உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாய் கடிக்கும், பாம்பு கடிக்கும் கிராமங்களில் பயமில்லை

நாய் கடிக்கும், பாம்பு கடிக்கும் கிராமங்களில் பயமில்லை

சென்னை: ''நாய் கடிக்கும், பாம்பு கடிக்கும் கிராமங்களில் பயமில்லை என்ற வகையில், மருத்துவ கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு உள்ளது,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:

காங்கிரஸ் - செல்வப்பெருந்தகை: மருத்துவத் துறையில் இந்தியாவின் தலைமையிடமாக தமிழகம் விளங்குகிறது. ஆனால், எங்கு பார்த்தாலும் சொறிநாய், வெறிநாய் கடிக்கின்றன. இதற்கு, அனைத்து மருத்துவமனைகளிலும் மருந்துகள் இருப்பு இருக்கிறதா? நாய் கடித்தால் எத்தனை மணி நேரத்திற்குள் மருந்தை உட்கொள்ள வேண்டும்.அமைச்சர் சுப்பிரமணியன்: ஆரம்ப சுகாதார மையங்கள் கிராமங்களில் அமைந்துள்ளன. அவற்றில் நாய் கடிக்கு மருந்துகள் இல்லாத நிலை இருந்தது. தி.மு.க., அரசு அமைந்ததும், முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, ஏ.எஸ்.வி., என்ற பாம்புக்கடி மருந்தும், ஏ.ஆர்.வி., என்ற நாய்க்கடி மருந்தும், 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இரண்டரை ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டுள்ளன. எனவே, நாய் கடிக்கும், பாம்பு கடிக்கும் கிராமங்களில் பயமில்லை என்ற வகையில் மருத்துவ கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு உள்ளது. வி.சி., - சிந்தனை செல்வன்: இரவில் பெண் டாக்டர்கள் பணிபுரிகின்றனர். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, இரவு காவலர்கள் நியமிக்கப்படுவரா?அமைச்சர் சுப்பிரமணியன்: ஆரம்ப சுகாதார நிலையங்களில் காவலர் பணியிடங்கள் இல்லை. எதிர்காலத்தில் அதை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவமனைகளில் துாய்மை, காவல், நிர்வாகம் போன்ற பணிகளை நிரந்தரமற்ற பணியாளர்கள் செய்கின்றனர். ஆரம்ப சுகாதார நிலையங்களின் பாதுகாப்பை பலப்படுத்த, கண்காணிப்பு கேமரா வசதி செய்யப்பட்டு, சென்னையில் இருந்து கண்காணிக்கப்படுகிறது. எனவே, ஆரம்ப சுகாதார நிலையங்கள் பாதுகாப்பான கட்டமைப்புடன் செயல்படுகின்றன.இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Pollachi tamilan
மார் 22, 2025 16:06

இப்ப என்ன சொல்ல வாராரு. ஆனால் கிராம புரத்தில் இதற்கான மருத்துவ சேவை நிச்சயம் இல்லை இது தான் தமிழ்நாடு நிலவரம். இதற்கான மருந்துகள் தலைமை மருத்துவ மனைகளில் தான் கிடைக்கின்றன. பொய் சொல்றதில் கூட இவங்களை அடிச்சிச்சிக முடியாடுற சாமி.


Matt P
மார் 22, 2025 13:02

இனிமேல் நாய் பாம்பை கண்டால் கொஞ்சி விளையாடுங்க. பயப்படவேண்டாம். கடித்தாலும் காப்பஆத் திஇருவங்க மருந்து தயாராயிருப்பதால். சுப்பிரமணி சொல்லிட்டாரு.


sridhar
மார் 22, 2025 08:24

இந்த தடுப்பூசிகள் எப்போதும் குளிர்பதனத்திலேயே இருக்கவேண்டும். மின்வெட்டு போன்ற காரணங்களால் வெட்பம் ஏறிவிட்டால் மீண்டும் உபயோகப்படாது . அதற்கு என்ன ஏற்பாடு .


Kasimani Baskaran
மார் 22, 2025 07:54

நாய் மனிதனை சார்ந்து வாழும் ஒரு விலங்கு. அதை ஊர் சுற்றாவிட்டால் வெறி பிடிக்க வாய்ப்பு உண்டு. தெரு நாய்களை கொன்று விடுவதுதான் சிறந்தது.


naranam
மார் 22, 2025 07:27

திமுக கடிக்கு தான் மக்களுக்கு பயம்.


நிக்கோல்தாம்சன்
மார் 22, 2025 06:23

நாய் கடிக்கும், பாம்பு கடிக்கும் கிராமங்களில் பயமில்லை ஆனால் பாலியல் ஞானசேகருக்கும் , பங்களாதேஷி மர்ம ஞாபகர்களுக்கும் தான் சாரு பயப்படுவாரு


நிக்கோல்தாம்சன்
மார் 23, 2025 08:57

அந்த கட்சியின் கொடியை கட்டியவர்களுக்கும் பயப்பட வேண்டும்


Mani . V
மார் 22, 2025 05:17

நாய் கடிக்கும், பாம்பு கடிக்கும், திமுக வினர் கொள்ளையடிப்பர். கிராமங்களில் பயமில்லை.


Appa V
மார் 22, 2025 04:11

சென்னை தெருக்களிலும் சந்துகளில் நாய்தொல்லை அதிகம் ..அதைவிட நாய் கழிவது இன்னமும் சுகாதார கேடு


dhamo tester
மார் 29, 2025 20:13

ஆறு அறிவு உள்ள மனிதர்கள் செய்யும் அசிங்கங்களை விட ஐந்தறிவு உள்ள விலங்குகள் பரவாயில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை