உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இதெல்லாம் ரொம்ப அதிகம்: தி.மு.க., குற்றச்சாட்டுக்கு மார்க்சிஸ்ட் பதில்

இதெல்லாம் ரொம்ப அதிகம்: தி.மு.க., குற்றச்சாட்டுக்கு மார்க்சிஸ்ட் பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விழுப்புரம்: '' தி.மு.க.,வால் தான் எங்களுக்கு வெளிச்சம் கிடைக்கிறது என்பது ரொம்ப அதீதமான வார்த்தை'', என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலர் சண்முகம் கூறியுள்ளார்.அரசின் செயல்பாடுகளை விமர்சித்த மார்க்சிஸ்ட் கட்சியின் கே.பாலகிருஷ்ணனை கண்டித்து, தி.மு.க., தனது கட்சிப் பத்திரிகையில் எழுதிய தலையங்கத்தில் ''பொத்தாம் பொதுவாக வாய்க்கு வந்ததை பாலகிருஷ்ணன் சொல்வதற்குக் கிடைக்கும் முக்கியத்துவம் என்பது அந்தக் குற்றச்சாட்டுகளுக்கான அழுத்தம் அல்ல. கூட்டணியில் இருப்பதால் கிடைக்கும்' வெளிச்சங்கள் மட்டுமே'', எனக்குறிப்பிட்டு இருந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=z40gigit&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0விழுப்புரத்தில் மாநில செயலாளர் ஆக தேர்வான பிறகு நிருபர்களை சந்தித்த சண்முகத்திடம், இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு பதிலளித்து சண்முகம் கூறியதாவது: ஊர்வலம், ஆர்ப்பாட்டம் எல்லாம் அரசியலமைப்பு, இந்திய மக்களுக்கு வழங்கிய அடிப்படை உரிமை. இதனை மறுப்பதற்கு அரசுக்கு உரிமை கிடையாது. கட்சியின் செந்தொண்டர் பேரணிக்கு விழுப்புரம் போலீசார் அனுமதி மறுத்ததால் கண்டனம் தெரிவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. கட்சியின் மாநில மாநாட்டுபேரணிக்கு அனுமதி மறுப்பு என்பதை ஏற்க முடியாது. போலீசாரின் அணுகுமுறைக்கு பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தார். இதனை தி.மு.க., புரிந்து கொள்ளும்.தி.மு.க.,வோடு பல நேரத்தில் உறவாக இருந்து இருக்கிறோம். பல நேரத்தில் எதிர் வரிசையில் வேறு அணியில் இருந்து இருக்கிறோம். இவர்களால் எங்களுக்கு வெளிச்சம் கிடைக்கிறது என்பது ரொம்ப அதீதமான வார்த்தை. நிச்சயமாக மார்க்சிஸ்ட் கட்சி, பலத்திற்கு ஏற்ப மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளில் சமரசம் அற்ற வகையில் போராட்டம் நடத்துவதால் தமிழக மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற கட்சியாக இருக்கிறதே தவிர, ஏதோ தி.மு.க., வெளிச்சத்தில் மார்க்சிஸ்ட் கட்சி செயல்படுகிறது என்கிற தி.மு.க., தலைமை சொல்வது பொருத்தமல்ல. முரசொலி பத்திரிகையில் வெளியிட்ட செய்தி பொருத்தமானது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.சண்முகம் மேலும் கூறியதாவது: பா.ஜ., அரசு மாநில அரசின் அதிகாரங்களை பறிப்பது, மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவது, அரசியலமைப்புக்கு மாறாக நடந்து கொள்வது போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. பா.ஜ.,வின் கொள்கைகளுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி வலிமைமிக்க போராட்டத்தை தமிழகத்தில் முன்னெடுக்க முடிவு செய்துள்ளது.மதவெறி சக்திகளை எதிர்ப்பதில் தி.மு.க., உடன் தொடர்ந்து மார்க்சிஸ்ட் பயணிக்கும். தமிழகத்தில் நவீன தாராளமய கொள்கை அமல்படுத்துவது என்ற பெயரில் மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக ஜனநாயக பூர்வமான முறையில் எங்களின் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Dharmavaan
ஜன 06, 2025 07:46

எதிர் கட்சிகளின் ஊர்வலம் ஆர்பாட்டம் இவற்றை போலீஸ் தடுப்பதை கோர்ட் ஏன் கண்டிக்கவில்லை ஏன் நிரந்தர தடை போடவில்லை


Mani . V
ஜன 06, 2025 06:13

பார்ரா, அடிமைகளுக்கு கோபத்தை.


