உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் ஜாலியாக ஜாகிங் சென்ற யு.ஏ.இ அமைச்சர்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் ஜாலியாக ஜாகிங் சென்ற யு.ஏ.இ அமைச்சர்

சென்னை: சென்னை வந்துள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ) பொருளாதார அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மர்ரி, தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் சேர்ந்து சாலையில் ஜாகிங் சென்ற வீடியோ வைரலாகியுள்ளது.சென்னையில் இன்று (ஜூலை 24) 'இன்வெஸ்டோபியா குளோபல் டாக்ஸ்' என்ற மாநாடு நடைபெறுகிறது. இதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ) பொருளாதார அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மர்ரி தலைமையில் அந்நாட்டின் பிரதிநிதிகள் மற்றும் முதலீட்டாளர்கள், இந்தியாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்களில் யு.ஏ.இ அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மர்ரி மற்றும் அந்நாட்டினர் சிலர், சென்னை பெசன்ட் நகரில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் சேர்ந்து காலையில் 'ஜாகிங்' சென்றனர். இந்த வீடியோ வைரலாகியுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=frtw54eb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பின்னர் சாலையோர டீ கடையில் அமர்ந்து, அனைவரும் டீ குடித்தனர். அமைச்சர் உள்ளிட்ட பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்பதற்கு முன்னதாக தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர். ஜாகிங் சென்றது குறித்து அப்துல்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக அமைச்சருடன் ஓட்டப் பயிற்சி மேற்கொண்டது மகிழ்ச்சியான தருணம். யு.ஏ.இ மற்றும் இந்தியா இடையேயான பொருளாதார உறவுகள், மிகப்பெரிய பொருளாதார உறவுகளில் ஒன்று.சென்னையில் இன்று மாநாடு நடக்கிறது. தொழில்துறையில் உள்ள அனைவரையும் அழைக்கிறோம். புதிய பொருளாதாரங்களைப் பற்றி பேச உலகை ஒன்றிணைக்க விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார். இன்று சென்னை மாநாட்டில் பங்கேற்கும் அப்துல்லா, நாளை காலை கேரளாவிற்கு செல்ல உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Barakat Ali
ஜூலை 24, 2024 13:31

ஒரு பெரிய ஆதாயம்ன்னா சிறிய இழப்புக்களை பொருட்படுத்த மாட்டாய்ங்க ....


ganapathy
ஜூலை 24, 2024 13:05

உன்னோட லஞ்ச கமிஷன கேட்டா இவனுங்க எல்லாரும் இப்படியே ஓடியே ஊர் போய் சேந்துருவானுங்க


ganapathy
ஜூலை 24, 2024 13:03

எல்லாமே விளம்பர அலம்பல்தான் இந்த திராவிட களவாணிகழக பயலுக ஆட்சீல...ஆனா கள்கக்குறிச்சி வேங்கைவயல் காவிரி இந்த பேர்களை கேட்டாலே ....


நிக்கோல்தாம்சன்
ஜூலை 24, 2024 11:52

மீண்டும் அந்த உணவினிலேயே போடும் இழி பிறவிகளை விட இந்த அமைச்சர் முதல்வர் ஆக்குவீங்களா அப்போஸ் ?


S R George Fernandaz
ஜூலை 24, 2024 11:45

பெட்ரோல் மற்றும் LPG காஸ் விலை அளவுக்கு இருக்காது என்று நினைக்கிறேன்....


ManiK
ஜூலை 24, 2024 10:40

இப்படி photo, video எடுத்துகிட்டே இருங்க... இது அரசா youtube channelஆ?!!


Apposthalan samlin
ஜூலை 24, 2024 10:31

எளிய அமைச்சர் உடற்பயிற்ச்சி ரெகுலராக செய்வதால் சுறுசுறுப்பாக வேலை செய்பவர்


hari
ஜூலை 24, 2024 11:31

அப்போஸ்தலர் கு... ஒரு 200 dhiram பார்சல்


Ramesh Sargam
ஜூலை 24, 2024 09:44

சமீபத்திய மின் கட்டண உயர்வு அவருக்கு தெரியுமா? தமிழகத்தில் ஒரு தொழில் துவங்கவேண்டுமென்றால் எவ்வளவு லஞ்சம் கொடுக்கவேண்டும் என்று அவருக்கு தெரியுமா?


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை