வாசகர்கள் கருத்துகள் ( 2 )
சரியான கேள்வி பதிவு தான் திருட்டு மாஃபியா கும்பலுக்கு விடை தெரியாதே
அறிவாலயம் வக்ஃப் சொத்து என்று சொன்ன தைரியமான நபர்! இப்போதாவது மூல பத்திரத்தை காட்டி ஆதாரத்துடன் பதிவு செய்வார்களா?.
சென்னை: தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் அளித்த பேட்டி:வக்பு வாரிய சட்டத் திருத்தத்தை முழுமையாக வரவேற்கிறோம். வக்ப் வாரியத்தில் பெண்கள் இருவரை உறுப்பினராக சேர்க்க வேண்டும்; வாரியத்திற்கு எழுதி வைத்த சொத்து விபரங்களை 90 நாட்களில் ஆன்லைனில் பதிய வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. அது தவறில்லை.சென்னையில் அண்ணா அறிவாலயம், தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானம், திருச்சி அறிவாலயம் போன்றவை அனைத்தும் வக்பு சொத்துக்கள்தான். நாடு முழுதும் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு மேல், வக்ப் வாரியத்துக்கு சொத்துக்கள் உள்ளன. இவற்றில் 10 சதவீதம் வருமானம் வந்தால் கூட, ஆண்டுக்கு 10,000 கோடி ரூபாய் வர வேண்டும். இந்த வருமானத்தை சட்டவிரோதமாக வைத்திருப்போர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அதன் வாயிலாக, சம்பாதித்த சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். ஹைதராபாத்தை சேர்ந்த எம்.பி.,யான ஓவைசியின் ஆக் ஷனை பார்க்கும்போது, தெலுங்கு படம் பார்ப்பது மாதிரி இருக்கும். தன்னை பா.ஜ.,வுக்கு எதிரியாக காட்டிக் கொள்வார். ஆனால், பா.ஜ.,வினரோடுதான் உறவு வைத்துக் கொள்வார். அவரிடம், வக்ப் வாரியத்திற்கு சொந்தமான 3,000 கோடி ரூபாய் சொத்து உள்ளது. அதை யார் மீட்பது?இவ்வாறு அவர் கூறினார்.
சரியான கேள்வி பதிவு தான் திருட்டு மாஃபியா கும்பலுக்கு விடை தெரியாதே
அறிவாலயம் வக்ஃப் சொத்து என்று சொன்ன தைரியமான நபர்! இப்போதாவது மூல பத்திரத்தை காட்டி ஆதாரத்துடன் பதிவு செய்வார்களா?.