உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  முன்னாள் எம்.எல்.ஏ., சுட்டு கொல்லப்பட்ட வழக்கு; பவாரியா கொள்ளையர் மூவருக்கு ஆயுள் தண்டனை

 முன்னாள் எம்.எல்.ஏ., சுட்டு கொல்லப்பட்ட வழக்கு; பவாரியா கொள்ளையர் மூவருக்கு ஆயுள் தண்டனை

சென்னை: அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சுதர்சனம் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், பவாரியா கொள்ளையர் மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., கே.சுதர்சனம். இவர், பெரியபாளையம் அருகே உள்ள தானாகுளத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். ஆயுதங்களால் தாக்குதல் கடந்த 2005 ஜனவரி 9ல், தன் குடும்பத்தினருடன் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார். அப்போது, வடமாநிலத்தை சே ர்ந்த ஆறு பேர் கும்பல், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து, சுதர்சனத்தின் மகன்களான விஜயகுமார் மற்றும் சதீஷ்குமாரை ஆயுதங்களால் தாக்கியது. வீட்டின் மாடியில் துாங்கிக் கொண்டிருந்த சுதர்சனம், சத்தம் கேட்டு கீழே வந்தார். அப்போது, அந்த கும்பல் அவரை துப்பாக்கியால் சுட்டதில், சுதர்சனம் உயிரிழந்தார். பின், அந்த கும்பல் சுதர்சனம் வீட்டில் இருந்த 62 சவரன் நகை, பணத்தை கொள்ளையடித்து தப்பிச்செல்ல முயன்றது. அதற்குள் அங்கு கூடிய அப்பகுதி மக்கள், கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர். ஆனால், பொது மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டபடி அந்த கும்பல் தப்பியோடியது. கொள்ளையர்களை பிடிக்க, அப்போதைய ஐ.ஜி., ஜாங்கிட் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, ஹரியானா மாநிலத்தை சேர்ந்த பவாரியா கொள்ளையர்கள் ஓம் பிரகாஷ், அவரது சகோதரர் ஜெகதீஷ் மற்றும் ராகேஷ், ராஜஸ்தானை சேர்ந்த அசோக், பஞ்சாபை சேர்ந்த ஜெயில்தர் சிங் மற்றும் மூன்று பெண்கள் உள்பட 32 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்; அவர்களில், ஒன்பது பேரை கைது செய்தனர். இவர்களில் சிறையில் இருந்த ஓம்பிரகாஷ் உள்பட இருவர் இறந்தனர். ஜாமினில் வெளியே வந்த மூன்று பெண்கள் தலைமறைவாகினர். அந்த பெண்கள் உள்பட, 10க்கும் மேற்பட்டோர் தற்போது வரை தலைமறைவாகவே உள்ளனர். இ தைத்தொடர்ந்து, மற்ற நான்கு பேர் மீதான வழக்கு விசாரணை, சென்னை 15வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 20 ஆண்டு வழக்கு இந்த வழக்கில், 50-க்கும் மேற்பட்டோர் சாட்சியம் அளித்தனர். 20 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த வழக்கில், போலீசார் தரப்பில் கூ டுதல் அரசு வழக்கறிஞர் ஜி.சீனிவா சன் ஆஜரானார். குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தரப்பில், மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு, வழக்கறிஞர் சிவாஜி ஆகியோர் வாதாடினர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோர் குற்றவாளி என, நீதி பதி எல்.ஆபிரகாம் லிங்கன் கடந்த 21ல் அறிவித்தார். இதை யடுத்து, நேற்று மாலை அவர்களுக்கான தண்டனை விபரங்களை, நீதிபதி அறிவித்தார். கூட்டுக்கொள்ளை, கொலை மற்றும் பயங்கர ஆயுதங்களை பயன்படுத்தியது, குற்றத்திற்கு துாண்டியது போன்ற குற்றச் சாட்டுகளின் கீழ், குற்றவாளிகள் ஜெகதீஷ், அசோக் ஆகியோருக்கு, த லா நான்கு ஆயுள் தண்டனையும், தலா, 40,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மற் றொரு குற்றவாளியான ராகேஷுக்கு, கூட்டுக்கொள்ளை, கொலை மற்றும் பயங்கர ஆயுதங்களை பயன்படுத்தியது, ஆயுத சட்டம் போன்ற குற்றச்சாட்டின் கீழ், ஐந்து ஆயுள் தண்டனையும், 50,000 ரூ பாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயில்தர் சிங் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்பதால், அவரை விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளித்தார். ஒவ்வொரு குற்றச்சாட்டின் கீழும் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை, ஒன்றன் பின் ஒன்றாக, குற்றவாளிகள் மூவரும் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை