உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அடுத்து வரும் ஆட்சியில் இன்னமும் வேகமான வளர்ச்சி இருக்கும் ; முதல்வர் ஸ்டாலின்

அடுத்து வரும் ஆட்சியில் இன்னமும் வேகமான வளர்ச்சி இருக்கும் ; முதல்வர் ஸ்டாலின்

சென்னை: திராவிட மாடல் 2.0 ஆட்சியில் இன்னமும் வேகமான வளர்ச்சியை கொடுப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.சென்னை பல்லாவரத்தில் ஏழை, எளிய மக்களுக்கான இலவச வீட்டுமனை பட்டாக்களை பயனாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; தென்குமரியில் இருந்து சென்னை வரை சமச்சீரான வளர்ச்சி இருக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து, பார்த்து செய்து வருகிறோம். வேலை வாய்ப்புகளை உறுதி செய்கிறோம்.இதனால் தான் 11.19 சதவீதம் பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கிறது. 14 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கருணாநிதி ஆட்சிக்கு பின்னர் இப்போது தான் இரட்டை இலக்க வளர்ச்சியை நாம் அடைந்திருக்கிறோம்.நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு வளர்ச்சி இல்லை. ஏன்... நாட்டோட வளர்ச்சியை ஒப்பிட்டு பார்த்தாலும் நாம் தான் விஞ்சி இருக்கிறோம். இதுதான் திமுக ஆட்சி. இதுதான் திராவிட மாடல் ஆட்சி. இது தான் ஸ்டாலின் ஆட்சி. 2011ல் இருந்து 2021 வரைக்கும் தமிழகம் 10 ஆண்டுகள் பின்னோக்கி சென்றது. இந்த 4 ஆண்டுகளில் அதை மீட்டு எடுத்து,வளர்ச்சி பாதையின் உச்சத்தில் நாம் கொண்டு போய் சேர்த்திருக்கிறோம். இதை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, அவர்களின் நண்பர் மத்திய அரசு அளித்த புள்ளி விவரத்தையே சரியில்லை என்று இப்போது பேசுகிறார். வளர்ச்சியின் அளவீடு என்பது பொருளாதார அளவுகோல் தான். இந்த அடிப்படை கூடதெரியாமல் அறிக்கை விட்டுக் கொண்டு இருக்கிறார். உங்களுக்கு என்ன வயிற்றெரிச்சல் என்றால் இந்திய அளவில் பிரதமர் மோடியால் சாதிக்க முடியாதததை, மற்ற மாநில முதல்வர்கள் சாதிக்க முடியாத ஒன்றை இந்த ஸ்டாலின் சாதித்துவிட்டாரே என்பது தான் அவர்களின் வயிற்றெரிச்சலுக்குக் காரணம். திராவிட மாடல் 2.0 ஆட்சியில் இன்னமும் வேகமான வளர்ச்சியை கொடுப்போம். அதை நிச்சயமாக செயல்படுத்துவோம். அதை எதிர்க்கட்சி வரிசையில் இருந்து கொண்டு பார்க்கத்தான் போகிறீர்கள். தமிழக மக்களின் ஆதரவுடன் எங்களின் பயணம் தொடரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 55 )

அசோக்
ஆக 10, 2025 10:06

டீம்க வந்தா தான


ராமகிருஷ்ணன்
ஆக 10, 2025 10:05

அடுத்து ஆட்சிக்கு வந்தால் இன்னும் வேகமாக வாரி சுருட்டி முழுங்கி தமிழகத்தை கபளீகரம் செய்து விடுவார்கள் என்று சூசகமாக தெரிவித்துள்ளார்


suresh Sridharan
ஆக 10, 2025 09:44

இனி நீங்க புக் எடுத்து படிச்சு டீச்சரை வைத்து அதுக்கு அந்த அது குடோன்லயே இருக்கட்டும் cm ஐயா நீங்க பேசறது கமலையை விட மோசமா போச்சு முதல்வராக நடந்து கொள்ளுங்கள் எல்லா மதத்தினரையும் அரவணைத்து செல்வது தான் அரசியல் தலைவர்கள் செய்யும் வேலை முதல்வர் என்பவர் அதற்கு மேல் இருக்கக்கூடியவர் ஆனால் நீங்கள் எல்லாரையும் அனுசரித்து செல்வதில்லை


Chandru
ஆக 10, 2025 09:22

யாருடைய வளர்ச்சி ?


sasikumaren
ஆக 10, 2025 01:27

இந்தியா அமெரிக்கா இடையே நடக்கும் வரி யுத்தம் இது ஒரு நாடகம் போலத்தான் தெரிகிறது திருட்டு மாஃபியா கும்பல் அமெரிக்காவில் வைத்திருக்கும் பணம் சொத்துகளை வரும் தமிழக தேர்தலில் அந்த பணம் சொத்துகளை பயன்படுத்த முடியாது வகையில் ஏதோ திட்டம் நடக்கிறது என்று பொருத்திருந்து பார்க்கலாம்.


surya krishna
ஆக 09, 2025 23:39

ஆட்சிக்கு வந்த நான்கு ஆண்டுகளில் நாலு லட்சம் கோடி கடனை எங்க தலையில் வைத்து விட்டாய். அடுத்த முறை ஆட்சிக்கு வந்து 8 லட்ச ரூபாய் கடனை வாங்கி மொத்தமாக எங்களை கல்லறைக்குள் மூடி விடவா?


Raghavan
ஆக 09, 2025 22:21

கடன் வாங்குவதில் வளர்ந்திருக்கிறீகள். மத்திய அரசு பணம் டாஸ்மாக் பணம் மற்றும் இதர இலக்காக்கள் பணம் வந்தும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கொடுக்கவேண்டிய பணத்தை இன்னும் கொடுக்கமுடியவில்லை. ஒரு நாளைக்கு வாங்கிய கடனுக்கு 84 கோடி ரூபாய் வட்டிமட்டுமே கட்டவேண்டியதிருக்கிறது. இது ஒன்றுதான் உங்களின் ஆட்சியில் சொல்லிக்கொள்ளும்படியான வளர்ச்சி.


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 09, 2025 22:14

அடுத்த முறை உங்கள் ஆட்சி அமைந்தால் கள்ளக்குறிச்சிக்கு ஒரு கோடி ரூபாயும் தினசரி திருபுவனுமும் நடக்க இருப்பதைத்தானே சொல்லுகிறீர்கள்?


Natarajan Ramanathan
ஆக 09, 2025 21:53

அடுத்து வேறு யார் ஆட்சி செய்தாலும் இந்த அரசைவிட வளர்ச்சியில் வேகம் இருக்கும்தான்.


M Ramachandran
ஆக 09, 2025 21:42

அப்போ அடுத்து வரும் ஆட்சி திருட்டு கட்சியின் குடும்ப ஆட்சி இல்லை என்பது திண்ணமாக தெரிந்து விட்டதா?


புதிய வீடியோ