தமிழகத்தில் நீதித்துறைக்கு அச்சுறுத்தல்
நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற தி.மு.க., அரசு மறுக்கிறது. திருப்பரங்குன்றத்தில் ஒரு பக்கம் சமணர் துாண் எனவும், மறுபுறம் சர்வே கல் எனவும் கூறி வருகிறது. விட்டால் சலவைக் கல் எனவும் கூற வாய்ப்புள்ளது. எந்த நாட்டில் 15 அடியில் சர்வேகல் வைக்கப்பட்டுள்ளது. தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யும் மசோதாவில் தி.மு.க., - எம்.பி., க்கள் கையெழுத்திடுகின்றனர். இதுபோல, நீதித்துறையை அச்சுறுத்தும் நிலையை தமிழகம் இதுவரை சந்தித்ததில்லை. - உதயகுமார் முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,