உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருமலா பால் நிறுவன அதிகாரி சந்தேக மரணம்; துணை கமிஷனர் பாண்டியராஜனிடம் விசாரணை

திருமலா பால் நிறுவன அதிகாரி சந்தேக மரணம்; துணை கமிஷனர் பாண்டியராஜனிடம் விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'திருமலா பால்' நிறுவனத்தில், 45 கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட, கருவூல மேலாளர் நவீன் பொலினேனி சந்தேக மரணம் தொடர்பாக, கொளத்துார் துணை கமிஷனர் பாண்டியராஜனிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

ரூ.44 கோடி கையாடல்

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் நவீன் பொலினேனி, 37. இவர், சென்னை மாதவரத்தில் தங்கி, பொன்னியம்மன்மேடில் உள்ள, திருமலா பால் நிறுவனத்தில், நிதிப்பிரிவு கருவூல மேலாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிறுவனத்தில், 44.50 கோடி ரூபாய் கையாடல் செய்துவிட்டதாக, நவீன் பொலினேனியிடம், திருமலா பால் நிறுவனத்தார் விசாரித்து உள்ளனர். பணம் கையாடல் குறித்து, கொளத்துார் துணை கமிஷனர் பாண்டியராஜனிடமும் புகார் அளித்துள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cizs8ux3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதேபோல், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், மத்திய குற்றப் பிரிவிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இரு தினங்களுக்கு முன், புழல் பிரிட்டானியா நகரில், நவீன் பொலினேனி வீடு கட்டி வரும் இடத்தில் உள்ள குடிசையில், துாக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். ஆனால், இவரின் கைகள் பின் பக்கம் கட்டப்பட்டு இருந்தன.உயரத்தை தாவி பிடிக்க அங்கு வாய்ப்பு இல்லை. டேபிள் உள்ளிட்ட பொருட்களும் இல்லை. அப்படி இருக்கும்போது, எப்படி துாக்கிட்டு கொண்டார் என, சந்தேகம் எழுகிறது. இதனால், புழல் போலீசார் சந்தேக மரணம் என்றே வழக்குப்பதிவு செய்துள்ளனர். சம்பவ இடம் அருகே உள்ள, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அங்கு நவீன் பொலினேனி மட்டும், காரில் இருந்து இறங்குவது பதிவாகி உள்ளது. இவர் தற்கொலை தான் செய்து கொண்டுள்ளார் என, போலீசார் முடிவுக்கு வந்து உள்ளனர். எனினும், நவீன் பொலினேனியிடம் கையாடல் தொகையில் பங்கு கேட்டு மிரட்டிய, திருமலா பால் நிறுவன அதிகாரிகள் சிலரிடமும் விசாரணை நடக்கிறது. இந் நிலையில், நவீன் பொலினேனி மீது, திருமலா பால் நிறுவனத்தார் அளித்த புகார் மீது, கொளத்துார் துணை கமிஷனர் பாண்டியராஜன், விதிகளை மீறி விசாரித்து இருப்பது தெரிய வந்துள்ளது.

வழக்கு பதியவில்லை

இதுதொடர்பாக, பாண்டியராஜனிடம், போலீஸ் கமிஷனர் அருண், நேற்று விசாரணை நடத்தினார். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து, கமிஷனர் அலுவலகத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.அதுவரை, கொளத்துார் துணை கமிஷனருக்கான பணிகளை கவனிக்க வேண்டாம் எனவும், அவருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையே, நவீன் பொலினேனி மீது, திருமலா பால் நிறுவனத்தார் அளித்த புகார் மீது முறையாக வழக்குப்பதிந்து விசாரிக்காத, மாதவரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

K.Rajassekar
ஜூலை 13, 2025 01:09

இதோட நேரடி கட்டுப்பாட்டில் உள்ள டிபார்ட்மெண்ட் எப்படி நல்லா இருக்கும்?


வல்லவன்
ஜூலை 12, 2025 16:47

இந்த பாண்டியராஜன் ஒரு சைக்கோ. இவன் கோவை பல்லடத்தில் Dsp ஆக இருந்த போது ஒரு அப்பாவி பெண்ணிடம் தன் வீரத்தை காணபித்தவன். அப்பெண்ணை அறைந்ததில் அப்பெண் செவித்திறனை இழந்தார். ஆதிமுக ஆட்சியில் கோவை SP ஆக இருந்த போது பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை FIR இல் வெளியிட்டவன். இவனைப்போன்றவர்கள் காவல்துறைக்கே ஒரு கேடு


ponssasi
ஜூலை 12, 2025 13:54

ஸ்டேஷன் லாக்அப்ல அடிச்சி கொன்னாத்தானே லாக்அப் மரணம்னு அரசை சாடுவீங்க, அவன் இடத்துலே அடிச்சி கொன்னா என்ன சொல்லமுடியும். ரூம் போட்டு யோசிப்பாக போல


Ramesh Sargam
ஜூலை 12, 2025 12:12

திருப்புவனம் போன்று மீண்டும் ஒரு காவல் நிலைய லாக்கப் மரணமாக இருக்குமா...? சந்தேகம் வலுக்கிறது. சிபிஐ விசாரிக்கவேண்டும்.


rasaa
ஜூலை 12, 2025 12:04

மீண்டும், மீண்டும் நிரூபனமாகின்றது, காவல்துறை ஒரு ஏவல் துறை என்று.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 12, 2025 11:48

பிரச்சினை என்று வந்தால் அதிகாரிகள் பலிகடா ஆக்கப்படுகிறார்கள். திரைமறைவில் நின்று உத்தரவு போடும் சார் கள் அது தப்பாக முடிந்தால் அதிகாரிகளை பலிகடா ஆக்கி சத்தமில்லாமல் வேறு இடத்திற்கு மாற்றம் செய்து தப்பிக்க வைத்து விடுகிறார்கள். பிரச்சினை நல்ல விதமாக முடிந்தால் ஃபோட்டோ ஷுட் நடத்தி தற்பெருமை பேசிக் கொள்கிறார்கள். சாதாரண மக்கள் தொலைக்காட்சி மெகா தொடர் பார்ப்பது போல தினமும் பார்த்துவிட்டு தூங்கி எழுந்து வழக்கம் போல வேலைக்கு சென்று விடுகிறார்கள். இதனால் தான் பணம் இருக்குமிடம் பணம் சேருகிறது.


Venkateswaran V
ஜூலை 12, 2025 11:32

விரைவில் காத்திருப்போர் பட்டியல் நீளும் போல் தெரிகிறது


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 12, 2025 09:03

கிம்ச்சை மன்னரை விசாரியுங்க .........


bmk1040
ஜூலை 12, 2025 08:55

கடைசி காலத்தில் இருக்கும் இந்த ஆட்சியில் அவனவன் 1000 கோடி அளவு மினிமம் கொள்ளை அடிக்கும்போது 24மணி நேரமும் வேலை பார்க்கும் காவல்துறையினர் நாமும் ஒதுக்கிக்கொள்வோம் என்று நினைத்து இருக்கலாம்.. இந்த டிஜிபி, கமிஷனர் மற்றும் உளவுதுறை ஏடிஜிபி என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை? இந்த அதிகாரிகள் பற்றி வேறு அப்ப அப்ப தவறான் தகவல்கள் வருகின்றன.


V Venkatachalam
ஜூலை 12, 2025 08:28

திருட்டு தீயமுக ஆட்சியில் கமிஷனர் தன். கட்டுப்பாட்டில் இருக்கும் துணை கமிஷனரை சந்தேகத்தின் பேரில் விசாரணை. தமிழ் நாடு காவல்துறை தன்னுடைய மிடுக்கு கம்பீரம் கவுரவம் இவற்றை யெல்லாம் எப்பவோ விற்பனை செய்து விட்டது. இப்போ நடக்கும் விசாரணையானது எப்பவோ விற்று விட்டதில் கிடைக்கும் ராயல்டியில் பங்கு போட்டுக் கொள்ளவே. அதாவது அசிங்கத்தில் பங்கு.. சபாஷ்..


சமீபத்திய செய்தி