உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வராகும் தகுதி திருமாவளவனுக்கு உண்டு: சீமான் ஆதரவு

முதல்வராகும் தகுதி திருமாவளவனுக்கு உண்டு: சீமான் ஆதரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாமக்கல்: '' விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு, முதல்வராக அனைத்து தகுதியும் உள்ளது. அவரை நாங்கள் ஆதரிப்போம்,'' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.நாமக்கல்லில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது: தமிழகத்தில் திராவிட நாடு எதற்கு வேண்டி இருக்கிறது. அதன் எல்லை எது? திராவிட நாடு இலக்கியத்தில் , வரலாற்றில் எங்கு உள்ளது. தமிழனை வசதியாக ஆள்வதற்கு திராவிட நாடு என சொல்கின்றனர். நான் தமிழன். அதனால் தமிழ்த்தாய் வாழ்த்தை தூக்குவேன் எனக்கூறுகிறேன். தமிழ்த்தாய் வாழ்த்து வேண்டாம் என சொல்லவில்லை. வேறு பாடலை வைப்பேன். திராவிடனுக்கு மொழி எது. தமிழ் என்பது எங்கள் மொழி. தமிழர்கள் என்பது இன அடையாளம். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dpz82syx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழ்த்தாய் வாழ்த்தை தூக்குவேன் என 2016 முதல் கூறி வருகிறேன். வேறு ஒருவரின் பாடலை வைப்பேன். பாரதிதாசன் பாடலை கூட வைப்பேன். பாவேந்தர் பாரதிதாசன் பாடலை வைக்க முடியாதா? தூய தமிழ் பாடலை வைப்பேன். திராவிடம், திராவிடம் எனக்கூறி திட்டமிட்டு அனைவரையும் வீழ்த்துகிறீர்கள். கீழடி நாகரிகத்தை தமிழக நாகரிகம் என சொல்ல மறுக்கிறார்கள்.யார் திராவிடர் என்பது குறித்து விவாதிக்க அமைச்சர் அன்பில் மகேஷ் தயாரா?விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் முதல்வர் ஆவதை வரவேற்கிறேன். அதற்கு அவருக்கு தகுதி உள்ளது. இதற்காக தமிழனாக, என்னை விட பெருமையும், மகிழ்ச்சியும் அடையும் நபர் வேறு யாரும் இருக்க முடியாது. அவரை எப்படியாவது முதல்வர் ஆக்குவோம். எல்.முருகன் இரண்டு முறை மத்திய அமைச்சர் ஆகும் போது திருமாவளவன் முதல்வர் ஆக முடியாதா ?திருமாவளவனின் முதல்வராகும் கனவு பலிக்காது என சொல்வதற்கு எல்.முருகன் யார் ? உள் ஒதுக்கீடுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தால் முதல்வராக விட மாட்டீர்களா? இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறோம். உள் ஒதுக்கீட்டை எதிர்க்கிறோம். தனித்து நிற்க தி.மு.க.,வுக்கு தைரியமில்லை. என்னை பார்த்து தி.மு.க., பயப்படுகிறது. விஜய் கட்சியை பார்த்தும் பயப்படுகிறது. இவ்வாறு சீமான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

NACHI
அக் 20, 2024 22:56

என்னடா பொழுது போச்சே,ஒன்னும் ஆகலயேன்னு நினைச்சேன் ,ஆயிருச்சு


Rajkumar
அக் 20, 2024 22:08

என்னப்பா முதலில் தேர்தலில்,தனியாக நின்று வெற்றி பெறுவாரா என்று தெரியவில்லை? அப்புறம் தான் மத்த கனவு எல்லாம்...


Narayanan Sa
அக் 20, 2024 21:54

தமிழ் நாட்டில் இருந்து கொண்டு தமிழ் எழுத பேச தெரியாது என்பது மஹா கேவலம். தமிழ் அரசியல் வாதிகள் என்றால் அவர்களுக்கு தமிழ் நன்கு தெரிந்து இருக்க வேண்டும். தெரியாதவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது. திமுக வின் தாரக மந்திமே தமிழ் தான் உயிர் என்கிறார்கள். அப்படி அந்த தமிழ் தெரியாவீட்டில் அவர் மனிதன் அல்ல பிணம்


Bala
அக் 20, 2024 20:30

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் ஆக்கிடறாங்கப்பா. கைப்புள்ள திருமா பாவம். மது ஒழிப்பு மாநாடு மந்திரிப்புலேந்து இன்னும் மீளல. அந்த ஆளு அம்பேத்கரேனு மகாராஷ்டிரா மாநில தேர்தலுக்கு போயிட்டாரு.....


ganapathy
அக் 20, 2024 20:24

சபாஷ் சரியான போட்டி


Ramesh Sargam
அக் 20, 2024 19:34

முதல்வர் பதவி என்ன கோயம்பேடு மார்க்கெட்டில் கிடைக்குமா, வாங்குவதற்கு...??


Ramesh Sargam
அக் 20, 2024 19:33

ஒருநாள் முதல்வராகும் தகுதி கூட அவருக்கு இல்லை.


vbs manian
அக் 20, 2024 19:32

சும்மா சொல்லக்கூடாது. நன்றாகவே கொளுத்தி போடுகிறார்.


Subramanian Nagarajan
அக் 20, 2024 19:03

Well done Seeman. Best diplomatic move to support Thiruma. Enter the enemy camp. Create differences. Make them to beat each other. Then you can deliver a death blow to who is left out. Wonderful plan. Keep it up. THIS IS THE BEST WAY TO ELIMINATE THE POLITICAL OPPORTUNISTS WHO ARE EXPLOITING INNOCENT TAMILIANS. THEY CAME WITHOUT TICKET. NOW YOU CAN SEND THEM BACK WITH TICKET


சாண்டில்யன்
அக் 20, 2024 19:01

தனக்கு தகுதியில்லையென டிக்ளேர் செய்துட்டாரோ


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை