சென்னை: முடியப்போகும் 2024ம் ஆண்டில் 1,179 மி.மீ., மழை பதிவாகி உள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட 143 மி.மீ., அதிகம் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.இது தொடர்பாக வானிலை மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் கடந்த ஜன., முதல் டிச., வரை 1, 179 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.ஜன., பிப்., -52 மி.மீ.,மார்ச், ஏப்ரல், மே மாதங்களில்- 147 மி.மீ.,ஜூன் முதல் செப் வரை (தென்மேற்கு பருவமழை காலம்)- 389 மி.மீ.,அக்., நவ., டிச ., காலத்தில் (வடகிழக்கு பருவமழை காஙம்) -590 மி.மீ., என மொத்தம் 1,179 மி.மி., மழை பதிவாகியுள்ளது.இது கடந்த ஆண்டை விட 143 மி.மீ., அதிகம். கடந்த ஆண்டு 1036 மி.மீ., மழை பதிவானது.தென் மேற்கு பருவமழை காலத்தில், கடந்த ஆண்டை விட செப்., மாதம் மட்டும் 64 சதவீதம் அதிகம் பெய்துள்ளது.செப்., இயல்பை விட 64 சதவீதமாகவடகிழக்கு பருவமழை காலத்தில்அக்., -214 மி.மீ.,நவ.,- 140 மி.மீ.,டிச.,-235 மி.மீ., என மொத்தம் 589 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.இதில் இயல்பை விடஅக்., மாதம் 25 சதவீதம் அதிகம்நவ.,23 சதவீதம் குறைவுடிச.,33 164 சதவீதம் அதிகம்அக்., முதல் டிச., வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் 33 சதவீதம் அதிகம். கடந்தாண்டை விட இது 4 சதவீதம் கூடுதல் ஆகும்.தென் மேற்கு பருவமழை காலத்தில், நெல்லையில் இயல்பை விட 265 சதவீதம் அதிகம் ஆகும். 16 மாவட்டங்களில் இயல்பை விட அதிகம்6 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும் மழை பதிவாகி உள்ளது.வடகிழக்கு காலத்தில் நெல்லை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், விழுப்புரம் மாவட்டங்களில் இயல்பை விட மிக அதிகம் பதிவாகி உள்ளது. 23 மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாகவும்11 மாவட்டங்களில் இயல்பான அளவிலும் மழை பதிவாகி உள்ளது.அரபிக் கடல் மற்றும் வங்கக்கடலில் கடந்த ஆண்டு 6 புயல்கள் உருவான நிலையில், இந்தாண்டு 4 புயல்கள் உருவானது. இவ்வாறு பாலச்சந்திரன் கூறினார்.