உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சோழர்களின் வீரம்!

சோழர்களின் வீரம்!

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மேலும் பேசியதாவது:இந்த மூன்று கப்பல்கள் கடற்படையில் இணைவது, நம் நாட்டின் கடல்சார் பாரம்பரியம், கடற்படையின் புகழ்பெற்ற வரலாறு, தற்சார்பு இந்தியா இயக்கம் ஆகியவற்றுக்கு ஒரு குறிப்பிட்ட நாளாகும்.இந்த நிகழ்ச்சி நம் புகழ்பெற்ற பாரம்பரியத்தையும் நம் எதிர்கால விருப்பங்களையும் இணைக்கிறது. நீண்ட துார கடல் பயணங்கள், வர்த்தகம், கடற்படை பாதுகாப்பு, கப்பல் தொழில் ஆகியவற்றில் வளமான வரலாற்றை நம் நாடு கொண்டுள்ளது. இதன் வாயிலாக, உலகின் மிகப்பெரிய கடல்சார் சக்தியாக நம் நாடு உருவெடுத்து வருகிறது.சோழ மன்னர்களின் கடல்சார் வலிமையை வெளிப்படுத்தும் வகையில் ஐ.என்.எஸ்., நீலகிரி கப்பல் அமைந்துள்ளது. அதுபோல, குஜராத்தின் துறைமுகங்கள், நம் நாட்டை மேற்கு ஆசியாவுடன் இணைத்த சகாப்தத்தை நினைவூட்டும் வகையில் ஐ.என்.எஸ்., சூரத் போர்க்கப்பல் அமைந்துள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

சோழர்களின் வீரம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

SAMANIYAN
ஜன 16, 2025 07:52

என்ன சோழர்கள் பற்றிலாம் பேசிருக்காரு அது எப்படி இவரு பேசலாம்..தமிழ் நாட்டில் ஆட்சியை புடிக்க நாடகம் போடுறாங்களா..இப்டிலாம் சம்மந்தமே இல்லாம 4 பேர் கமெண்ட் போடுவாங்களே..யாரேயும் காணோம்..சோழர்கள் மட்டும் அல்ல,தமிழர்கள் பற்றியும்,தமிழ் கலாச்சாரம் பற்றியும் நாடு நாடக சென்று பேசி உலகரிய செய்த ஒரே பிரதமர் இவர் மட்டுமே..திருவள்ளுவரின் சிலையை உலகம் முழுக்க நிறுவ முயற்சிப்பவரும் இவரே..திருக்குறளை பல மொழிகளில் மொழிபெயர்பவரும் இவரே..சொல்லி கொண்டே போகலாம்..யாரும் 100 சதவீதம் நல்லவராக இருக்க முடியாது.. அப்படி இருந்தால் அவர்களை நம்ம மக்கள் வாழவிட மாட்டார்கள்..சிந்தியுங்கள் மக்களே ..


முக்கிய வீடியோ