மேலும் செய்திகள்
அ.தி.மு.க., கவுன்சிலர் நீக்கம்
3 hour(s) ago
நீதிமன்ற செய்திகள்
4 hour(s) ago
யு.பி.எஸ்.சி., முதன்மை தேர்வு முடிவு
4 hour(s) ago
மதுரை: 'திறமையானவர்களை முதல்வர் பயன்படுத்திக் கொள்வதால்தான் அ.தி.மு.க.,வில் இருந்து வந்தவர்களுக்கு, தி.மு.க.,வில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது' என மதுரையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். அவர் கூறியதாவது: நெடுஞ்சாலைத் துறை பணிகளுக்கு லஞ்சம், கமிஷன் இருப்பதாக தகவல் உள்ளது என்கிறீர்கள். உறுதிப்படுத்தாத தகவல்களுக்கு அமைச்சர் நான் எப்படி பதிலளிக்க முடியும். தவறு இருப்பதாக புகார் வந்தால் நடவடிக்கை எடுத்து, பலரை தற்காலிகமாக பணிநீக்கம் செய்திருக்கிறேன். அதில் உண்மை இல்லை என்று தெரிந்தால் மீண்டும் பணியில் அமர்த்தியும் இருக்கிறேன். முதல்வர் ஸ்டாலின் தொகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கள்ள ஓட்டுகள் இருந்ததாகக் கூறும் எதிர்க்கட்சியினர் எல்லாம் சென்சஸ் அலுவலரா. அரசியலில் தனது இருப்பைக் காட்டிக் கொள்ள எதிர்க்கட்சியினர் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறுவர். வாக்காளர் சிறப்பு திருத்தப்பணியை யாரும் ஆதரிக்கவில்லை. ஆனால் பழனிசாமி மத்திய அரசுக்கு ஒத்துஊதுகிறார். இது மழைக்காலம், ஜனவரியில் பொங்கல் பண்டிகை வந்துவிடும். அதன்பின் தேர்தல் அறிவிப்பு வரும். எனவே இதுபோன்ற நெருக்கடியில் இப்போது இந்தப்பணி தேவையில்லை என்கிறார் முதல்வர் ஸ்டாலின். அவசரம் வேண்டாம் என்பதால் எதிர்க்கிறோம். தி.மு.க.,வில் கட்சிக்காக பல ஆண்டுகளாக உழைத்தவர்கள் இல்லையா. முக்கிய அமைச்சர்களாக அ.தி.மு.க.,வில் இருந்து வந்தவர்களே உள்ளனர் என்கிறீர்கள். திறமை எங்கு, யாரிடம் உள்ளது என அறிந்தே அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இங்கும் உழைத்த துரைமுருகன், நேரு, தங்கம் தென்னரசு உட்பட பலர் அமைச்சர்களாக உள்ளனரே. இங்கு திறமைதான் பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
3 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago