உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புத்துணர்வு முகாமிற்கு தெய்வானை யானையை அனுப்பும் திட்டம் தற்போது இல்லை

புத்துணர்வு முகாமிற்கு தெய்வானை யானையை அனுப்பும் திட்டம் தற்போது இல்லை

துாத்துக்குடி: திருச்செந்துார் சுப்பிரமணியன் சுவாமி கோவிலுக்கு சொந்தமான, தெய்வானை யானை தாக்கியதில், திருச்செந்துாரை சேர்ந்த பாகன் உதயகுமார், 46, அவரது உறவினரான களியக்காவிளையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சிசுபாலன், 54, ஆகியோர் நேற்று முன்தினம் உயிரிழந்தனர்.யானை முன் நின்று நீண்ட நேரமாக செல்பி எடுத்ததால், ஆக்ரோஷமடைந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, 'இயற்கைக்கு மாறான மரணம்' என, திருச்செந்துார் கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.கால்நடை பாராமரிப்புத் துறை உதவி இயக்குநர் செல்வகுமார் யானையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருச்சி, முதுமலை, டாப்ஸ்லிப் ஆகிய பகுதிகளில் உள்ள யானைகள் மறுவாழ்வு மற்றும் புத்துணர்வு பயிற்சி மையத்திற்கு அனுப்புவது குறித்து கோவில் நிர்வாகமும், வனத்துறையும் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

தவிக்கும் யானை

மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன் கூறுகையில், “யானையை புத்துணர்வு முகாமிற்கு அழைத்து செல்வதற்காக எந்த திட்டமும் தற்போது வரை இல்லை,” என்றார். இருவரை கொன்ற யானை, கடந்த இரண்டு நாட்களாக சோகத்தில் தவிக்கிறது.

தடை

நெல்லை காந்திமதி அம்மன் கோவில் வடக்கு பிரகாரத்தில் நிறுத்தப்பட்டுள்ள காந்திமதி, 55, யானைக்கு அருகில் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோல, பக்தர்களிடம் நேரடியாக தேங்காய், பழங்கள் உணவுப் பொருட்கள் வாங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

படம் எடுத்தது தான் காரணமா?

அதிகாரிகள் சிலர் கூறியதாவது:வழக்கமாக, வெளியே நடமாடும் யானையை விட, அறைக்குள் அடைபட்டிருக்கும் யானை ஆக்ரோஷமாகத் தான் இருக்கும். கவனமாக அதன் அருகில் செல்ல வேண்டும். பாகன் உதயகுமாரும், சிசுபாலனும் யானை அடைக்கப்பட்டிருந்த மண்டபத்தில், 30 நிமிடம் இருந்தனர். நீண்ட நாட்களுக்கு பின் தெய்வானை யானையை பார்த்த சிசுபாலன், ஆர்வமாக தன் மொபைல் போனில் போட்டோ எடுத்துள்ளார். அங்கிருந்து கிளம்ப முடிவு செய்த அவர், யானையின் துதிக்கையை பிடித்து முத்தமிட முயன்றார். அப்போது திடீரென ஆக்ரோஷமான யானை, அவரை துதிக்கையால் சுற்றி வளைத்து பிடித்து நெரித்தது.பின்னால், நின்று கொண்டிருந்த பாகன் உதயகுமார், உடனே, சிசுபாலனை காப்பாற்றும் வகையில் யானையின் மீது ஏற முயன்றார். ஆனால், தவறி கீழே விழுந்து விட்டார். அவரை யானை காலால் மிதித்தது. அவர் மயக்கமடைந்த நிலையில், சிசுபாலனை சுவற்றை நோக்கி வீசியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.பாகன் உதயகுமார் யானையின் பின் பகுதியில் நின்றிருந்ததால், அவரை யானை சரியாக கவனிக்காமல் இருந்து இருக்கலாம். அதனால் தான், அவர் திடீரென ஏற முயன்ற போது, ஏற விடாமல் செய்ததில், அவர் விழுந்து விட்டார்.எனினும், மொபைல் போனில் போட்டோ எடுத்ததே யானை ஆக்ரோஷமாகி தாக்குதவற்கு காரணமாக அமைந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ஜெகதீஸ்வரன் தண்டபானி
நவ 20, 2024 13:49

ஓம் முருகா. யானையை வைத்து அனைத்து கோவில்களிலும் பக்தர்களிடம் வசூல் நடக்கிறது இதை முதலில் தடை செய்ய வேண்டும். எல்லாம் வல்ல முருகன் நம்மையம் யானைகளையும் வழி நடத்தட்டும்.


cpraghavvendran
நவ 20, 2024 10:46

கந்த ஷஷ்டி விழாவின் தொடர்ச்சியாக யானையை பல மணி நேரம் ஓய்வில்லாமல் நிற்க வைத்தது வேலை வாங்கிய வெறுப்பு யானையை இது போன்று நடந்துகொள்ள செய்திருக்களாம்


sankar
நவ 20, 2024 14:32

தம்பி ரொம்ப விவரம் - சஷ்டி திருவிழாவில் யானை வெளியேவே வராது - விவரம் இல்லாமல் உலர வேண்டாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை