உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வரை சந்தித்ததில் அரசியல் இல்லை; மவுனம் கலைத்தார் ஓபிஎஸ்

முதல்வரை சந்தித்ததில் அரசியல் இல்லை; மவுனம் கலைத்தார் ஓபிஎஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: முதல்வரை சந்தித்ததில் அரசியல் இல்லை. திமுகவில் நான் இணையப்போவதாக வதந்தி பரப்புகிறார்கள் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.இது குறித்து ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதல்வர் இல்லத்திற்கு சென்றதை அரசியலாக்குவது நாகரிகமற்ற செயல். முதல்வர் ஸ்டாலின் உடனான சந்திப்பில் எந்த வித அரசியலும் இடம்பெறவில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய முதல்வரிடம் நேரில் நலம் விசாரித்தேன். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gp1u517t&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0முதல்வரின் மூத்த சகோதரர் மு.க. முத்து மறைவு குறித்து இரங்கல் தெரிவிக்க சென்றேன்.நான் திமுகவுடன் கூட்டணி வைக்கப் போவதாகவும், திமுகவில் இணையப் போவதாகவும் வதந்தி பரப்பும் நடவடிக்கைகளை சிலர் மேற்கொண்டு வருகின்றனர்; இதில் எள்ளளவும் உண்மையில்லை. முதல்வர் உடனான சந்திப்பை வைத்து என்னை திமுகவின் பி டீம் என பேசுகின்றனர்.

எங்கள் நோக்கம்

முதல்வரை நான் சந்தித்ததை வைத்து அரசியல் ஆதாயம் தேட சிலர் முயற்சிக்கின்றனர். முதல்வர் உடனான சந்திப்பு தமிழ் பண்பாட்டின் வெளிப்பாடு. இந்த சந்திப்பில் எவ்வித அரசியலும் இடம்பெறவில்லை. 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம், அதற்கான நடவடிக்கைகளை உறுதியாக எடுப்போம். இவ்வாறு ஓபிஎஸ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

RAMAKRISHNAN NATESAN
ஆக 04, 2025 15:17

உதவி பண்ண போனேன் ன்னு உண்மையைச்சொல்லலாம்ல ?


pv, முத்தூர்
ஆக 04, 2025 14:33

ஜெ இருந்தவரை ஸ்டாலினை ஏர்எடுத்துபார்காத தமிழ் பன்பாடு, இப்போது வெளிவந்ததா?


சந்திரசேகர்
ஆக 04, 2025 14:12

நாங்கள் அரசியல் செய்யவில்லை.அவியல் தான் செய்தோம்


Kadaparai Mani
ஆக 04, 2025 14:11

Panneerselvam loyal to all political parties in tamil nadu except AIADMK


வீச்சு பரோட்டா பக்கிரி
ஆக 04, 2025 13:53

முதல்வர் ஸ்டாலின் ஓபிஎஸ் சந்திப்பில் எந்த வித அரசியலும் இடம்பெறவில்லை. ..உக்ரைன் ,,ரஷ்ய இஸ்ரேல் ..ஹமாஸ் , தாய்லாந்து மற்றும் கம்போடியா போர்களை எப்படி நிறுத்துவது என்று இருவரும் ஆலோசனை செய்தார்கள் .. இருவரும் டொனால்ட் டிரம்ப் , விளாதிமிர் புடின் , பெஞ்சமின் நெட்டன் யாஹூவுடன் தொலைபேசியில் கலந்து ஆலோசித்தார்கள் .. முடிவில் அனைவரும் இருவரின் முடிவுக்கு கட்டுப்படுவதாக தெரிவித்தார்கள் .. ஓபிஎஸ், ட்ரம்பின் இந்தியப்பொருட்களுக்கான 25% டாரிப் உயர்த்தியது பற்றி கடுமையாக எச்சரித்தார் ..


s. Krishnasamy
ஆக 04, 2025 12:26

அவியல் எப்படி செய்வது என கேட்டுத்தெரிந்து கொள்ளப் போயிருக்கலாம்.


என்னத்த சொல்ல
ஆக 04, 2025 11:59

இந்நேரம் ஜெ இருந்திருந்தால் இவரை அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கி இருப்பார்கள். அந்தளவுக்கு ஜெ கலாச்சாரத்தை கட்டி காத்தார்கள்.


Ramesh Sargam
ஆக 04, 2025 11:52

ஆமாம் முதல்வரை அரசியல் ரீதியாக சந்தித்தேன் என்று உண்மையை ஒப்புக்கொண்டால் மக்கள் மத்தியில் மதிப்பு கூடும். அதைவிட்டு ஏன் இப்படி தில்லாலங்கடி வேலை. மருத்துவமனையில் இருந்து வந்த முதல்வரை காலையில் நடை பயிற்சியின்போது சந்தித்தார். காலையில் கையில் பழம் எதுவும் இல்லை. ஆகையால் பழங்களை வாங்கிக்கொண்டு மீண்டும் மாலையில் சந்தித்தார் - மீண்டும் நலம் விசாரிக்க. நாலு ஆப்பிள் பழங்களை கொடுத்து நாற்காலியை பிடிக்க பார்க்கிறார் OPS


Shankar
ஆக 04, 2025 11:22

டார்ச் லைட்காரன்மாதிரி இதுவும் ஒரு கொத்தடிமை. அவ்வளவு தான்.


Anand
ஆக 04, 2025 10:46

சரி சரி, எப்போது திமுகாவில் உன்னை இணைத்துக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை