உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெறுமா?

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெறுமா?

சென்னை: தமிழக பட்ஜெட் மீதான விவாதம் சட்டசபையில் இன்று துவங்குகிறது. சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பிரதான எதிர்க்கட்சி முன்னறிவிப்பு கொடுத்துள்ளது. டாஸ்மாக் விவகாரத்தை எழுப்ப அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன. டாஸ்மாக் சர்ச்சைகள் தமிழகத்துக்கு புதிதல்ல. மது விற்பனையில் நடக்கும் முறைகேடுகள் மக்களுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் தெரிந்த ரகசியம். எனினும், மத்திய அரசின் அமலாக்கத்துறை இதில் ஆய்வுகள் நடத்தி, 1,000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருப்பதாக அறிக்கை வெளியிட்டு உள்ளது.வெறும் வாயை மென்றவர்களுக்கு அவல் கிடைத்த கதையாக, எதிர்க்கட்சிகளுக்கு இந்த அறிக்கை உதவும். இதுவரை அமைதி காத்த அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு களை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்று சொல்லி இருப்பது, அரசு இந்த பிரச்னையை எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பதற்கான முன்னோட்டம். சபாநாயகர் அப்பாவு மீது, அ.தி.மு.க., நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. தி.மு.க.,வுக்கு பெரும்பான்மை இருக்கும் நிலையில், இந்த தீர்மானம் வெற்றி பெற வாய்ப்பு கிடையாது. சபாநாயகரின் பாரபட்சமான அல்லது நியாயமற்ற நடவடிக்கைகளை மக்களின் கவனத்துக்கு கொண்டுவர முடியும் என்பது மட்டுமே, எதிர்க்கட்சிகளுக்கு கிடைக்கக்கூடிய ஆறுதல் பரிசு. அதுவும், சபைக்குறிப்பு என்ற நிபந்தனைக்கு உட்பட்டது.அப்பாவு மீதான தீர்மானம் இன்றே விவாதத்துக்கு அனுமதிக்கப்பட்டு, உடனடியாக ஓட்டெடுப்பும் நடந்து தோற்கடிக்கப்படும் வாய்ப்பு அதிகம். பட்ஜெட் மீதான விவாதம் முடிந்து, 24ம் தேதி முதல், துறை ரீதியான மானிய கோரிக்கை மீது விவாதம் நடக்க உள்ளது. பல மசோதாக்கள் நிறைவேற்றப்படும்.தொகுதி மறுவரையறை உட்பட சில பிரச்னைகளில், மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. எனவே, ஒன்றரை மாதங்களுக்கு சட்டசபையில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

