உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  தீபத்துாணில் தீபம் ஏற்றுவதை தடுப்போர் முட்டாள்கள்: தர்மேந்திர பிரதான்

 தீபத்துாணில் தீபம் ஏற்றுவதை தடுப்போர் முட்டாள்கள்: தர்மேந்திர பிரதான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: ''தமிழிலிருந்து எவ்வாறு திருக்குறளை நீக்க முடியாதோ, அதுபோல்தான் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதை தடுக்க முடியாது,'' என மதுரையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் முடித்த தர்மேந்திர பிரதான் அளித்த பேட்டி: ராமேஸ்வரத்தில் காசி தமிழ்ச் சங்கமத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம். பிரதமர் வழிகாட்டுதல்படி, கலை, பண்பாடு, கலாசாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், காசி தமிழ்ச் சங்கமம் ஆண்டு தோறும் நடந்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கையின் படி, ஒவ்வொரு மாநிலத்திலும் தாய்மொழியே கல்வி முறையாக இருக்க வேண்டும். தமிழகத்தில் தமிழ் தான் கல்வி போதிக்கும் மொழியாக இருக்க வேண்டும். அதுதான் தேசிய கல்விக் கொள்கை. தமிழகத்தில் ஆளும் தி.மு.க., அரசு, தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் என எதிர்பார்க்கிறோம். 'திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றலாம்' என்ற நீதிபதியின் தீர்ப்புக்கு அனுமதி மறுத்து, அரசியல் ரீதியாக, இதை தமிழக அரசு கையாளுவது கண்டிக்கத்தக்கது. ஹிந்துக்கள் புனிதமாக கருதும் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதை தடுக்க கூடியவர்கள் முட்டாள்கள். அவர்களுக்கு சிவபெருமான் பாடம் புகட்டுவார். தமிழிலிருந்து எவ்வாறு திருக்குறளை பிரிக்க முடியாதோ, அதுபோல்தான் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார். பின், திருப்பரங்குன்றம் மலையில் தீபத்துாணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி தீக்குளித்து இறந்த பூர்ணசந்திரன் குடும்பத்தினரை சந்தித்து, அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆறுதல் கூறினார். அப்போது குடும்பத்தினர், உதவி கேட்டு அமைச்சரிடம் மனு அளித்தனர். நிதியை முதல்ல விடுவிங்க. தமிழக பிள்ளைகளுக்கு சேர வேண்டிய ரூ.2,291 கோடி கல்வி நிதியை விடுவிப்பதைத் தவிர, தமிழகத்தில் நடக்கும் மற்ற எல்லாவற்றிலும் மத்திய பா.ஜ., அரசு ஆர்வம் காட்டுகிறது. இதைத்தான், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மதுரையில் தன் கருத்தாக வெளிப்படுத்தி உள்ளார். முதல்ல நிதியை விடுவிச்சுட்டு, மற்றதை பேசுங்க. கனிமொழி, எம்.பி., - தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ஜெய்ஹிந்த்புரம்
ஜன 01, 2026 08:56

தமிழக பிள்ளைகளுக்கு சேர வேண்டிய ரூ.2,291 கோடி கல்வி நிதியை விடுவிப்பதைத் தவிர, தமிழகத்தில் நடக்கும் மற்ற எல்லாவற்றிலும் மத்திய பா.ஜ., அரசு ஆர்வம் காட்டுகிறது. முதல்ல நிதியை விடுவிச்சுட்டு, மற்றதை பேசுங்க. — கனிமொழி, எம்.பி., - தி.மு.க.


Palanivelu Kandasamy
ஜன 01, 2026 08:13

மிகவும் சரி.


ஜெய்ஹிந்த்புரம்
ஜன 01, 2026 02:35

ஸ்மிருதி தர்மம் பஞ்சாயதன முறையில் சிவன், விஷ்ணு, சக்தி, சூரியன், கணபதி என்ற ஐந்து உருவகங்களை கடவுளாக வழிபடும் வழக்கம் கொண்ட வடக்கன்ஸ், முருகன் என்றால் கோழியா என்று கேட்பார்கள். அவர்கள் இன்று கிளம்பி வந்து திருப்பரங்குன்றத்திலே வெளக்கு ஏத்தணும்ன்னு கதையளக்குறார்


மேலும் செய்திகள்







புதிய வீடியோ