உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏமாற்றம் இருக்காது; மாற்றம் நிச்சயம்: மீண்டும் சொல்கிறார் முதல்வர்

ஏமாற்றம் இருக்காது; மாற்றம் நிச்சயம்: மீண்டும் சொல்கிறார் முதல்வர்

சென்னை : அமைச்சரவை மாற்றம் மற்றும் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி குறித்த கேள்விக்கு, ''ஏமாற்றம் இருக்காது; மாற்றம் இருக்கும்,'' என, முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.'அமைச்சர் உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும்' என, தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் சிலர் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த மாதம், அதாவது முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்கு முன், துணை முதல்வராக உதயநிதி நியமிக்கப்படுவார் என்ற தகவல் பரவியது. வெளிநாடு புறப்படும் முன் முதல்வர் அளித்த பேட்டியில், 'மாறுதல் ஒன்றுதான் மாறாதது. பொறுத்திருந்து பாருங்கள்' என்றார்.அமெரிக்க பயணம் முடித்து, அவர் திரும்பியுள்ள நிலையில், கடந்த வாரத்தில் மீண்டும் உதயநிதி துணை முதல்வர் ஆகப்போகிறார் என தகவல் பரவியது. எந்த மாற்றமும் நடக்காததால், ஆளுங்கட்சி வட்டாரத்திற்கு ஏமாற்றமே மிஞ்சியது.இதற்கிடையில் மூத்த அமைச்சர்கள் சிலர், உதயநிதியை துணை முதல்வராக நியமிக்க எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், அவர்களை சமாளிக்க, மூத்த அமைச்சர் ஒருவருக்கும், உதயநிதியுடன் சேர்த்து துணை முதல்வர் பதவி வழங்க, ஆலோசனை நடப்பதாகவும் தகவல் பரவியது.எதுவும் உறுதி செய்யப்படாத நிலையில், நேற்று சென்னை கொளத்துார் தொகுதியில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதல்வர், செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது, ''வெளிநாட்டு தொழில் முதலீடுகள் குறித்த, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு, அமைச்சர் ராஜா ஏற்கனவே தெளிவாக விளக்கம் அளித்துள்ளார். அதுவே வெள்ளை அறிக்கை தான்,'' என்றார்.அதைத் தொடர்ந்து, அமைச்சரவை மாற்றம், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி குறித்த கேள்விக்கு, ''ஏமாற்றம் இருக்காது. நிச்சயம் மாற்றம் இருக்கும்,'' என்றார் முதல்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

T.sthivinayagam
செப் 25, 2024 21:21

திருட்டு திராவிடர் என்று சொல்லும் ஒவ்வொருவரும் சென்னையை தாண்டினால் சவுத்து இண்டியன் தான் அதாவது வடமாநிலத்தவரை பொறுத்தவரை திராவிடர்கள் தான் என தமிழக மக்கள் கூறுகின்றனர்


Venkataraman
செப் 25, 2024 19:53

இந்த ஏமாற்றம் , மாற்றம் என்கிற கதையெல்லாம் வேண்டாம். மக்கள் அனைவருக்கும் ஏற்கனவே நன்றாக தெரியும், இளவரசருக்கு பட்டம் சூடப்போகிறார் என்று. இதற்கான ஒத்திகையை அந்த கட்சியை சேர்ந்த கொத்தடிமைகளும், கைக்கூலிகளும் ஏற்கனவே செய்து முடித்து விட்டார்கள். வாழ்க பரம்பரை குடும்ப ஆட்சி, ஒழிக ஜனநாயகம்.


ரெட்டை வாலு ரெங்குடு
செப் 25, 2024 18:07

வெம்பிய பழம் குப்பைக்கு தான் சமம்


GUNA SEKARAN
செப் 25, 2024 15:52

மாற்றம் ஏமாற்றம் சரி. யாருக்கு ஏற்றம்???


Ramesh Sargam
செப் 25, 2024 14:15

மாற்றம் ஒரு சில பழைய மாணவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும். ஏமாற்றம் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் ஏட்படும். ஆனால் ஒன்னு, காங்கிரஸ் கட்சியில் எப்படி வாரிசு என்கிற பெயரில் அந்த ராகுலுக்கு முக்கியத்துவம் கொடுத்து காங்கிரஸ் கட்சி ஒன்றும் இல்லாத நிலைக்கு இன்று தள்ளப்பட்டதோ, அதுபோல, தமிழகத்திலும் அந்த கருணா வாரிசு உதயநிதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால், திமுகவும் கூடிய சீக்கிரம் ஒன்றும் இல்லா நிலைக்கு தள்ளப்படும். ஸ்வீட் எடு, கொண்டாடு. கொண்டாடுவோம்.


angbu ganesh
செப் 25, 2024 14:14

உங்களையே எங்களால ஜீரணிக்க முடியல ஹிந்துக்கள் வோட்டு மட்டும் வேணும்


Ramesh Sargam
செப் 25, 2024 13:37

மாற்றம் ஒரு சில பழைய மாணவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும். ஏமாற்றம் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் ஏட்படும். ஆனால் ஒன்னு, காங்கிரஸ் கட்சியில் எப்படி வாரிசு என்கிற பெயரில் அந்த ராகுலுக்கு முக்கியத்துவம் கொடுத்து காங்கிரஸ் கட்சி இன்று ஒன்றும் இல்லாத நிலைக்கு இன்று தள்ளப்பட்டதோ, அதுபோல, தமிழகத்திலும் அந்த கருணா வாரிசு உதயநிதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால், திமுகவும் கூடிய சீக்கிரம் ஒன்றும் இல்லா நிலைக்கு தள்ளப்படும். ஸ்வீட் எடு, கொண்டாடு. கொண்டாடுவோம்.


jayvee
செப் 25, 2024 09:14

ஏமாற்றம் இருக்காது என்பது நிதிக்கு துணை முதல்வர் பதவி.. மாற்றம் இருக்கும் என்பது பெருச்சாளிகள் விரட்டப்படலாம்


புதிய வீடியோ