உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையின் தற்போதைய நிலை இதுதான்: 3 சுரங்கப்பாதைகள் மூடல்!

சென்னையின் தற்போதைய நிலை இதுதான்: 3 சுரங்கப்பாதைகள் மூடல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் ரங்கராஜபுரம், கெங்குரெட்டி, மேட்லி சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளன. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.பெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. சென்னையில் பெய்த மழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lu4ygh55&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0* ரங்கராஜபுரம், கெங்குரெட்டி, மேட்லி சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளன. மழை நீர் தேங்கி உள்ளதால், அழகப்பா சாலை, லூப் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.* பர்னாபி சாலை, நாகேஸ்வரா பூங்கா, அண்ணா மேம்பாலம் சர்வீஸ் சாலை, ஸ்ரீ மான் ஸ்ரீநிவாசா சாலயைில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.* திருமலைபிள்ளை சாலையில் மரம் விழுந்ததால், போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றம்

அழகப்பா சாலை மூடப்பட்டுள்ளது. அவ்வழியாக வரும் வாகனங்கள் புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக திரும்பி நாயர் பாயிண்ட் சென்று ஈ.வி.ஆர்., சாலையை அடையலாம். லூப் சாலை (மூடப்பட்டது). அவ்வழியாக வரும் வாகனங்கள் சாந்தோம் ஹை ரோடு வழியாக செல்ல வேண்டும். இவ்வாறு சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

வைகுண்டேஸ்வரன்
டிச 01, 2024 13:14

தத்தளிக்கும் புதுச்சேரி. இது பற்றி யாரும் எதுவும் பேசவில்லையே? பாஜக, என் சி ஆர் கூட்டணி ஆட்சி தானே இங்கே?? எப்படி பேசுவார்கள்??


sankar
டிச 01, 2024 17:16

புதுசேரியின் வடிகால் வசதிகள் சிறப்பானவை - வேணும்னா போயி பாரு இருநூறு - அதை போல இங்கே கொட்டியிருந்தால் நாறிப்போயிருக்கும்


வைகுண்டேஸ்வரன்
டிச 01, 2024 11:35

அமித்ஷா ரபேல் விமான ஊழலின் போது சொன்னதை நினைத்துப் பார்க்க. "இங்கே கூவதீர்கள் ஆதாரம் இருந்தால் கேஸ் போடுங்கள் ". இதைத்தான் இங்கே 4000 கோடி, 4000 கோடி என்று கூப்பாடு போடுபவர்களுக்கு சொல்ல வேண்டும். ஆதாரம் இருந்தால் கேஸ் போடுங்கள். பாஜகவிடம் தானே ED, CAG, CVC எல்லாம் இருக்கு.


sankar
டிச 01, 2024 12:48

இப்படி பேச சொல்லுது


Rajan
டிச 01, 2024 16:15

வேஸ்ட் போஸ்ட்


Devanand Louis
டிச 01, 2024 11:09

அந்த 4000 கோடிகள் எங்கு சென்றது என்பதை இப்பொழுது சென்னை மக்கள் புரிந்துகொண்டனர். குடும்ப அமைச்சர்கள் மற்றும் அல்லைக்கை அமைச்சர்கள் மற்றும் lipstick அழகி கூட்டாக கொள்ளைக்கூடாரமாக சென்னையில் 4000 கோடிகளை பகிர்ந்து கொள்ளை .வடிகால் பணிகளில் ஒன்றும் செய்யவில்லையென்பது சென்னை மக்களுக்கு இப்பொழுது தெரிந்துவிட்டது. அண்ணாமலையின் DMK பைல்கள் அனைத்தையும் புரட்டிப்பார்க்கும் நேரம்வந்துவிட்டது


Rajan
டிச 01, 2024 16:16

பிஜேபி எதிர்க்கட்சியாக செயல்பாடு ஒன்றும் சொல்வது போல் இல்லை


M Ramachandran
டிச 01, 2024 11:02

காதுலே பூ சுத்துதல்


sankar
டிச 01, 2024 10:15

நாலாயிரம் பற்றி யாரும் கேட்கக்கூடாது


Kalyanaraman
டிச 01, 2024 09:51

4000 கோடி செலவு செய்ததால் இந்த மழைக்கே இவ்வளவு பாதிப்பு.


சக்திவேல்,நங்கநல்லூர்
டிச 01, 2024 10:44

சென்னையில் இருக்கும் பெரும்பாலான சாலைகளில் மழை வெள்ளத் தண்ணீர் தேங்க வில்லையாம் ஆனால் தரைத்தளங்கள் உள்ள அனைத்து வீடுகளிலும் நீர் புகுந்து விட்டதாம் எப்படி இருக்கு இந்த தமிழக RSB மீடியாக்களின் உருட்டு?


MARI KUMAR
டிச 01, 2024 09:25

தண்ணீர் தேங்கியுள்ள சுரங்கப் பாதைகளில் மக்கள் போகாமல் இருப்பதை உறுதி செய்ய அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்


கூமூட்டை
டிச 01, 2024 09:21

மழைநீர் சேகரிப்பு இது திராவிட கூமூட்டை மாடல் வாழ்க வளமுடன் அகண்ட ஊழல் திராவிடம்


சாண்டில்யன்
டிச 01, 2024 09:12

இதில் குறிப்பிடப் பட்டுள்ள இடங்கள் மட்டுமே சென்னையோ மிகச்சிறிய வட்டமாக உள்ளதே சென்னை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை