உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீணை தட்சிணாமூர்த்தி சிலை மீட்கப்பட வேண்டும்: பொன் மாணிக்கவேல் வலியுறுத்தல்!

வீணை தட்சிணாமூர்த்தி சிலை மீட்கப்பட வேண்டும்: பொன் மாணிக்கவேல் வலியுறுத்தல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தென்காசி: அமெரிக்காவில் உள்ள வீணை தட்சிணாமூர்த்தி சிலையை மீட்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு சிலை தடுப்பு போலீஸ் முன்னாள் ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் வலியுறுத்தியுள்ளார்.சிலைக் கடத்தல் வழக்கை விசாரித்து வந்த ஐ.ஜி., பொன் மாணிக்கவேல், கடந்த 2018ம் ஆண்டு ஓய்வுபெற்றார். இவர், 7 ஆண்டுகளில் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகளை இந்தியாவுக்கு மீட்டு கொண்டு வந்தார். பணி ஓய்வு பெற்ற பிறகும், சிலைகளை மீட்கும் முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறார். இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள வீணை தட்சிணாமூர்த்தி சிலையை மீட்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு பொன்மாணிக்கவேல் வலியுறுத்தியுள்ளார். தென்காசி அருகே பாப்பான்குளம் திருவெண்காடர் கோவிலில் இருந்து திருடப்பட்ட இந்த ஐம்பொன் சிலையின் மதிப்பு ரூ.12 கோடியாகும். தற்போது, அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள வீணை தட்சிணாமூர்த்தி சிலையை, ஏலத்தில் இருந்து மீட்டு கொண்டு வர, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

M S RAGHUNATHAN
ஜன 20, 2025 10:57

இந்த ஸ்வாமி திருமேனியை மேதா தக்ஷிணாமூர்த்தி என்று பெரியோர் கூறுவார்கள்.


N.Purushothaman
ஜன 20, 2025 09:56

திருட்டு திராவிடனுங்க என்கிற மானங்கெட்டவனுங்க ஆளும் ஆட்சியில் எங்கும் கொள்ளை ..எதிலும் கொள்ளை ....இந்த ஆட்சிக்கு முட்டு கொடுக்குறவனுங்க பிழைப்பை நினைத்தா எரிச்சலா இருக்கு ...


Kasimani Baskaran
ஜன 20, 2025 07:36

திராவிடத்தின் முக்கிய கோட்பாடே சிலைகள் கடத்தப்படவேண்டியவை என்பதே.


கந்தன்
ஜன 20, 2025 04:19

இந்தாளு வேற அப்பப்ப கிச்சு கிச்சமூட்டிட்டு


V வைகுண்டேஸ்வரன்
ஜன 19, 2025 22:05

யோவ், பொ. மா., உன் மேல இருக்கிற வழக்குகளுக்கு விளக்கம் குடுயா. ரிட்டயர் ஆன பிறகும் அரசாங்க செலவில் சோறு தின்னுகிட்டு இருந்தது போதாது ன்னு, சிலை கடத்தற சிலர் கூட டீலிங் போட்டு மாட்டிகிட்ட தானே?


Duruvesan
ஜன 19, 2025 23:03

பார்றா மூர்கன் கண்டு பிடிப்பை,


Bala
ஜன 20, 2025 00:11

வைகுண்டா மூர்க்கனா நீ ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை