உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்ரீதேவி சொத்துக்கு உரிமை கோரும் மூவர்; ஐகோர்ட்டில் கணவர் போனி கபூர் வழக்கு

ஸ்ரீதேவி சொத்துக்கு உரிமை கோரும் மூவர்; ஐகோர்ட்டில் கணவர் போனி கபூர் வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மோசடியாக பெற்ற வாரிசு சான்றிதழ் வாயிலாக, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் சொத்துக்கு, மூன்று பேர் உரிமை கோருவதாக கூறி, அவரது கணவரான போனி கபூர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அவரின் மனு விபரம்:

மறைந்த நடிகை ஸ்ரீதேவி, 1988ல் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சொத்தை, சம்பந்த முதலியார் என்பவரின் குடும்பத்தினரிடம் இருந்து வாங்கினார். கடந்த, 37 ஆண்டுகளாக சொத்தை அனுபவித்து வரும் நிலையில், சம்பந்த முதலியார் மகன் சந்திரசேகரனின் இரண்டாவது மனைவி, மகன் மற்றும் மகள் என மூன்று பேர், மோசடியாக வாரிசு சான்றிதழ் பெற்று, சொத்தில் தங்களுக்கு பங்கு உள்ளது என்று கூறி வருகின்றனர்.முதல் மனைவி உயிரோடு இருந்த போது, தன்னை திருமணம் செய்து கொண்டதாக, சந்திரசேகரின் இரண்டாவது மனைவி கூறியுள்ளார். இதனால், மூவரையும் சட்டப்பூர்வ வாரிசுகளாக கூற முடியாது.எனவே, மூவரும் மோசடியாக பெற்ற வாரிசு சான்றிதழை ரத்து செய்யக் கோரி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர், தாம்பரம் தாசில்தார் ஆகியோரிடம் அளித்த விண்ணப்பத்தை, பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, போனி கபூரின் விண்ணப்பத்தின் மீது, நான்கு வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, தாம்பரம் தாசில்தாருக்கு உத்தரவிட்டு, மனுவை, நீதிபதி முடித்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

GMM
ஆக 26, 2025 08:48

1988ல் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சொத்தை, சம்பந்த முதலியார் என்பவரின் குடும்பத்தினரிடம் இருந்து ஶ்ரீதேவி வாங்கி விட்டார் என்றால், ஶ்ரீ தேவி வாரிசுக்கு தான் செல்லும். சம்பந்த முதலியார் மகன் சந்திர சேகரன், 2 வது மனைவி, பிள்ளைகள் எதன் அடிப்படையில் உரிமை கோர முடியும்? முதல் நடவடிக்கையாக வீட்டில் சட்ட விரோதமாக இருப்பவரை வாடகை வசூல் செய்து வெளியேற்றி, வருவாய் துறை கட்டுபாட்டில் கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் வழக்கு நீடிக்கப்பட்டு, வக்கீலிடம் சொத்து சென்றுவிடும்.. நில அபகரிப்பில் திராவிடர் உலகில் 3 ம் இடம். ? தமிழகத்தில் 1 ம் இடம்.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஆக 26, 2025 09:29

சம்பந்த முதலியாருடைய வாரிசான எங்களுக்கு அவரின் சொத்தில் பங்குள்ளது அதை எங்கள் தந்தை எங்களிடம் தெரிவிக்காமல் நடிகை ஶ்ரீ தேவிக்கு விற்று விட்டார் அதனால் அந்த விற்பனை செல்லாது இது தான் அந்த புகாரின் சாராம்சம்.....!!!


GMM
ஆக 26, 2025 08:36

போனி கபூரின் விண்ணப்பத்தின் மீது, நான்கு வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, தாம்பரம் தாசில்தாருக்கு நீதிபதி உத்தரவிட தாசில்தார் கோர்ட் கிளார்க் இல்லை. ஒரு விண்ணப்பம் மீது 4 வாரத்தில் நடவடிக்கை எடுக்க தமிழகம் முழுவதும் அமுலாக்க சட்டம் தேவை. அல்லது கவர்னர் முன் அனுமதியை நீதிபதி பெற வேண்டும். மேலும் வக்கீல் போல் மூல ஆவணம் பார்க்காமல் இறந்தவர் மீது பத்திர பதிவு என்று தவறாக கூறினால், இரு வக்கீல், கோர்ட் கிளார்க் மற்றும் நீதிபதி எப்படி முடியும் என்று சந்தேகம் வராமல் வழக்கை பல ஆண்டுகள் நடத்துவர். தாசில்தாருக்கு முடிவு செய்ய மூல ஆவண நகல் தேவை.


சமீபத்திய செய்தி