R.PERUMALRAJA
மார் 17, 2025 12:36

ஒவ்வொரு வருடமும் 50 ஆயிரம் கோடிக்கு அதிகமாக விற்பனையாகும் டாஸ்மாக் துறையில், அதே அளவு தொகை டாஸ்மாக் இல் பில் இல்லாமல் விற்கப்படுகிறது, கள்ள சந்தையிலும் புழங்குகிறது. இதை பின்னணியில் இருந்து STRATEGIC PLANNING செய்வது தி மு க வின் ஜெகத் மற்றும் T.R பாலு . 4 வருட தி மு க ஆட்சியில் வருடம் 50 ஆயிரம் கோடி என்று நான்கு வருடத்தில் 2 லட்சம் கோடிக்கு அதிகமாக ஸ்டாலின் குடும்பம் நேரடியாக சம்பாதித்து அதை மீண்டும் சினிமாவில் முதலீடு செய்து மீண்டும் அதை " பல பத்து லட்சம் கோடி " களாக வியாபாரம் செய்து , வெளிநாடுகளில் கடந்த வருடம் realestate இல் முதலீடு செய்திருக்கிறார்கள் . அதில் ஒரு லட்சம் கோடியை 2026 தேர்தலுக்கு வோட்டுக்கு 3000 ரூபாய் விநியோகிக்க பண பட்டுவாடா செய்து வேலு, நேரு, பொன்முடி, சேகர்பாபு, சுப்பிரமணி, கீதா ஜீவன் , அப்பாவு , மூர்த்தி ஆகியோரின் நகைக்கடை அடகு வைக்கும் இடங்களில் கல்லூரி / தொழிச்சாலைகளில் / பண்ணை வீடுகளில் பதுக்கி வைக்க பட்டு இருக்கிறது. டாஸ்மாக் கொள்ளை இப்படி நடந்து கொண்டிருக்க , தி மு க வின் TR பாலு , தனது தொழில் நாடு முழுவதும் பறந்து விரிந்து நடைபெற , சற்று சாணக்யத்தனமாக யோசித்தது, தி மு க மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமானால் ஸ்டாலினை பயமுறுத்துவது தான் சரி என்று நினைத்து , ப ஜா கா விடம் ED யை கொண்டு raid நடத்துங்கள் ஸ்டாலின் பயந்து மறைமுக ஆதரவு தெரிவிப்பார் என்று தனது டெல்லி லாபி மூலம் சிக்னல் கொடுத்து , கூற , முந்திரிக்கை கோட்டை போல முந்திய ED , ஆயிரம் கோடி ருபாய் ஊழல் என்று பெயருக்கு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது , உண்மையான கொள்ளை 1,50,000 கோடி ரூபாய் என்று டாஸ்மாக் இருக்கும் இடங்கெல்லாம் போராட்டம் நடத்தி , கட்சியை வளர்க்க எந்த கட்சியின் தலைமைக்கும் சிந்திக்க முடியவில்லை என்பதே வருத்தம். வாயிற்கு அவள் கிடைத்தால் மட்டும் போதாது , சிறு குறு ஊராட்சியில் உள்ள டாஸ்மாக் முன் போராட்டம் நடத்துவது தான் வாக்கு களாக மாறும் . அதுவும் தேர்தல் நேரத்தில்.


Srprd
மார் 17, 2025 10:20

Edappadi Palsnisamy will indirectly help the Government. Kodanadu.


ஆரூர் ரங்
மார் 17, 2025 09:26

முந்திரி கஷ்டப்பட்டு வாங்குறான். ஆனாலும் நிஜமாகவே நாயகர் நேர்மையின் அடையாளம். எளிமையின் உச்சம்.!


vbs manian
மார் 17, 2025 08:50

முப்பதாயிரம் நாற்பதாயிரம் கோடிக்கே ஒரு சலப்பு அதிர்வு இல்லை. ஆயிரம் கோடி வறண்ட கோடை காற்று.


பிரேம்ஜி
மார் 17, 2025 08:09

ஒன்றும் வெடிக்காது! அரசியல் ஜோசியம் பலித்தது இல்லை! ஆளும் கட்சி, எதிர் கட்சி, பொது ஜனம், பத்திரிகைகள் இவர்கள் யாருமே நாட்டைப் பற்றிய கவலையே இல்லாத ஊழல் பேர்வழிகள் தான்! யாருக்கும் வெட்கம் இல்லை!


Minimole P C
மார் 17, 2025 08:09

EPS will keep stout silence on EDs findings as all along he was also a partner in sprit scandal.


Varadarajan Nagarajan
மார் 17, 2025 07:43

இன்றைய பிரச்சனைகளுக்கு துளியும் சம்பந்தமே இல்லாத, பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஏதாவது ஒரு நிகழ்ச்சி அல்லது அறிவிப்பு, அல்லது மறைந்த எதிர்க்கட்சி தலைவர் பற்றி என ஏதாவது ஒன்றை பேசி எதிர்கட்சிகளை வெளிநடப்பு செய்யவைத்து விடுவார்கள். கடந்தகால நிகழ்ச்சிகள் அப்படித்தான் இருந்துள்ளது


மணி
மார் 17, 2025 06:27

இரண்டே எதிர்கட்சி தான் உண்டு


நிக்கோல்தாம்சன்
மார் 17, 2025 05:35

2026 வரை திமுகவுக்கு மாற்று கிடையாது , அதே போல தமிழர்களை கொன்று போடும் கடற்கரை கூத்தாடியின் திட்டத்த்க்கு மூடுவிழாவும் கிடையாது


புதிய வீடியோ