2025ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் திருநாள் விருதுகள் அறிவிப்பு
சென்னை: திருவள்ளுவர் திருநாள் விருதுக்கான விருதாளர்களை தமிழக அரசு அறிவித்தது.திருக்குறள் நெறி பரப்பும் பெருந்தகையாளர் ஒருவரைத் தேர்வு செய்து திருவள்ளுவர் விருதுகள் ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2025ம் ஆண்டுக்கான விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அய்யன் திருவள்ளுவர் விருதுக்கு மு.படிக்கராமுவும், பேரறிஞர் அண்ணா விருது தஞ்சை கீழையூரை சேர்ந்த எல். கணேசனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மகாகவி பாரதியார் விருது கவிஞர் கபிலனுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருதை பொன்.செல்வகணபதிக்கும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தென்றல் திரு.வி.க., விருது ரவீந்திரநாத்துக்கும், முத்தமிழ் காவலர் விசுவநாதம் விருது வே.மு. பொதியவெற்பனும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈ.வே.ரா. விருது விடுதலை ராஜேந்திரனுக்கும், அண்ணல் அம்பேத்கரின் விருது எம்.பி., ரவிக்குமாருக்கும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கருணாநிதி விருது முத்து வாவாசிக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதைப் பெறுபவர்களுக்கு ரூ.10 லட்சம் ரொக்கமும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும் வழங்கப்படும். இதில், ஈ.வெ.ரா., விருது மற்றும் அண்ணல் அம்பேத்கர் விருது பெறுபவர்களுக்கு ரூ.5 லட்சம் மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜன.,15ல் நடக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்