உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடலூரில் பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்த மூவர்: கொலை செய்து எரித்துச்சென்ற கொடூரம்

கடலூரில் பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்த மூவர்: கொலை செய்து எரித்துச்சென்ற கொடூரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கடலூர்: கடலூரில் பூட்டியிருந்த வீட்டுக்குள் மூவர் கொலை செய்யப்பட்டு, அவர்களை எரித்துச்சென்றுள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.கடலூர் மாவட்டம் காராமணி குப்பம் பகுதியில் வசிக்கும் சுரேஷ்குமார் - கமலீஸ்வரி (வயது 60) தம்பதிக்கு இரு மகன்கள். இதில் சுரேஷ்குமார் கம்பவுண்டராக பணிபுரிந்து ஓய்வுப்பெற்ற சுரேஷ்குமார் கடந்த 6 மாதத்திற்கு முன்னதாக உயிரிழந்தார். மூத்த மகன் சுரேந்திர குமார் (வயது 42) ஆந்திராவின் காக்கிநாடா பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இளைய மகன் சுகந்த் குமார் (வயது 40) ஹைதராபாத்தில் வசிக்கிறார். இவரது மகன் நிஷாந்த் குமார் (வயது 9) பாட்டி கமலீஸ்வரியுடன் காராமணி குப்பத்தில் தங்கியுள்ளார்.சுகந்த் குமார் கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக கமலீஸ்வரி வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் கமலீஸ்வரியின் வீடு வெளியே பூட்டப்பட்டிருந்த நிலையில், வீட்டினுள் இருந்து புகை நாற்றம் வெளிவந்ததை அடுத்து, அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் அளித்தனர். வீட்டை திறந்து பார்க்கையில் கமலீஸ்வரி, சுகந்த் குமார், நிஷாந்த் ஆகிய மூவரும் எரிந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளனர். மேலும் வீடு முழுவதும் ரத்தக்கறையும் பரவிக்கிடந்துள்ளது. இதனால் யாரோ மூவரையும் கொலை செய்துவிட்டு அவர்களை எரித்து சென்றது தெரியவந்தது. கொலை குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

lana
ஜூலை 15, 2024 16:21

பேசாமல் விடியா அரசு தமிழக எல்லையில் போட்டு தள்ளினால் ஒரு amount வசூல் செய்தால் வருமானம் கிடைக்கும். கொலை கொள்ளை தான் தடுக்க முடியாது. இதையாவது செய்து மக்கள் மீது விதிக்கப்படும் மின்சாரம் சொத்து வரி இவைகளை எல்லாம் குறையும்


S.kausalya
ஜூலை 15, 2024 14:58

கேட்பவர்இடம் சொல்லுங்கள் இது தான் திராவிட மாடல் ஆட்சி என்று "


Nandakumar Naidu.
ஜூலை 15, 2024 14:18

தமிழகம் கொலையாளிகளின் புகலிடமாக அமைந்துள்ளது. (Killing Field). கேடு கெட்ட ஆட்சி.


ஆரூர் ரங்
ஜூலை 15, 2024 13:53

எந்தக் கொம்பனாலும் குறை சொல்லமுடியாத ஆட்சி. அமைதிப் பூங்கா.


Sampath Kumar
ஜூலை 15, 2024 11:55

கொடுமை சாவு எப்படி எல்லாம் ஒருத்தருக்கு வருது


rsudarsan lic
ஜூலை 15, 2024 11:49

அந்த ஊர் MLA வை உடனே சஸ்பெண்ட் செய்யுங்க


sridhar
ஜூலை 15, 2024 13:18

அந்த ஊர் DSP ஐ ஐந்து நிமிஷம் சஸ்பெண்ட் பண்ணியாச்சு .


rajasekar
ஜூலை 15, 2024 11:48

தமிழகம் அமைதி பூங்கா


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை