உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அலை சீற்றம் அதிகம் இருக்கும்; யாரும் கடற்கரைக்கு போகாதீங்க!

அலை சீற்றம் அதிகம் இருக்கும்; யாரும் கடற்கரைக்கு போகாதீங்க!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் அலையின் சீற்றம் அதிகமாக இருப்பதால், மீனவர்கள் உட்பட யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.வடகிழக்கு பருவமழையின் துவக்கமாக தென் கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. அதன் காரணமாக தமிழகம் முழுவதும், நேற்றிரவு கனமழை கொட்டியது. இதனால், இன்று (அக்.,15) மாலை முதல் நாளை (அக்.,16) நள்ளிரவு வரை திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் அலையின் சீற்றம் மிக அதிகமாக இருக்கும். ஒவ்வொரு அலையும் 18-22 நொடி நேரம் வரை இருக்கவும், 1.2-2 மீட்டர் உயரம் எழும்பவும் வாய்ப்புள்ளது. கடற்கரையோரம் வசிப்பவர்கள் போதிய முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும். இதனால், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் அலையின் சீற்றம் அதிகமாக இருப்பதால், யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம்.

படகுகள் நிறுத்தி வைப்பு

நாகையில் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 3500க்கும் மேற்பட்ட பைபர் படகுககள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடல் சீற்றம்

வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வின் காரணமாக, மயிலாடுதுறையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால், மாவட்டம் முழுவதும் உள்ள 500 விசைப்படகுகள், 4800 பைபர் படகுகள் முகத்துவாரங்கள் மற்றும் மீன்பிடி துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
அக் 15, 2024 12:23

கடலின் அலை சீற்றத்தைவிட பாதிக்கப்பட்ட மக்களின் சீற்றம் அதிகம் இருக்கும். கடல் அலையின் சீற்றத்தை கட்டுப்படுத்த நம்மால் முடியாது. ஆனால் மக்களின் சீற்றத்தை அரசு கட்டுப்படுத்த முயலவேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் செய்து.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை