ஜாபர் சாதிக் மீதான திருட்டு வி.சி.டி., வழக்கு தள்ளுபடி
சென்னை:சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் ஜாபர் சாதிக், 37; தி.மு.க., முன்னாள் நிர்வாகி, திரைப்பட தயாரிப்பாளர். போதை பொருள் கடத்தல் மன்னனான இவர் மீது, போதைப்பொருள் கடத்தல் வழக்கு, சட்டவிரோத பண மரிமாற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஜாபர் சாதிக் மீது, 2010ம் ஆண்டு தொடரப்பட்ட திருட்டு வி.சி.டி., விற்ற வழக்கு, பூந்தமல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் இரண்டாவது நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு நேற்று முன்தினம், மாஜிஸ்திரேட் ராஜேஸ் ராஜு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், குற்றம் சாட்டப்பட்டவர் மீது போதிய ஆதாரங்கள் நிருபிக்கப்படாததால், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.