உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காவலாளியை கட்டிப்போட்டு டாஸ்மாக் மது பாட்டில் திருட்டு

காவலாளியை கட்டிப்போட்டு டாஸ்மாக் மது பாட்டில் திருட்டு

பெரம்பலுார் : அரியலுார் அருகே காவலாளியை கட்டிப்போட்டு 1.93 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபான பாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.அரியலுார் மாவட்டம் கல்லுார் கிராமத்தில் டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. விற்பனையை முடித்து விட்டு சேல்ஸ்மேன் அழகேசன் மற்றும் சத்தியமூர்த்தி நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி சென்றனர்.அப்துல் ரத்தீப் கடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். நள்ளிரவில் குல்லா அணிந்து வந்த மர்ம நபர்கள் காவலாளி அப்துல் ரத்தீப் வாயில் துணி வைத்து அழுத்தி கை கால்களை கட்டிப் போட்டனர்.தொடர்ந்து கடையில் இருந்த 1.93 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபான பாட்டில்களை திருடிச் சென்றனர். கடையில் மது விற்று கல்லாவில் இருந்த 2.40 லட்சம் ரூபாய் திருட்டு போகாமல் தப்பியது. கீழப்பழுவூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை