உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜய் ரசிகர்கள் ஓட்டுகளும் எனக்கு தான்: நம்பிக்கையுடன் சொல்கிறார் சீமான்

விஜய் ரசிகர்கள் ஓட்டுகளும் எனக்கு தான்: நம்பிக்கையுடன் சொல்கிறார் சீமான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தேனி: 'விஜய் வருகையால் எங்கள் கட்சி ஓட்டு குறையாது; விஜய் ரசிகர்கள் எனக்குத் தான் ஓட்டுப் போடுவார்கள்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.தேனியில், நிருபர்கள் சந்திப்பில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது: எங்களுக்கு ஒரே நோக்கம் தான். ஓட்டுக்கு காசு கொடுக்காமல் தேர்தலை யாரும் சந்திப்பது இல்லை. கூட்டணி இல்லாமல் யாரும் தனித்து போட்டியிடுவது இல்லை. இதுவரை தி.மு.க., அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டது இல்லை. ஒரே ஒருமுறை 2014ல் ஜெயலலிதா தனித்து போட்டியிட்டார். இந்தியாவில் தொடர்ச்சியாக தனித்து போட்டியிடும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி தான். எங்களுடைய தத்துவம் தனித்துவமானது என்பதால் மற்றவர்களுடன் சமரசம் செய்ய முடியவில்லை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=w0xuwicl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

சமரசம் இல்லை

2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் தனித்து தான் போட்டியிடுவேன். கொள்கையில் சமரசம் இல்லை. காங்கிரஸ் மற்றும் பா.ஜ., மத்தியில் ஆள்வதால், எந்த மாநிலத்திற்கும் உரிமை இருக்காது. எந்த மாநில உரிமைகளையும் பாதுகாக்காது. எந்த மாநில மொழிகளையும் வாழவிடாது. ஒற்றை கட்சி ஆட்சிமுறையை ஒழிக்க வேண்டும். நாட்டில் கூட்டாட்சி இருக்கும் போது தான் நாடு நன்றாக இருந்தது. கூட்டணி வைக்காத மாநிலத்திற்கு என்ன சேவை செய்து இருக்கிறார்கள். 40 சீட் தி.மு.க., வெற்றி பெற்று இருக்கிறது. ஏதும் பயன் இருக்கிறதா? தோற்று போன எல்.முருகனுக்கு இணை அமைச்சர் பதவி கொடுத்துள்ளார்கள். விஜயோ, ரஜினி கட்சி ஆரம்பிக்கும் போது இருந்த சூழ்நிலையிலோ, கமல்ஹாசன், விஜய காந்த் ஆகியோரை எடுத்து கொண்டாலும் சரி, அவர்கள் ரசிகர்களை சந்தித்தார்கள். நான் ரசிகர்களை சந்திக்கவில்லை. எனக்கு ரசிகர்கள் கிடையாது. ரசிகர்களை தொண்டர்கள் ஆக்கவில்லை.

36 லட்சம் ஓட்டுகள்

ஓட்டுக்கு ஒரு ரூபாய் காசு கொடுக்காமல் தனித்து போட்டியிட்டு, 36 லட்சம் ஓட்டுகளை பெற்றேன். இந்திய அரசியல் வரலாற்றில் ஓட்டுக்கு காசு கொடுக்காமல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நாங்கள் தான். கூட்டத்தை வைத்து முடிவு செய்ய கூடாது. ஒரு நடிகர் வந்து ஒரு இடத்திற்கு வரும்போது, மக்கள் அதிகமாக கூடுவார்கள். இது இயல்பு தான். விஜய் ஓட்டு என்னுடைய ஓட்டு அல்ல. விஜய் வருகையால் எங்கள் கட்சி ஓட்டு குறையாது; விஜய் ரசிகர்கள் எனக்குத் தான் ஓட்டுப் போடுவார்கள். இவ்வாறு சீமான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

J.V. Iyer
அக் 30, 2024 04:29

ஐயோ பாவம் இவர். நம்பிக்கைதானே வாழ்க்கை.


R.MURALIKRISHNAN
அக் 29, 2024 20:50

ஒரு அரசியல் கட்சி தலைமை இன்னொரு அரசியல் கட்சி தலைமையை விமர்சனம் பண்ணுகிறது


Ramesh Sargam
அக் 29, 2024 20:49

தெரு நாய்கள் கூட கொஞ்ச நேரம் கத்திவிட்டு தூங்கிவிடும்.


Matt P
அக் 29, 2024 19:55

தோற்று போன எல்.முருகனுக்கு இணை அமைச்சர் பதவி கொடுத்துள்ளார்கள். ...சட்டப்படி தானே கொடுத்திருப்பார்கள். மகனுக்கு துணை மந்திரி பதவி கொடுப்பார்கள். திருட்டு வழக்கில் சிறை சென்றவருக்கு பதவி ...திருட்டு வழக்கில் சிறை சென்றவருக்கு அதுவும் உயர் கல்வி பதவி. அதெல்லாம் உங்க கண்களுக்கு தெரியவில்லையா? ரசிகர்கள் தொண்டர்களாக இருக்க கூடாது என்று எந்த விதியும் இல்லை. எம் ஜி ஆரின் ரசிகர்கள் தானே எம் ஜி ஆரின் தொண்டர்கள் ஆனார்கள். நீங்களும் சினிமா நடிகர் தானே. கதாநாயகனாக நடித்து ரசிகர்கள் கிடைத்து அவர்கள் தொண்டர்கள் ஆகி கட்சியை பலப்படுத்தலாமே. அதுக்கெல்லாம் தனி மூஞ்சி வேணும்.


Matt P
அக் 29, 2024 19:38

ஒரு குடும்பத்துக்கே திருட வாய்ப்பு கொடுத்தா எப்படி? எனக்கும் புள்ளை குட்டி இருங்குங்க. அதனால் மக்கள் பார்த்து செய்வாங்க என்ற நம்பிக்கை தான்.


Anantharaman Srinivasan
அக் 29, 2024 19:19

சும்மா புலம்பாதே சீமா. உங்க கட்சிகாரர்களே உங்களை குற்றம் சொல்லி விலகிக்கொண்டிருக்கிறார்கள்..


தாமரை மலர்கிறது
அக் 29, 2024 19:12

சீமான் வசூல் பண்ணிதான் பழக்கம். பணம் கொடுத்தது ஒருபோதும் கிடையாது. சீமான் கட்சியில் சீமான் மட்டும் தான். மற்றவர்கள் உண்டியல் குலுக்கிகள் அதனால் இந்த அடிமைகள் சீமான் கட்சியிலிருந்து ஜோசெப் விஜய் கட்சியின் அடிமைகளாக தாவ போகிறார்கள். அடிமைகளுக்கு ஏதாவது பொறுப்பு கிடைத்து, அதன் மூலம் வசூல் செய்து தங்களை வளர்க்க ஆசைப்படுகிறார்கள். விசில் அடிச்சான் குஞ்சுகளுக்கு கொள்கையும் கிடையாது. ஒரு புண்ணாக்கும் கிடையாது.


Selvarajan Gopalakrishnan
அக் 29, 2024 18:31

இங்க சீமானுக்கு எதிராக கமெண்ட் போடுற எல்லாரும் சங்கிகள் மட்டுமே.


Apposthalan samlin
அக் 29, 2024 17:38

இவர் ஒரு இலவு காத்த கிளி


Easwar Kamal
அக் 29, 2024 17:12

நோகாம நொங்கு sapadianumna நம்ம சீமானைத்தான் கேக்கணும். அவனவன் கோடியை கொட்டி கூட்டம் நடத்தினால் அந்த கூட்டம் எல்லாம் இந்த சீமானுக்கு. முதலில் இருக்கிற ஆட்களை தக்க வச்சுக்கோ அப்புறம் பேசலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை