உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேனி இரட்டை கொலை வழக்கு; குற்றவாளியின் துாக்கு ரத்து

தேனி இரட்டை கொலை வழக்கு; குற்றவாளியின் துாக்கு ரத்து

தேனி இரட்டை கொலை வழக்கில், குற்றறம் சாட்டப்பட்டவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.தேனி மாவட்டம் கம்பம் அருகே பிரபல சுற்றுலா தலமான சுருளி அருவி உள்ளது. இதன் அருகே, 2011ல், காதலர்களான கஸ்துாரி, எழில் முதல்வன் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டை கொலை சம்பவம் தமிழகம் முழுதும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

கைது செய்தனர்

இந்த வழக்கை விசாரித்த போலீசார், கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்த திவாகர் என்ற கட்டவெள்ளையை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், காதலர்கள் இருவரும் காட்டுக்குள் தனிமையில் இருந்த போது கட்டவெள்ளை, அவர்களை மிரட்டி பணம் பறித்ததும், பின்னர் கஸ்துாரியை பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டதும், அதை தடுக்க முயன்ற எழில் முதல்வனை அரிவாளால் வெட்டி கொலை செய்ததும் தெரியவந்தது.கஸ்துாரியை பாலியல் வன்கொடுமை செய்து, பின், அவரையும் சரமாரியாக வெட்டி கொன்று விட்டு கட்டவெள்ளை தப்பி ஓடியதும் தெரியவந்தது. எட்டு ஆண்டுகளாக தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வந்த நிலையில், கட்டவெள்ளையை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், அவருக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை, ஆயுள் தண்டனை மற்றும் துாக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.இந்த தீர்ப்புக்கு எதிராக கட்டவெள்ளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், 2019ல், துாக்கு தண்டனையை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கட்டவெள்ளை மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த ஆறு ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதிகள் விக்ரம் நாத், சஞ்சய் கரோல், சந்திப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, 77 பக்கங்களை கொண்ட தீர்ப்பை வழங்கியது.இதில், திவாகர் என்ற கட்டவெள்ளையை இந்த வழக்கிலிருந்து முழுமையாக விடுவிப்பதாகவும், அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்வதாகவும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

நிரூபிக்கவில்லை

தீர்ப்பில் நீதிபதிகள் மேலும் குறிப்பிட்டுஉள்ளதாவது: இந்த கொலை விவகாரத்தில் கண்ணால் பார்த்த நேரடி சாட்சிகள் எதுவும் இல்லாத சூழலில், மற்ற சாட்சிகளின் உண்மை தன்மையை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க விசாரணை அமைப்பு தவறிவிட்டது.மேலும், கொலை செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து இருந்து எடுக்கப்பட்ட விந்தணுவும், குற்றவாளி என சொல்லப்பட்ட நபரிடமிருந்து சேகரிக்கப்பட்ட விந்தணுவும் பரிசோதிக்கப்பட்டதில் முரண்பாடு இருப்பதை பார்க்க முடிகிறது. இவ்வாறு நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். - டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

VSMani
ஜூலை 23, 2025 17:56

மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஒரு தீர்ப்பு கொடுக்கிறது, சென்னை உயர் நீதிமன்றம் அதை ஆமோதிக்கிறது ஆனால் உச்ச நீதிமன்றம் மற்ற நீதிமன்றங்கள் கொடுத்த தீர்ப்பு தவறு என்கிறது. என்ன சட்டத்தை கடைபிடிக்கிறார்கள்? ஒவ்வொரு நீதிமன்றத்திற்கும் வெவ்வேறு சட்ட புத்தகங்களா? உச்ச நீதிமன்றம் தீர்ப்புதான் இறுதி என்கிறபோது கீழுள்ள இரண்டு நீதிமன்றங்கள் எதற்கு? நேரம் பணம் வீண். அந்த இரட்டைக்கொலையை செய்தது யார்?


Rani
ஜூலை 16, 2025 11:28

சந்தேகத்திற்கு இடமில்லாமல நிருபிக்கபடாத பட்சத்தில் எப்படி மரண தண்டனை கொடுத்தது உயர் நீதிமன்றம். அவன் இந்த குற்றத்தை செய்யவில்லை என்றால் இவ்வளவு காலம் நீங்கள் ஏன் சித்திரவதை செய்தீர்கள். அவன் ஒரு நிரபராதி என்றால் அவன் பட்ட துண்பங்களுக்கு அரசு பதில் என்ன. அவனுக்கு என்ன நிவாரணம் கொடுக்கப்பட்டது. குற்றம் செய்யாதவனை குற்றவாளியாக்கிய காவல் துறைக்கு என்ன தண்டனை. உயர் நீதிமன்றம் நிருபிக்கபடாத குற்றதிற்கு தண்டனை குடுத்தது எப்படி (அதிகபட்ச தண்டனை). உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லையா.


அப்பாவி
ஜூலை 16, 2025 06:34

கட்டவெள்ளையே ஒத்துக்கிட்டாலும் சாட்சியம்.பத்தலைன்னு விடுதலை செஞ்சுருவாங்க. ஏதோ நேரில் நின்னு பாத்த மாதிரி தீர்ப்பு இருக்கு. கீழமை நீதிமன்றங்களுக்கு அறிவு பத்தாது.


SANKAR
ஜூலை 16, 2025 09:21

genetic test absolves katta vellai.so he can not be punished.


Padmasridharan
ஜூலை 16, 2025 05:58

இதே குற்றங்களைத்தான் காக்கிச்சட்டை போட்ட காவலர்கள் கடற்கரை போன்ற பொது இடங்களில் மொபைலை புடுங்குவதும், தொட்டு பார்த்தாலும், அசிங்கமாக பேசுவதும், வண்டியில் கூட்டி உலாவுவதும், பணத்தை அதிகார பிச்சை கேட்பதும் நடத்துகின்றனர்.


புதிய வீடியோ