Rajarajan
ஜன 06, 2025 05:41

கம்யூனிஸ்டை விட ஒரு வோட்டு அதிகமாக வாங்கும் தனி வேட்பாளர்கள் எல்லா தொகுதிகளிலும் உள்ளனர். எனவே, கம்யூனிஸ்டை கழட்டிவிட்டு, ஒட்டுமொத்தமாக ஒழிக்கவேண்டும். காலத்திற்கொவ்வாத காளான் அது.


seshadri
ஜன 06, 2025 01:07

திமுக எப்படி வாக்காளர்களை காசு கொடுத்து விலைக்கு வாங்கி தேர்தலில் ஜெய்கிறதோ அதே மாதிரி கூட்டணி காட்சிகளையும் விலைக்கு வாங்கி வைத்திருக்கிறது. என்ன விலைதான் மிக அதிகம். இந்த கூவல் எல்லாம் வெளியில்தான் உள்ளே பேட்டி பாம்பாக சுருண்டு மேலும் எவ்வளவு பெட்டி கிடைக்கும் என்றுதான் பார்ப்பார்கள். எனவே இதெல்லாம் வெறும் வெளி வேஷம்.


தாமரை மலர்கிறது
ஜன 06, 2025 00:42

கம்யூனிஸ்ட்கள் இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைத்தவர்கள் என்ற அடிப்படையில் இவர்களை என்றோ இந்தியர்கள் புறக்கணித்துவிட்டார்கள்.


SRIRAM
ஜன 05, 2025 22:58

புதிய தலைவர் 16அடி பாய பார்கிறார் that means 2516=400 கோடி....


Vijay
ஜன 05, 2025 22:28

அவ்வளவு சூடு சுரணை இருந்தால் கூட்டணியை விட்டு வெளியே வாங்க.


C M Amrtheswaran
ஜன 05, 2025 21:49

வெளியில் பேசுவது வேறு அது நாங்களும் குறைகளை எதிர்த்து குரல் கொடுத்தோம் என்று சொல்வதற்காகப் பேசுவது குறிப்பாக பத்திரிகையாளர்களுக்கானது. பொது மக்களுக்கும் சேர்த்து சொல்வது. அப்போதுதான் கட்சி மீது விமர்சனம் வந்தால் மக்களிடம் உதாரணமாகக் கூறுவதற்கு வசதி ஏற்படும். கட்சியில் உள்ளவர்கள் கட்சியில் கொள்கை மீது விமர்சனம் வைத்தால் அவர்களை சமாளிக்கவும் உதவும். மற்றபடி கம்யூனிஸ்ட்கள் பொதுவில் நாடாளுமன்றத்தில் எதிர்த்துப் பேசிவிட்டு வாக்கெடுப்பு வரும் போது வெளிநடப்பு செய்து காங், திமுகவினரிடம் நற்பலன்களைப் பெற்றுக் கொள்வது வாடிக்கைதான். இப்போது கடந்த சில ஆண்டுகளாக நல்லபடியாக சொம்பு தூக்கி திமுகவிடம் நற்பெயர் பெற்றுள்ளார். ஆனால் பேசாமலேயே இருந்து விட்டதாக பிற்காலத்தில் தன்மீது விமர்சனம் வரும் போது நான் கூட்டணியில் இருந்தாலும் சமூக அரசியல் சார்ந்த விமர்சனம் வைக்கத் தவறவில்லை என்று தன்னிலை விளக்கம் கொடுக்க இன்றைய பேச்சு உதவும். அவ்வளவுதான். புதிய தலைவர் சண்முகமும் அதே பாணியில் பேசியுள்ளார். தேர்தல் வேறு வரப் போகிறது கொஞ்சம் சேர்த்துப் போட்டுக் கொடுங்க முதலாளி ‼️என்பதாகவே உள்ளது சிபிஎம்மின் விழுப்புரம் அறைகூவல்.


Chelliah Ramasamy
ஜன 05, 2025 21:34

கழகம் கூட்டணிக் கட்சிகளை வாக்கு வங்கி யாக மட்டுமே பயன் படுத்தும். ரா. செல்லன்


சுராகோ
ஜன 05, 2025 20:42

இவர்கள் கம்னுவிஸ்ட் இல்ல ஈன பிறவிகள். மத்திய அரசை கண்டித்துதான் போராட்டம் தமிழ் நாட்டில் விலைவாசி உயர்வை கண்டித்து ஒரு போராட்டம்.... இவர்களுக்கு தகுதியில்லை.