உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருச்செந்துார் சூரசம்ஹாரம் 70 சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

திருச்செந்துார் சூரசம்ஹாரம் 70 சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

சென்னை:திருச்செந்துாரில் நடக்கும் சூரசம்ஹார விழாவையொட்டி, சென்னை உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து, 70க்கும் மேற்பட்ட விரைவு சொகுசு பஸ்கள், திருச்செந்துாருக்கு இயக்கப்பட உள்ளன.இது குறித்து, விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: திருச்செந்துாரில் வரும் 7ம் தேதி, கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நடக்க உள்ளது. இதில் பங்கேற்க, தமிழகம் முழுதும் இருந்து, பக்தர்கள் திருச்செந்துார் செல்வர். அவர்கள் வசதிக்காக, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. வரும் 6ம் தேதி, சென்னை, சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், திருச்சி, பெங்களூரு, புதுச்சேரி உள்ளிட்ட ஊர்களில் இருந்து திருச்செந்துாருக்கு, 70க்கும் மேற்பட்ட சிறப்பு சொகுசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. பயணியர் தேவைக்கு ஏற்ப, கூடுதல் விரைவு பஸ்களை இயக்க தயாராக உள்ளோம். பயணியர் www.tnstc.in மற்றும் tnstc official app வழியாக, டிக்கெட் முன்பதிவு செய்யலாம். விரைவு பஸ்களின் இயக்கத்தை கண்காணிக்க, பஸ் நிலையங்களில், கூடுதல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலி போக்குவரத்துக் கழகம் சார்பில், திருச்செந்துாருக்கு 350க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