உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தன் பலம் தெரியாத திருமாவளவன்

தன் பலம் தெரியாத திருமாவளவன்

அ.தி.மு.க., தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, தனித்தே ஆட்சி அமைக்கும். கூட்டணி ஆட்சி கிடையாது என்பதை பழனிசாமி பலமுறை தெளிவுபடுத்தி விட்டார். அதனால், நப்பாசையில் யாரும் கூட்டணி ஆட்சி என, பேசி குழப்பம் விளைவிக்கக் கூடாது. பழனிசாமி முதல்வராவதை, எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது. அ.தி.மு.க., என்றால் பழனிசாமி. பழனிசாமி என்றால் அ.தி.மு.க., என அமித் ஷாவிற்கும் தெரியும். கூட்டணி ஆட்சி என்று தொடர்ந்து வலியுறுத்தும் விவகாரத்தில் பழனிசாமி தான் சுப்ரீம் கோர்ட். திருமாவளவன் பலம் அவருக்கே தெரியவில்லை. தி.மு.க.,வை விட, அதிக ஓட்டு வங்கி வி.சி., கட்சிக்கு உள்ளது. ஓட்டு வங்கியை வைத்து சீட் பெற வேண்டும் என்ற எண்ணம், திருமாவளவனுக்கு இல்லை. அவர் தன்னுடைய செல்வாக்கை சீட் வாங்கும் விஷயத்தில் பயன்படுத்த வேண்டும். வி.சி.,க்கள் ஓட்டு மற்றும் சிறுபான்மையினர் ஓட்டுகளை கழித்துப் பார்த்தால், தி.மு.க.,வுக்கென எந்த ஓட்டு வங்கியும் கிடையாது. - விஸ்வநாதன், முன்னாள் அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை