உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜய் அரசியலுக்கு வந்த பின் திருமாவுக்கு பெரும் குழப்பம்: பா.ஜ., அண்ணாமலை கிண்டல்

விஜய் அரசியலுக்கு வந்த பின் திருமாவுக்கு பெரும் குழப்பம்: பா.ஜ., அண்ணாமலை கிண்டல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி: சென்னையில் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதி மீது நடந்த தாக்குதலைக் கண்டித்து நடந்த அந்த ஆர்ப்பாட்டத்தில், ஒரு வழக்கறிஞரை தாக்குகின்றனர். திருமாவளவன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி., ஒரு கட்சித் தலைவர். இதுகுறித்து தமிழக அரசு முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பின் திருமாவளவன் எண்ண ஓட்டத்தில் பிரச்னை உள்ளது. அவர் குழம்பி போய் இருக்கிறார். வக்கீலை தாக்கியது குறித்து பதிவிட்டதற்காக என் மீது திருமாவளவன் குற்றம் சாட்டுகிறார். எத்தனை காலத்திற்கு வன்முறையை கையில் எடுத்து அரசியல் செய்வார். காஞ்சிபுரத்தில் தனியார் நிறுவனம் மருந்து தயாரித்ததில் ம.பி., யில் 23 குழந்தைகள், ராஜஸ்தானில் 3 குழந்தைகள் உயிரிழந்தனர். தமிழக அரசு மருந்து ஆய்வாளர்கள் இருவரை சஸ்பெண்ட் செய்திருக்கிறது. தமிழக அரசுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை போல, மாய தோற்றத்தை உருவாக்கி இருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Priyan Vadanad
அக் 13, 2025 02:10

அண்ணாமலையின் தொடர் குட்டிக்கதைகள். படிப்பதற்கு ஆர்வத்தை தூண்டும். ஆனால் விஷயமிருக்காது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை