உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பரங்குன்றம் விவகாரம்: மதுரை பழங்காநத்தத்தில் குவிந்த முருக பக்தர்கள்

திருப்பரங்குன்றம் விவகாரம்: மதுரை பழங்காநத்தத்தில் குவிந்த முருக பக்தர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இன்று மாலை 5 :00 மணி முதல் மாலை 6:00 மணிக்குள் மதுரை பழங்காநத்தம் பகுதியில் அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்த ஐகோர்ட் மதுரை கிளை அனுமதி வழங்கியது. இதனையடுத்து அங்கு திரளான முருக பக்தர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் முஸ்லிம்களின் தர்கா உள்ளது. தர்காவில் உயிர்பலி கொடுக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.இதனை கண்டித்து சில முஸ்லிம் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனை தொடர்ந்து இதனிடையே மலையை காக்க, இன்று (பிப்.,4) அறப்போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8dgtjgeo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கு மதுரை நகர போலீசார் அனுமதி மறுத்தனர். 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். இதனை எதிர்த்து ஐகோர்ட் மதுரை கிளையில் இந்து முன்னணி சார்பில் வழக்கு தொரப்பட்டது. வழக்கு விசாரணையின்போது, விழாக்காலமான பிப்., 11 வரை அனுமதி வழங்குவது கடினம் என அரசு தரப்பில் கூறப்பட்டு இருந்தது.இதனை விசாரித்த ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இன்று மாலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை பழங்காநத்தம் பகுதியில் இந்து முன்னணி போராட்டம் நடத்தலாம். இதற்கு போலீசார் உரிய பாதுகாப்பைத் தர வேண்டும். பொது அமைதிக்கு பிரச்னை ஏற்படுத்தாத வகையில் ஆர்ப்பாட்டம் இருக்க வேண்டும். ஆர்ப்பாட்டம் நடத்துவது உரிமை என்றாலும், அது அரசியலமைப்புக்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஒரு மைக் மட்டுமே பயன்படுத்த வேண்டும். வெறுப்பைத் தூண்டும் வகையிலான முழக்கங்கள் இருக்கக்கூடாது. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்து உள்ளனர்.

திரண்ட பக்தர்கள்

இதனையடுத்து மதுரை பழங்காநத்தத்தில் ஏராளமான முருக பக்தர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 105 )

Rasheel
பிப் 08, 2025 20:36

திருப்பரங்குன்றத்தில் இறந்து போனவன் பல அநியாயங்கள் காரணமாக பாண்டிய மன்னர்களால் கொல்லப்பட்டவன். இதுதான் வரலாறு.


Chanemougam Ramachandirane
பிப் 06, 2025 09:44

தவறு என்றல் திருத்தணும் அதுதான் அரசின் வேலை அலைக்கழிப்பது என்பது எதையோ எதிர்பார்ப்பதாகும். நம் மூதாதையர்கள் விட்டு சென்றதை மாற்ற யாருக்கும் உரிமை இல்லை இது உரிமை மீறல் ஆகும் என்பதினை நீதி மன்றம் தாமாக முன் வந்து சட்டம் ஒழுங்கு அறிந்து நடவடிக்கை எடுக்கணும் இவ்வளவு காலம் நீதிமன்றங்கள் மூதாதையர்கள் ஆண்டவர்கள் விட்டு சென்ற ஆவணங்களை ஆதாரத்தை சரியாக கையாளாமல் அதிகாரிகள் செய்த தவறினால் எனபதினை உணர்ந்து இனி டைட்டில் பிரச்சனை என்றல் சொத்தின் ஆவணங்கள் வில்லங்க சான்று சமர்பிக்காமல் வழக்கை காலம் தாழ்த்தாமல் தள்ளுபடி செய்வது மட்டும் இல்லாமல் இவ்வளவு காலம் அனுபவித்து வந்ததற்காக அவர்களிடம் நஸ்ட்ட ஈடு பெற்று பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சேர்க்கணும் இதுதான் நீதிமன்றத்தின் முதல் பணியாக இருக்க வேண்டும் ஏன் கட்டிடம் கட்டும் முன் அனுமதி தரும் துறை வருவாய் துறை அதிகாரிகள் முறைகேடுகளுக்கு துணை போகாமல் காவல் துறையிடம் புகார் அளிக்க முன் வரவேண்டும் .மக்கள் ஏன்போராடனும் அரசு சரியாக செயல்பட்டால் என்பதினை அதிகாரிகள் உணர்ந்து நடவடிக்கை எடுக்கணும் அட்டா ரீதியாக செயல்பட தான் அந்த பதவி என்று உணர்ந்து


Ray
பிப் 05, 2025 06:59

இதே மதுரையில் பாதி மலை காணாமல் போனபோது இவர்கள் எங்கே என்ன சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் என்று சொல்ல வேண்டும்.


sankar
பிப் 05, 2025 09:13

நீ என்னத்த செய்துகிட்டு இருந்தியோ


Mettai* Tamil
பிப் 05, 2025 11:06

முதலில் நீங்களும் ,உங்க கட்சிக்காரங்களும் ஊரை அடிச்சு உலையில் போட்டு என்ன சாப்பிட்டு கொண்டிருந்தீர்கள் என்று சொல்ல வேண்டும்.


ramani
பிப் 05, 2025 06:30

திராவிஷ அரசுக்கு சீக்கிரம் சாவுமணி அடிக்க படும்.


raja
பிப் 05, 2025 06:03

ஏண்டா... இந்துக்கள் மட்டும் சாவு ஊர்வலம் போனாலோ இல்லை சாமி ஊர்வலம் போனாலோ மசூதி வந்தால் தாரை தப்பட்டை மேளத்தை அடிக்காமல் அமைதியா போகனும்.. நீங்க நாங்க புனிதமா நினைக்கிற கோயில் இடத்தில் ஆடு மாடு கோழி வெட்டுவீங்க.. விப்பீங்க ..திம்பீங்களா..இனி நடக்காது .. இந்துக்கள் ஒன்ன ஆணாங்கன்னா நடப்பதே வேறு...


Karuthu kirukkan
பிப் 05, 2025 05:54

ஆகா வடை போச்சே ஜன்மானங்களை பெற்றுக்கொண்டு இன்று நடைபெறும் ஈரோடு இடை தேர்தலில் மாற்றி வாக்கு செலுத்துவதன் மூலம் முருகனின் பக்தர்கள் யார் என்று ஆளும் கட்சிக்கு காட்டவேண்டும் , கருப்பு சட்டை , கட்டுமரம் கவிழ்ந்து விடும் .. காக்க உக்கார பனம்பழம் விழப்போகுதே


நிக்கோல்தாம்சன்
பிப் 05, 2025 05:53

பல மதங்களின் போராட்டங்களை பார்த்துள்ளேன் , ஆனால் அமைதியாக தங்களின் இருப்பை காட்டிய தமிழக இந்துக்களுக்கு தலை வணங்குகிறேன் , கோவையில் தீவிரவாதியின் இறப்புக்கு கூடிய கூட்டத்தின் கூக்குரலும் , நேற்று இந்துக்களின் கூட்டத்தின் அமைதியும் வெவ்வேறு திக்கு , வாழ்த்துக்கள்


Ambika. K
பிப் 05, 2025 04:43

திராவிடம் அழிப்போம் தமிழகம் காப்போம்.


Kasimani Baskaran
பிப் 05, 2025 00:33

முகநூலில் தீம்க்கா ஐடி விங் போடும் அணைத்து பதிவுகளிலும் "திராவிடம்" என்ற வார்த்தை நீக்கப்பட்டு இருக்கிறது. வெங்காயம் உடைந்து விட்டது போல தெரிகிறது. இனி பசை போட்டு ஒட்டியது போல ஒரு மாயையை உருவாக்க முயல்வார்கள்.


KavikumarRam
பிப் 04, 2025 23:31

இந்த மத..வெறி திமுகவுக்கு ஒட்டு போட்ட இந்து முட்டாள்கள் மானம் கெட்ட இந்துக்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை