உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வரும் தேர்தலில் வண்டி வண்டியாக பணத்தை கொட்ட போறாங்க: விஜய்

வரும் தேர்தலில் வண்டி வண்டியாக பணத்தை கொட்ட போறாங்க: விஜய்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''கொள்ளை அடித்த பணத்தை, அடுத்த ஆண்டு வண்டி வண்டியாக எடுத்து வந்து கொட்டப் போகின்றனர்,'' என, த.வெ.க., தலைவர் விஜய் கூறினார்.தமிழகத்தில் இந்தஆண்டு நடந்த பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், சட்டசபை தொகுதி அளவில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு, த.வெ.க., சார்பில், 'விஜய் கல்வி விருது' வழங்கும் விழா, சென்னை பனையூரில் நேற்று நடந்தது.

கொள்ளை அடித்த பணம்

இதில், மாநில அளவில் முதல் இடங்களை பெற்ற மாணவர் - மாணவிக்கு வைரக்கம்மல், வைர மோதிரம் வழங்கி, விஜய் பேசியதாவது:கல்வியில் சாதிக்க வேண்டும்; அதை மறுக்கவில்லை. அதற்காக, ஒரே ஒரு தேர்வில் சாதிக்க வேண்டும் என்பது சாதனை அல்ல. ஒரு தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். 'நீட்' தேர்வு மட்டும்தான் உலகமில்லை. அதைத் தாண்டி உலகம் மிகப்பெரியது. அதில் சாதிக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. மனதையும், சிந்தனையையும் தைரியமாகவும், ஜனநாயகமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.ஜனநாயகம் ஒன்று இருந்தால்தான், இந்த உலகம் சுதந்திரமாக இயங்க முடியும். ஜனநாயகம் என்பது முறையாக இருந்தால் தான், அனைவருக்கும் எல்லாம் சரிசமமாகக் கிடைக்கும். வீட்டில் உள்ளவர்களிடம் ஜனநாயகக் கடைமையை சரியாக செய்ய சொல்லுங்கள். ஜனநாயகக் கடமை என்பது பெரிய விஷயமல்ல; சாதாரணமான விஷயம்தான். யார் நல்லவர்கள், நம்பிக்கையானவர்கள், இதுவரை ஊழலே செய்யாதவர்கள் என்று பார்த்து, தேர்வு செய்ய வேண்டும்; இதுதான், அந்த கடமை.பணம் கொடுத்து ஓட்டு வாங்கி, வெற்றி பெறுவதை ஊக்குவிக்கக்கூடாது. ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். இதை பின்பற்ற வேண்டும். அடுத்த ஆண்டு வண்டி வண்டியாக பணத்தை எடுத்து வந்து கொட்டப் போகின்றனர். அவை அனைத்தும் உங்களிடம் இருந்து கொள்ளை அடித்த பணம்தான். என்ன பண்ண போகிறீர்கள்; என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கு நன்றாக தெரியும்.

சிந்திக்க வேண்டும்

குழந்தைகள் விஷயத்தில் பெற்றோர் எதையும் கட்டாயப்படுத்தக்கூடாது; அழுத்தம் தரக்கூடாது. எத்தனை தடை வந்தாலும், அவரவர் பிடித்த விஷயத்தில் சாதித்துக் காட்டுவர். ஜாதி, மதம் வைத்து பிரிவினையை ஏற்படுத்தும் பக்கம் செல்லக்கூடாது. விவசாயிகள், ஜாதியை பார்த்து பொருட்களை விளைவிக்கவில்லை.போதைப் பொருட்களை ஒதுக்குவதுபோல ஜாதி, மதத்தையும் ஒதுக்கி வைக்க வேண்டும்.தொழில்நுட்பம், அறிவியல் ரீதியாக சிந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

xyzabc
ஜூன் 01, 2025 02:11

அமலாக்க துறை பொறாமை படும் அளவுக்கு நிறைய பணம் இருக்கு. தமிழக மக்கள் பணத்துக்கு வோட்டை போடும் பண்பு உடையவர்கள். மாடல் ஆட்சியினர் பணம் கொடுப்பதில் தப்பு இல்ல.


Veeraputhiran Balasubramoniam
மே 31, 2025 21:18

அடுத்த "மானஸ்த்தன் கமலை" போல் திராவிட மாடெல் இறக்கி விட்டு தேர்தல் வரை திமுகவை தாறுமாறாக திட்டி த்ராவிட கூட்டணிக்கு எதிரான இளைஞர் வாக்குகளை பிரித்து எடுத்து விட்டு தேர்தல் முடிந்தவுடன் ரசிகர்களை விற்று வியாபாரம் முடிந்து சியல் கோடிகள் பெற்ரு விட்டு ஒரு ராஜ்ய சபா சீட்டை மிரட்டி நீட் ரகசியம் போல் சீட் உறுதி ரகசியம் சொல்லி உண்மைய வெளியில் சொல்லவா சீட் த்ற்றீங்களா என்றால் எம்பி சீட் நிசயம் அது தான் ரகசியம்


P NALINI
மே 31, 2025 13:45

மற்றகட்சிகளாவது தேர்தலகன் போதுதான் பணம் கொடுக்கின்றன இவர் தேர்தலுக்கு 1 ழருடம் இருக்கும் பொழுதே வைரக்கம்மல், வைர மோதிரம் வழங்கி மற்றகட்சிகளை குறைகூறி உள்ளார். என்னத்தச் சொல்ல........


senthilanandsankaran
மே 31, 2025 10:02

நீங்க நோட்டு பேனா கொடுத்து அதில் எல்லாம் உங்க படம் உங்க கட்சி கலர் எல்லாம் பொடுரத விட கேவலம் இல்லை. அரசு பள்ளியில் 10 வருடத்திற்கு முன்பே நீங்கள் உங்கள் படம் போட்ட நோட்டு தான் கொடுப்பேன் என்று அடம் பிடித்தது எல்லாம் உங்கள் உதவும் எண்ணம் அல்ல ...அரசியலுக்கு வர தமிழனை ஏமாற்றும் தந்திரத்தை உங்கள் அப்பா உங்களுக்கு சொல்லிக்கொடுத்த தந்திரம்.


புரொடஸ்டர்
மே 31, 2025 08:15

நீ பதுக்கியுள்ள பல லட்சம் கோடிகள் கருப்பு பணத்தை கொட்டுவதற்காகதானேடா அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளாய் ஜோசப் விஜய்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை