உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (ஏப்ரல் 03) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய போக்சோ

இரு இளைஞர்களுக்கு 'கம்பி'திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள சத்திரப்பட்டியைச் சேர்ந்த தம்பதியின் மகள், மணப்பாறையில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார். இவர், ஏப்., 1ம் தேதி பள்ளி சென்றுவிட்டு, பஸ்சில் ஊருக்கு வந்துள்ளார்.அப்போது சத்திரப்பட்டி பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த இரு இளைஞர்கள், மாணவியை வழிமறித்து தவறாக நடக்க முயன்றுள்ளனர். மாணவி கூச்சலிட்டதால், இளைஞர்கள் தப்பியோடினர். மாணவியின் பெற்றோர், மணப்பாறை மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் போக்சோ வழக்கில், பணப்பட்டியைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் கிளீனர் பார்த்திபன், 23, சீத்தப்பட்டியைச் சேர்ந்த அஜித்குமார், 23, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.பாதிரியார் நண்பருடன் கைதுதிருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே புரத்தாக்குடியில் துாய சவேரியார் பள்ளி மாணவர் விடுதி வார்டனாக, கும்பகோணத்தைச் சேர்ந்த குழந்தைநாதன், 48, என்ற பாதிரியார் உள்ளார்.இவரது நண்பர் சுந்தர்ராஜன், 40, திருச்சி கல்லுாரியில் முதுகலை படித்துக் கொண்டு, பாதிரியார் ஆவதற்கு இறையியல் கல்லுாரியிலும் படித்து வருகிறார்.சுந்தர்ராஜன், வார விடுமுறை நாட்களில் குழந்தைநாதனை பார்க்க, பள்ளி விடுதிக்கு வந்து தங்குவார். அப்போது, அங்குள்ள மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவர்கள் குழந்தைநாதனிடம் தெரிவித்தபோது, அவர் கண்டுகொள்ளவில்லை. திருச்சி மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் புகார் அளிக்கப்பட்டது.அதிகாரிகள் விடுதி மாணவர்களிடம் விசாரணை நடத்தியதில், ஏழு மாணவர்களுக்கு சுந்தர்ராஜன் பாலியல் தொல்லை அளித்ததும், குழந்தைநாதன் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது. லால்குடி மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து, குழந்தைநாதன், சுந்தர்ராஜன் ஆகியோரை நேற்று கைது செய்தனர். பேராசிரியர் மீது வழக்குதுாத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் பாரதியார் நுாற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரியில், முதலாம் ஆண்டு படிக்கும் 17 வயது மாணவிக்கு, மெக்கானிக்கல் பிரிவு பேராசிரியர் மதன்குமார், 31, பாலியல் தொல்லை அளித்துள்ளார். மாணவி, கல்லுாரி முதல்வரிடம் புகார் அளித்தார். முதல்வர் பேபி லதா தலைமையில், ஒன்பது பேர் குழு மாணவியிடம் விசாரித்தது.இதற்கிடையே, புகார் அளித்த மாணவியை சிலர் மிரட்டியதாக புகார் எழுந்தது. விளாத்திகுளம் மகளிர் போலீசார் நேற்று முன்தினம் மாணவியிடமும், பேராசிரியர் மதன்குமாரிடமும் தனித்தனியே விசாரணை நடத்தினர். மதன்குமார் மீது நேற்று போக்சோ வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்யவில்லை.சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகக் கூறி போலீசார் கைது நடவடிக்கையை தவிர்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பேராசிரியரை கைது செய்ய, ஜனநாயக மாதர் சங்கம், பா.ஜ., உட்பட பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதற்கிடையே, மதன்குமார் மீது பொய்யான குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளதாகக் கூறி, பாலிடெக்னிக் கல்லுாரியில் பயிலும் 60 மாணவியர் நேற்று வகுப்புகளை புறக்கணித்து, சிறிது நேரம் தர்ணாவில் ஈடுபட்டனர்.பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி., திபு, விளாத்திகுளம் டி.எஸ்.பி., அசோகன், எட்டையபுரம் தாசில்தார் சுபா ஆகியோர் கல்லுாரியில் முகாமிட்டு விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Perumal Pillai
ஏப் 04, 2025 10:25

மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். வித்தியாசமானவர் போலும் .


Svs Yaadum oore
ஏப் 04, 2025 09:35

இந்த லட்சணத்தில் இறையியல் படிப்பாம் ....


Svs Yaadum oore
ஏப் 04, 2025 09:32

காசாவது மிச்சமாகும்


karupanasamy
ஏப் 04, 2025 09:01

இன்னும் ஓராண்டு கழித்து புதிய ஆட்சியில் அந்த சாரையும் கைது செய்வோம்.


SuBa
ஏப் 04, 2025 08:31

Sad to see this, but good initiative to bring awareness, kindly publish this daily


MARUTHU PANDIAR
ஏப் 04, 2025 08:18

புல்லரிச்சு போச்சுப்பா, அப்படியே


Nallavan
ஏப் 04, 2025 08:07

NV க்கு கட்சி பார்த்து வருவதில்லை உணர்வு எந்த ஆட்சி என்றாலும் வரும், திருடனை பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஒழிக்க முடியாது


Svs Yaadum oore
ஏப் 04, 2025 09:31

திருடனை பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஒழிக்க முடியாது....அப்ப எதுக்கு போலீஸ் , கோர்ட்டு , கட்சி , மந்திரி , அரசாங்கம் ??....எல்லாத்தையும் கலைத்து விடலாம் ...


nv
ஏப் 04, 2025 07:45

தினமும் திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைக்கும் பாராட்டு!! தமிழக காவல்துறைக்கு கிடைக்கும் பதக்கம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை