உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜயை சந்தித்ததால் தி.மு.க., கூட்டணியில் குழப்பம் இல்லை: பிரவீன் சக்கரவர்த்தி

விஜயை சந்தித்ததால் தி.மு.க., கூட்டணியில் குழப்பம் இல்லை: பிரவீன் சக்கரவர்த்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: “த.வெ.க., தலைவர் விஜயை சந்தித்ததில் எந்த தவறும் இல்லை; தி.மு.க., கூட்டணியிலும் குழப்பம் இல்லை,” என, காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.தி.மு.க.,வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச, காங்கிரசில் ஐவர் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அக்குழுவினரும், சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, தொகுதி பங்கீடு குறித்து பேசியுள்ளனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி, த.வெ.க., தலைவர் விஜயை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, காங்கிரஸ் விரும்பும் 135 தொகுதிகள் பட்டியலை கொடுத்து, 75 சீட் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்த சந்திப்பு, தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க.,வுடன் குழு அமைத்து தொகுதி பங்கீடு குறித்து பேசத் துவங்கி இருக்கும் நிலையில், தி.மு.க.,வுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கும் விஜயை பிரவீன் சக்கரவர்த்தி எப்படி சந்திக்கலாம் என, காங்கிரசில் இருக்கும் தி.மு.க., ஆதரவு தலைவர்கள் கொந்தளித்தனர்.பிரவீன் சக்கரவர்த்தி மீது கட்சி விரோத நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குரல் எழுப்பி, அதை வலியுறுத்தி கட்சித் தலைமைக்கு கடிதமும் எழுதினர். இதையடுத்து, பிரவீன் சக்கரவர்த்தி நெருக்கடிக்கு ஆளாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக அவர், ஆங்கில இணையதள ஊடகம் ஒன்றுக்கு, அளித்த பேட்டி:எல்லா சந்திப்புகளுக்கும் பின்னணியில், ஒரு அரசியல் திட்டம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.இட்லி, வடை, தோசை சாப்பிடுவது போன்ற சாதாரண சந்திப்பாகவோ அல்லது திரைப்படங்கள் குறித்து பேசுவதற்கான சந்திப்பாகவோ கூட, விஜயை நான் சந்தித்திருக்கலாம். விஜயை சந்தித்ததில் எந்த தவறும் எனக்குத் தெரியவில்லை. அதேநேரம், த.வெ.க.,வில் இணையும் எண்ணமும் எனக்கு இல்லை. விஜயை சந்தித்ததால், தி.மு.க., கூட்டணியில் எந்தக் குழப்பமும் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

காங்., மேலிடத்திற்கு தி.மு.க., நெருக்கடி

காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கவர்த்தி, விஜயை சந்தித்துப் பேசினார். அதேபோல, விஜயின் தந்தையும் சினிமா இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரை, காங்கிரஸ் பிரமுகர் திருச்சி வேலுசாமி இரண்டு முறை சந்தித்து பேசி உள்ளார். 'இப்படி நடக்கிற சந்திப்புகள், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியை பாதிக்கும்; அதனால், அவற்றை தடுத்து நிறுத்த வேண்டும்' என்று, தி.மு.க., தரப்பிலிருந்து காங்கிரஸ் மேலிட தலைவர்களுக்கு நெருக்கடி தரப்பட்டுள்ளது. இதற்கிடையில், 'தி.மு.க.,வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்தி வரும் நிலையில், பிரவீன் சக்கரவர்த்தி, நடிகர் விஜயை சந்தித்தது தவறு. 'கூட்டணிக்குள் சிக்கலை ஏற் படுத்தும் இந்த செயலை அடுத்து, பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக காங்., முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர், காங்., தலைமையை வலியுறுத்தி உள்ளனர். அதைத் தொடர்ந்தே, பிரவீன் சக்கரவர்த்தி அவசரமாக விளக்கம் அளித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

பாலாஜி
டிச 10, 2025 07:43

அரசியல் அரிச்சுவடி பாடம் தெரியாத ஜோசப் விஜயை தமிழக காங்கிரஸ் தலைவருக்கு தெரியாமல் சந்தித்து பேசிய காங்கிரஸ் தலைமையக ஆலோசகர் பிரவீனை காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்காதது ஏன்?


பேசும் தமிழன்
டிச 10, 2025 07:43

நடிகர் விஜய் அவர்களை பார்க்க சொன்னதே இத்தாலி பப்பு தான்..... இந்த லட்சணத்தில் அவர் மீதே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொன்னால் எப்படி ???


vaiko
டிச 10, 2025 07:40

குழப்பம் இல்லை என்று இவன் சொன்னால் யாரவது நம்புவார்களா


மேலும் செய்திகள்





புதிய வீடியோ