உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திறந்து ஓராண்டு மட்டுமே ஆன பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தது; அரசுக்கு அண்ணாமலை கேள்வி

திறந்து ஓராண்டு மட்டுமே ஆன பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தது; அரசுக்கு அண்ணாமலை கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழகத்தில் இதுவரை இடிந்து விழுந்த அரசுப் பள்ளிக் கட்டடங்கள் கட்டிய ஒப்பந்ததாரர்கள் யார், அவர்கள் மீது தி.மு.க., அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பதைப் பொதுமக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்' என்று பா.ஜ., மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கை; கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம், ரூ.64.33 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு, முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக் கட்டடத்தின் மேற்கூரை நேற்று இடிந்து விழுந்திருக்கிறது. நேற்று விடுமுறை தினமானதால், வகுப்பறையில் மாணவர்களோ, ஆசிரியர்களோ இல்லாமல், அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது. தமிழகம் முழுவதுமே, அரசுப் பள்ளிக் கட்டடங்களின் மேற்கூரை இடிந்து விழுவது, தினசரி செய்தி ஆகியிருக்கிறது. பள்ளிக் குழந்தைகளுக்கான கட்டடங்கள் கட்டுவதில் கூட, தி.மு.க., அரசு இத்தனை அலட்சியமாகச் செயல்படுவதைச் சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏழை, எளிய குடும்பப் பின்னணியில் இருந்து, அரசுப் பள்ளிகளில் பயில வரும் குழந்தைகள் உயிர், தி.மு.க. அரசுக்கு அத்தனை இளக்காரமாகப் போய்விட்டதா?https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=i56n7cpv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த நான்கு ஆண்டுகளில், தி.மு.க., அரசு எந்தெந்த மாவட்டங்களில் புதிய பள்ளிக் கட்டடங்கள் கட்டியுள்ளன என்று ஏற்கனவே கேள்வி எழுப்பியிருந்தோம். அதற்கு, ஒவ்வொரு தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கும் கடிதம் எழுதி நாடகமாடியதோடு நிறுத்திக் கொண்டார் உதயநிதி ரசிகர் மன்றத் தலைவரான பள்ளிக் கல்வித் துறை அமைச்சர். விளம்பர ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், இதுவரை இடிந்து விழுந்த பள்ளிக் கட்டடங்கள் கட்டிய ஒப்பந்ததாரர்கள் யார், அவர்கள் மீது தி.மு.க., அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பதைப் பொதுமக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் தி.மு.க., அரசு கட்டிய கட்டடங்கள் அனைத்தையுமே, தர உறுதிப் பரிசோதனைக்கு உள்ளாக்குவது, அனைத்துத் தரப்பு மக்களுக்குமே நல்லது, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

ramani
ஜூலை 22, 2025 06:45

என்ன பேசறீங்க ஓராண்டு நின்றதே சாதனை தானே


chinnamanibalan
ஜூலை 21, 2025 19:36

மன்னர் ராஜ ராஜன் கட்டிய தஞ்சை பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட வெள்ளையர்கள் கட்டிய கட்டிடங்கள், ஏன் காங்கிரஸ் கட்சி ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட அணைகள் , கட்டிடங்கள் கூட, இன்று வரை உறுதியாக நிற்கின்றன. ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் கமிஷன் கருதி, கடனே என்று கட்டிய கட்டிடங்கள் அனைத்தும் சேதமடைந்து விழுகின்றன.


vbs manian
ஜூலை 21, 2025 19:16

அதெல்லாம் ஓ ன்றுமில்லை சார். இரும்பு ஜல்லி மணல் சிமெண்ட் எல்லாம் கூட்டு சேர்ந்து சதி செய்து விட்டன.


என்றும் இந்தியன்
ஜூலை 21, 2025 17:34

365 நாட்கள் உழைத்ததே என்று சொல்லுங்கள் - இப்படிக்கு திராவிட அறிவிலி மடியல் அரசு


சிட்டுக்குருவி
ஜூலை 21, 2025 17:34

இது குழந்தைகளின் உயிருக்கு அச்சுறுத்தலானது என்பதால் கடந்த திமு க ஆட்சியில் கட்டிய பள்ளி கட்டிடங்களை ஈல்லாம் தரக்கட்டுப்பாட்டு ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும் என்று கோர்ட் உத்திரவு வாங்கவேண்டும் .


R.P.Anand
ஜூலை 21, 2025 17:00

ஒப்பந்த காரணுங்க வீடு ஒன்னும் இந்த மாதிரி இடிவதில்லை.


panneer selvam
ஜூலை 21, 2025 16:53

Annamalai ji , the school building contact was given based on recommendation of local party functionaries and their kids do not study at these schools . More over it is just only roof give away not the complete school . Hence it is only a minor issue


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 21, 2025 16:41

குன்றிய நாட்டில் புத்தம்புது கட்டிடங்கள் ஓராண்டு வரை உடையாமல் கரையாமல் நின்றிருக்கின்றன என்பதை பாராட்டாமல் குற்றம்கண்டுபிடிப்பதிலேயே முனைப்பாக இருக்கிறார்.


K.n. Dhasarathan
ஜூலை 21, 2025 16:36

அண்ணாமலை அதே போல மணிப்பூரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்த தினசரி கொலைகள், கொள்ளைகள், பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் ? மணிலா பொய் ஜே பி அரசு கொடுத்த நிவாரணம் ? எத்தனை வழக்குகள் ? தண்டனை பெற்றவர்கள் ? நிலுவையில் இருக்கும் வழக்குகள் எத்தனை ? அரசின் சரியான நடவடிக்கைகள் ? தவறான நடவடிக்கைகள் ? இனிமேல் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் ? பிரதமர், உள்துறை அமைச்சர் எத்தனை முறை வந்தார்கள் ? எப்போது அமைதி திரும்பும் ? எத்தனை முராய் பேச்சு வார்த்தைகள் நடந்தன? இப்போ எந்த அளவில் உள்ளன ? இனிமேல் அமைதி வருமா ? அல்லது சண்டை தொடருமா ? இணைய வழி தொடர்பு ண்டா ?அல்லது துண்டிப்பு தொடர்கிறதா ? ஏதாவது ஒன்றுக்கு பதில் கிடைக்குமா ? அல்லது மணிப்பூரில் ஏதும் சின்ன அன்னமலை பதில் சொல்வாரா ?


அயோக்கிய திருட்டு திராவிடன்
ஜூலை 21, 2025 17:59

அறிவிலிகள் எதற்கெடுத்தாலும் மணிப்பூர் யு பி என்று ஓடுகிறார்கள் தமிழகத்தை பற்றி பேசுங்கள்.


Nagendran,Erode
ஜூலை 21, 2025 18:06

ஏலே கேணப் பயலே நாங்க ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்தது தமிழகத்தில் உள்ள இந்த திருட்டு திராவிடமாடல் திமுக அரசை அதனால இவனுகளைதான் கேள்வி கேட்போம் நீ ஏன்டா உடனே மணிப்பூருக்கு ஓடுற.


Kumar Kumzi
ஜூலை 21, 2025 19:48

உன் வீட்டுல நடக்கிற பிரச்சினையை கேட்ட மணிப்பூருக்கு போற அதுசரி மணிப்பூர் எங்க இருக்குனு தெரியுமா ...


theruvasagan
ஜூலை 21, 2025 22:29

ஓஹோ. இங்க நடக்கிற பாலியல் சம்பவங்களைப் பற்றி வாய் திறக்காமல் உ.பியில் நடந்த சம்பவத்துக்கு மாத்திரம் கவிதாயினி மெழுகுவத்தி ஊர்கோலம் நடத்தின மாதிரி எங்களை மணிப்பூருக்கு போய் போராடுங்கற. அப்ப மணிப்பூர்காரன் இங்க வந்து கேள்வி கேட்டா பதில் சொல்லுவீங்களா.


D.Ambujavalli
ஜூலை 21, 2025 16:31

இப்படிப் பள்ளிக் கட்டிடங்கள் இடிந்து விழுந்து தங்கள் குழந்தைகளுக்கு எதுவும் ஆகிவிடாமல் இருக்க, இனி இவர்கள் உறுதியாகக் கட்டி நடத்தும் தனியார் பள்ளிகளில் கடன், உடன் பட்டாவது சேர்க்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்களோ என்னவோ? அந்த ஒப்பந்தக்காரர் tender தேர்வாவது முதல், bill பணம் கைக்கு வரும் வரை யார் யாருக்கு எவ்வளவு ‘கொடுத்து’ மிஞ்சியதில் கட்டினாரோ, நாலு செங்கல்லும், மணலுக்கு நடுவே கொஞ்சமே கொஞ்சம் சிமெண்ட் கலந்து, bill பணம் வாங்கும் வரை நின்றால் போதுமென்று காட்டியிருப்பார்


சமீபத்திய செய்தி