உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அர்ச்சனை தட்டில் போடும் காசு அர்ச்சகருக்கு சொந்தமில்லை!

அர்ச்சனை தட்டில் போடும் காசு அர்ச்சகருக்கு சொந்தமில்லை!

சென்னை:'பக்தர்கள் தட்டில் போடும் காசை, அர்ச்சகர் வீட்டுக்கு கொண்டு போக உரிமை கிடையாது. அது, கோவிலுக்கே சொந்தம்' என, அறநிலைய துறை தெரிவித்துள்ளது.பழனி முருகன் கோவில் நிர்வாகத்தின் கீழ், 30க்கும் மேற்பட்ட உப கோவில்கள் உள்ளன. கொடைக்கானல் பூம்பாறையில் உள்ள குழந்தை வேலப்பர் கோவிலும் அதில் ஒன்று. அங்கு அர்ச்சனை தட்டில் பக்தர்கள் வைக்கும் பணத்தை, எடுத்து உண்டியலில் போடும்படி, அர்ச்சகர்களை ஊழியர்கள் நிர்பந்தம் செய்வதாக, நம் நாளிதழில் செய்தி வெளியானது. அதற்கு அறநிலைய துறை விளக்கம் அளித்துள்ளது. அதன் விபரம்: பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவில் அர்ச்சகர் மோகன் நிரந்தர ஊழியர். அவருடைய ஊதியம் 38,907 ரூபாய். சிறப்பூதியம், ஊதிய உயர்வு, விடுப்பு ஒப்படைப்பு பணப்பயன் மற்றும் அனைத்து படிகளும் வழங்கப்படுகின்றன. ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு நிகரான அனைத்து பணப்பயன்களும் அவருக்கு கிடைக்கும்.எனவே, பக்தர்கள் தட்டில் செலுத்தும் காணிக்கைகளை அர்ச்சகர், சொந்த உபயோகத்திற்கு எடுத்துச் செல்வதற்கு உரிமையில்லை. இதனால், கோவில் உண்டி யலில் அந்த காணிக்கைகள் செலுத்தப்படுகின்றன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

visu
நவ 02, 2024 15:08

பல கோவில்களில் ஐயர்கள் தட்டில் விழும் காசை மட்டுமே நம்பி இருக்கிறார்கள் எல்லா கோவில் ஐயருக்கும் அரசு சம்பளம் வழங்கப்படுகிறதா ?


Udhaya Kumar
நவ 01, 2024 09:18

தட்டில் விழும் பணம் அர்ச்சகருக்கு சொந்தமில்லை சரி.உண்டியல்ல போடும் பணம் எப்படி ஆபீசருக்கு இணோவா கார் வாங்க மட்டும் பயன்படும்.


Saravanaperumal Thiruvadi
அக் 31, 2024 21:46

மனசாட்சி உள்ள அர்ச்சகர்கள் அவர்களாகவே உண்டியலில் போட்டு விடுவார்கள்


Subash BV
அக் 31, 2024 19:33

Why this confusion. Leave Temples to devotees to maintain like other religion. Stop tom toming this is a secular nation. Congress d laws to loot only temples without touching other religions. HINDUS UNITE AND WAKE UP. PUT HINDUISM FIRST,


Balaganesan K
அக் 31, 2024 15:39

அந்த அதிகாரி கண்டிப்பாக க்ரிப்டோ-வாக இருப்பார்


R Balasubramanian
அக் 31, 2024 13:29

சில கோவில்களில் அர்ச்சகர்களுக்கு மிக சொற்ப ஊதியம் வழங்கப்படுகிறது. உண்டியலில் பணம் போட்டு ஹிந்து அற நிலயத்துறை எடுத்துக் கொள்கிறது. இன்னோவா கார் வாங்கி அரசு அலுவலர் துறை பயன்படுத்துகிறது. திருப்பதி மாதிரி உண்டியல் கோவில் சார்ந்த பணிகளுக்கு பயன்படுத்தினால் கூட ஏற்கலாம். எப்படியாகினும் தட்டில் அர்ச்சகருக்கு அளிக்கப்படும் காசை பிடுங்குவது முறையற்ற செயல்


M.R. Sampath
அக் 31, 2024 09:33

சரியாகக் கூறியுள்ளீர்கள். ஆரோ ஒரு வேற்றுமை. பக்தர்கள் விரும்பியே கோவில் அர்ச்சகர்களுக்குக் கொடுக்கிறார்கள். அனால் அரசு ஊழியர்கள் கட்டாயப்படுத்தி லஞ்சமாக பெறுகிறார்கள். மறறும் அரசு உண்டியல் பணத்தை சூறையாடுகிறார்கள். இதை தடுக்க என் போன்றவர்கள் அர்ச்சகர் கையிலேயே கொடுத்து விடுவோம்.


mohanamurugan
நவ 01, 2024 22:44

அரசு ஊழியர்கள் லஞ்சம் பெறுவதும் அர்ச்சகர் தட்டு காசு பெறுவதும் வேறு வேறு அல்ல


Jayaraj Reddy
அக் 31, 2024 08:16

முதலில் கோவில்களில் காணிக்கை செலுத்திட தடைவிதிக்க வேண்டும் அப்பாவி மக்களை ஏமாற்றி அறியாமையால் காசு போட்டு இறை நம்பிக்கையை மடைமாற்றி விட்டனர் உண்டியல் நுழைவுச்சீட்டு அர்ச்சகர் தட்டு அனைத்தையும் நீக்கிவிட வேண்டும்


Preabhu
அக் 31, 2024 07:40

தட்டில் போடும் காசும், உண்டியலில் போடும் காசும் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே சொந்தம்


C.SRIRAM
அக் 30, 2024 22:56

அறமாம் . பிச்சைக்காரத்தனமாக நடந்துகொள்ளும் துறை . தட்டில் போட மாட்டோம் . தனியாக கூப்பிட்டு கையில் கொடுத்து விடுவோம் . பக்தர்கள் காணிக்கையில் மூட்டை போடும் அரசு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை