உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உண்மை தன்மை சான்றுக்கு இனி கட்டணம் இல்லை

உண்மை தன்மை சான்றுக்கு இனி கட்டணம் இல்லை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: 'பட்டப்படிப்பு சான்றிதழ்கள் குறித்த உண்மை தன்மை சான்று வழங்க, பல்கலைகள், உயர்கல்வி நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்கக் கூடாது' என, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.பட்டப்படிப்பு முடித்தவர்கள், அரசு பணிகளில் நியமிக்கப்படும் போது, அவர்களின் கல்வி தகுதிக்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். அக்கல்வி சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்து அறிய அரசு ஏற்பாடு செய்யும். இதற்காக, அச்சான்றை வழங்கிய பல்கலைகள், உயர்கல்வி நிறுவனங்களுக்கு அதை அனுப்பி, அதன் உண்மை தன்மை குறித்த அறிக்கை பெறுவர். இதற்காக, 1,000 ரூபாய் முதல் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த வேண்டும். இந்நிலையில், உண்மை தன்மை சான்று வழங்க பல்கலைகள், கல்வி நிறுவனங்கள் கட்டணம் பெறக்கூடாது என, யு.ஜி.சி., செயலர் மணீஷ் ஜோசி உத்தரவிட்டுள்ளார்.அதில், 'உயர் கல்வி நிறுவனங்கள் விருப்பப்படி, 'அசிஸ்டென்ட் செக் ஷன் ஆபீசர், ஸ்டாப் செலக் ஷன் கமிஷன்' பணிகளுக்கு, இந்த நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளார். இந்நடவடிக்கையை, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வரவேற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Suppan
நவ 04, 2024 16:17

எல்லா சான்றிதழ்களையும் பல்கலையின் போர்ட்டலில் பதிவேற்றினால் பல்கலையின் வேலை சுளுவாகுமே . இந்த டிஜிட்டல் யுகத்தில் இது சுலபமான வேலை ஆயிற்றே


P VIJAYAKUMAR
நவ 04, 2024 09:56

RECENTLY CHENNAI CORPORATION SCHOOL TEACHER RETIRED AND HIS/HER M.PHIL DEGREE CERTIFICATE TO BE VERIFICATION LETTER REQUESTED TO UNIVERSITY AND THE SAME LETTER HANDED OVER TO CANDIDATE TEACHER. FINALLY THEY WERE NOT VERIFIED AND HIS/HER INCREMENT WAS GIVEN FROM CHENNAI CORPORATION.


Nallavan
நவ 04, 2024 07:48

எவ்வளவு கொடுத்தால் உண்மை தன்மை சான்றிதழ் கிடைக்கும் ?


RAMADASS subramani
நவ 04, 2024 06:45

ஆரம்ப காலகட்டங்களில் சென்னை பல்கலைக்கழகம் மட்டுமே கட்டணம் வசூலிக்காமல் உண்மை தன்மை சான்று வழங்கியது ஆனால் அதுவும் கடந்த சில ஆண்டுகளாக வசூலிக்கிறது. தமிழகத்தில் பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் உண்மை தன்மை சான்றிதழ்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது உள்ள இந்த உத்தரவு வரவேற்கத்தக்கது


முக்கிய வீடியோ