உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின்சாரத்துக்கான வருவாய், செலவு இடைவெளி 45 காசாக குறைந்தது

மின்சாரத்துக்கான வருவாய், செலவு இடைவெளி 45 காசாக குறைந்தது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மின்கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால், 2023 - 24ல், தமிழக மின் வாரியத்தின் ஒரு யூனிட் மின்சாரத்துக்கான சராசரி வருவாய் மற்றும் செலவுக்கான இடைவெளி, 45 காசாக குறைந்துள்ளது.தமிழக மின்வாரியத்துக்கு மின்கட்டணம் வசூல் மற்றும் அரசு மானியம் வாயிலாக வருவாய் கிடைக்கிறது. மின்சாரம், நிலக்கரி, உபகரணங்கள் கொள்முதல், ஊழியர்கள் சம்பளம் போன்றவற்றால் செலவுகள் ஏற்படுகின்றன.வரவை விட செலவு அதிகம் இருப்பதால், தொடர்ந்து இழப்பு ஏற்படுகிறது. இதற்கு, தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதே முக்கிய காரணம். கடந்த இரு ஆண்டுகளாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.மேலும், சொந்த மின் உற்பத்தி அதிகரிப்பு, செலவு குறைப்பு போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.இதனால், 2023 - 24ல் ஒரு யூனிட் மின்சாரத்துக்கான சராசரி வருவாய், செலவுக்கான இடைவெளி, 45 காசாக குறைந்துள்ளது.அந்த ஆண்டில் ஒரு யூனிட் வாயிலாக கிடைத்த சராசரி வருவாய், 10.41 ரூபாயாகவும், செலவு, 10.86 ரூபாயாகவும் இருந்தது.

அதிக வருவாய் பிரிவு எது?

வீடு, தொழிற்சாலை, வணிக நிறுவனங்கள் என, ஒவ்வொரு பிரிவுக்கும், ஒரு யூனிட் மின் பயன்பாட்டிற்கு, தனித்தனி மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதில், 2023 - 24ல் அதிகபட்சமாக, தாழ்வழுத்த வணிகப் பிரிவில் இருந்து சராசரியாக ஒரு யூனிட்டிற்கு, 12.03 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

அதிக வருவாய் பிரிவு எது?

வீடு, தொழிற்சாலை, வணிக நிறுவனங்கள் என, ஒவ்வொரு பிரிவுக்கும், ஒரு யூனிட் மின் பயன்பாட்டிற்கு, தனித்தனி மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதில், 2023 - 24ல் அதிகபட்சமாக, தாழ்வழுத்த வணிகப் பிரிவில் இருந்து சராசரியாக ஒரு யூனிட்டிற்கு, 12.03 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Dharmavaan
ஜன 03, 2025 09:24

ஏன் மினாரிட்டி ஆலயங்களுக்கு எல்லாம் போல மின் கட்டணம் வசூலிக்க கூடாது .மினாரிட்டி சலுகைகளை முற்றிலும் நிறுத்த வேண்டும்


Kasimani Baskaran
ஜன 03, 2025 07:58

இலவச மின்சாரத்தை நிறுத்தினால் மின்சார வாரியம் லாபத்தில் ஓடிவிடும் என்பது கனவு. ஏனென்றால் திராவிட மாடல் ஊழலை நம்பியது. ஊழல் செய்ய புதிய வழிகளை கண்டுபிடிப்பார்கள்.


பாமரன்
ஜன 03, 2025 06:58

ட்ரான்ஸ்மிஷன் லீக்கேஜ் குறைத்தல் மற்றும் தகுதியற்றவர்களை கண்டரிந்து இலவச மின்சார வினியோகத்தை நிறுத்தினால் போதும் .. இப்போதைய மின்கட்டணம். லாபத்தை கொடுக்கும்... அதற்கு முக்கியமாக எல்லா இனைப்புகளுக்கும் மீட்டர் பொறுத்தனும்... அரசியல் வியாதிகளால் யோசிக்க முடியாத விஷயம் இது... பெரு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்க தேவையில்லை... மேலும் வெளிப்படையான கொள்கைகள் மூலம் கொள்முதல் செய்து ஊழலுக்கு வழிவகுக்கும் பெருச்சாளிகளை களையெடுத்தாலே போதும்... இப்போதுள்ள கட்டனத்தையும் குறைக்கலாம்... நான் யாருக்கும் முட்டு குடுக்காம எழுதியதற்கு எந்த பகோடாவாவது இருநூறு லொட்டு லொசுக்குன்னு எம்மேல பாஞ்சு வந்தா... அவிங்க இந்த வருஷம் பூராவும் இதேபோல் ங்ஙெங்ஙெங்ஙேன்னு அலைய சாபம் விடுவேன்... அக்காங்


sundararajan
ஜன 03, 2025 04:55

அடிக்கும் கொள்ளை குறைந்தாலே இலாபம் வரும்.இப்ப உள்ள கட்டணம் மிக அதிகம்.


தாமரை மலர்கிறது
ஜன 03, 2025 01:34

இலவச மின்சாரத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். அல்லது மின்கட்டணத்தை பத்து சதவீதம் உயர்த்துவது நட்டத்தை ஈடுகட்டும். எந்த நிறுவனமும் தொடர்ந்து நஷ்டத்தில் நடத்தமுடியாது.


பாமரன்
ஜன 03, 2025 07:30

தாமரை மலர்கிறது முதல் முறையாக உருப்படியான கருத்து எழுதியதற்கு பாராட்டுக்கள்...


சமீபத்திய செய்தி