல் ரூ.80க்கு விற்பனையான சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்து, இன்று (டிச.,31) ரூ.100க்கு விற்பனையானது. தேவை அதிகமாக இருப்பதால் வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட சின்ன வெங்காயம் உடனுக்குடன் விற்பனையும் ஆகிவிட்டது. இனிமேல் வரத்து அதிகரித்தால் தான் விலை குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை