உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜயின் இதயத்தில் வலியோ, காயமோ இல்லை: வீடியோவை விமர்சித்த சீமான்

விஜயின் இதயத்தில் வலியோ, காயமோ இல்லை: வீடியோவை விமர்சித்த சீமான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விருதுநகர்: விஜய் பேசிய காணொளியை பார்க்கும் போது அவரது இதயத்தில் காயமோ வலியோ இருப்பது போல் தெரியவில்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.விருதுநகரில் நிருபர்களிடம் சீமான் கூறியதாவது: பாஜ அரசு எங்களை நாட்டு மக்களாகவே பார்ப்பதில்லை. உத்தரப்பிரதேசம் எந்த அளவுக்கு வரி செலுத்துகிறதோ அதே தான் நாங்களும் செலுத்துகிறோம் எங்களுக்கு மட்டும் பாரபட்சம் ஏன்? கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் சாவிற்கு ஸ்டாலின் போகவில்லை விஜய் சென்று பார்த்தார். விஜய் கூட்டத்தில் இறந்தவர்களுக்கு ஸ்டாலின் சென்று பார்க்கிறார். விஜய் போகவில்லை. உடனடியாக பாஜக அரசு உண்மை கண்டறியும் குழுவை அனுப்புகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=f54gkazx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

மக்கள் தொண்டு

தேர்தல் வருவதால்தான் கரூரில் 41 பேர் இறந்ததற்கு உண்மை கண்டறியும் குழு வருகிறது. இதே போல் ஏன் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களை வந்து பார்க்கவில்லை. அரசியல் என்பது மக்கள் மீது அதிகாரத்தை செலுத்துவது அல்ல. அது மக்களுக்கு ஆற்றப்படும் தொண்டு. அரசியல் என்பது அனைத்து உயிர்களுக்குமன தேவையையும் அதை நிறைவு செய்கிற சேவையும் ஆகும். காமராஜர் ஆட்சியில் உண்மையும் நேர்மையுமாக இருந்தது.

ஊழல்,லஞ்சம்

தற்போது ஊழல் லஞ்சமாக உள்ளது. இங்கு அரசியல் கட்டமைப்பே சாதி, மதம், சாராயம், திரைக்கவர்ச்சியாக உள்ளது. விஜய் பேசிய காணொளியை பார்க்கும் போது அவரது இதயத்தில் காயமோ வலியோ இருப்பது போல் தெரியவில்லை.

காரணம் யார்?

விஜய் பிரசாரத்திற்கு அந்த இடத்திற்கு போனதால் தான் அந்த நிகழ்வு ஏற்பட்டிருக்கிறது. அப்போது காரணம் யார்? மற்ற இடத்தில் நடக்கவில்லை இங்கே மட்டும் ஏன் நடக்கிறது என்று கேட்பது தவறு. எல்லா கூட்டத்திலும் மயங்கி விழுந்தார்கள் , இங்கு கூட்ட நெரிசல் அதிகமாகி சிக்கிக் கொண்டனர். மருத்துவமனையில் கத்தியால் குத்துப்பட்டு அனுமதிக்கப்பட்டவர்களை ஒருவரைக் கூட பார்கவில்லை.

இப்படி சொல்லாதீங்க?

சிஎம் சார் என்று கூப்பிடுவது சின்ன பிள்ளை விளையாட்டுக்கு கூப்பிடுவது போல் உள்ளது. அவர் மீது உங்களுக்கு மதிப்பு இல்லாமல் போகலாம். உட்கார்ந்திருக்கும் நாற்காலியில் இந்த நாட்டில் பெரும் தலைவர்கள் அமர்ந்துள்ளனர். பெருந்தலைவர்கள் அமர்ந்திருந்த இடம் என்பதால் பார்த்து பேச வேண்டும். சிஎம் சார், சிஎம் சார் என்று பேசக்கூடாது. அது தன்மையான பதிவு அல்ல. இவ்வாறு சீமான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

Matt P
அக் 02, 2025 23:27

காயம் கண்ணீரா மஹேஷுக்கு வந்த மாதிரி வந்திருக்கணும்ங்கிறீங்களா?


ராமகிருஷ்ணன்
அக் 02, 2025 22:19

புலம்பல் அதிகமாயிட்டே இருக்கு. தன் கட்சி சில்லுண்டிகள் தவெக போயிட்டாங்க, என்ன செய்ய


கூத்தாடி வாக்கியம்
அக் 02, 2025 21:09

என்னாச்சு திரும்பி வரேன்னு சொன்னதும் இப்போ பயம் வருதா. நீ என்னத்த கண்டு புடிக்கிறது .


Kjp
அக் 02, 2025 20:35

விஜய் அரசியலுக்கு வந்த பிறகு சீமானுக்கு தான் இதய வலி காயம் .வந்துவிட்டது.. அதுதான் புலம்ப ஆரம்பித்து விட்டார்.


Barakat Ali
அக் 02, 2025 20:29

பி டீமை குறை சொல்லும் திமுகவின் குரலாக ஒலிக்கிறது இந்த சி டீம் .....


V Venkatachalam
அக் 02, 2025 20:10

தீயமுக வின் அடுத்த உருட்டு. திருமாவுக்கு அஸைன்மெண்ட்.‌ விஜயை ஏன் கைது செய்யவில்லை? புஸ்ஸி ஆனந்துக்கு ஒரு நீதி. விஜய்க்கு ஒரு நீதியா? ஏன் இந்த ஒரு தலை பட்சம்? பாஜகவுடன் ரகசிய ஒப்பந்தமா? திருமா , தீயமுகவை எதிர்த்து பேச முடியுமா? இது ஒரு வகையான வேஷம்..


பெரிய குத்தூசி
அக் 02, 2025 20:00

விஜயின் அரசியல் வருகைக்குப் பிறகு நமக்கு தெரிவது என்னவென்றால், இந்த காலத்திலும் எந்த கருத்துமே இல்லாமல் கொள்கையே இல்லாமல் திரைக்கவர்சியால் மட்டுமே ஒருவனை தலைமை ஏற்கும் கும்பல் இன்னமும் இங்கு இருக்கிறது. கல்வி அறிவும் வேலைவாய்ப்பும் அடைந்திருந்தும் கூட அரசியல் அறிவு, நாட்டு நடப்பு, வரலாறு என எதுவுமே அறியாது திரை கலைஞர்கள் மீது emotional attachment ஐ உருவாக்கிக் கொண்டு அவர்களை நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக பார்க்கும் மனநிலையுடையவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் அறியமுடிகிறது. கல்வியில் சிறந்த தமிழ்நாடு கன்ராவியில் சிறந்த தமிழ்நாடு, திராவிட பண்பாடு, அண்ணா பூமி, பெரியார் மண் என விளம்பர அரசியல் பீற்றி செய்யும் ஆட்சியாளர்களுக்கு இத்தனை ஆண்டுகால தங்கள் ஆட்சியின் தோல்வி தெரிய வேண்டும். சுயபுத்தி இல்லாத தமிழனும் நமக்கும் நாட்டுக்கும் என்ன தேவை என புரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும்.


Raj S
அக் 02, 2025 21:05

உங்களுக்கு விஜய் வந்த அப்பறம் புரிஞ்சது, பல பேருக்கு .... ரயில்ல வந்து ஒருத்தர் முதலமைச்சர் ஆன போதே தெரிஞ்சிடிச்சி. நீங்க ரொம்ப லேட்டு


bharathi
அக் 02, 2025 19:58

As if amai has wide experience in politics teaching everyone


Mr Krish Tamilnadu
அக் 02, 2025 19:42

கத்தியால் குத்தப்பட்டவரை பார்க்க முடியாது. ஏனென்றால் பொய் மாடம் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படும் இருக்கலாம். நேர்மை என்றால் அனைத்தையும் பற்றியும் விமர்சிக்க வேண்டும். ஒரே இரவில் பொய் மாடம்?. காவல்துறையின் செய்கைகள்?. சந்தேகம் உள்ளது. விசாரணை செல்கிறது.ஏன், திருச்சி கூட்டத்திற்கு பிறகு, பாதுகாப்பற்ற கூட்டங்கள் செல்லும் மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். ரசிப்பு, ஆசை அனைத்தும் இரண்டாம் பட்சம், தற்காப்புக்கு முதலிடம் தாருங்கள் என எந்த அரசியல் விஞ்ஞானிகளும் கூறவில்லை. நயன்தாரா, அஜீத்க்கு இதை விட அதிகம் வரும் என ஏன் கூறினீர்கள். அப்போது எங்கு போனது மக்கள் அன்பு சார்ந்த அரசியல். நடுநிலை மிக முக்கியம். அவர் துணை முதல்வர் பதவி போன்ற ஒரு இளவரசர் பட்டத்திற்கு ஆசைப்பட்டு இருந்தால், இப்போதும் ஒன்றுமில்லை ஏதோ ஒரு கட்சியில் இணைந்தோ, கூட்டணி அமைந்தால் போது அவர்கள் பார்த்து கொள்வார்கள். இதே ஊர்வலம் சிறப்பாக நடக்கும். நெளிவு சுளிவு உடன் துணை முதல்வராக பயணிக்கலாம். சிறந்த தலைவர்கள் உருவாவது அவமானத்தில்... காயம் ஏற்படுத்தும் அவமானம், தரும் தெளிவே அவர்களுக்கான திறவுகோல்.


joe
அக் 02, 2025 19:35

காமெடிக்கு இது நேரம் அல்ல சீமான் அவர்களே .ஊழல் அரசியல் வாதிகள் உச்சக்கட்டத்தில் உள்ளார்கள் .இது தெரியாமல் சிறுபிள்ளைத்தனமாக விஜய்யை சீண்டி வேடிக்கை காட்டுகிறீர் .உங்கள் மரியாதையை அடுத்த கட்சிக்காரர்களை விட முற்போக்கானது இருந்தும் நீங்கள் இப்படி பேசுவதை நிறுத்துங்கள்.நீங்கள் உங்கள் கட்சியை சீர்படுத்தவும் .நன்றி . .


Venkat esh
அக் 02, 2025 20:15

. விஜய் முதிர்ச்சியுள்ள ஒரு மனிதனா, அரசியல்வாதியா? மனசாட்சி என்று ஒன்று இருந்தால், அதன்படி பதில் சொல்லவும். பிஜேபி எதிர்ப்பு, மோடி எதிர்ப்பு என்று ஒளிந்து கொள்ள வேண்டாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை