உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2வது நாள் முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தங்கள்: ஓர் பார்வை

2வது நாள் முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தங்கள்: ஓர் பார்வை

சென்னை: சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டின் 2வது மற்றும் நிறைவு நாள் விழா இன்று (ஜன.,8) நடைபெற்றது. இன்றைய மாநாட்டில் மட்டும் மொத்தம் ரூ.6,64,180 கோடி மதிப்பிலான 5068 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

கையெழுத்தான முக்கிய ஒப்பந்தங்கள்

* விழுப்புரத்தில் ரூ.500 கோடி மதிப்பில் 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் காலணி ஆலை அமைகிறது.* பெரம்பலூரில் ரூ.48 கோடி மதிப்பில் அமையவுள்ள காலணி ஆலை மூலம் 150 பேருக்கு வேலைவாய்ப்பு.* டாடா நிறுவனம் ரூ.70,800 கோடி முதலீடு செய்கிறது. இதன்மூலம் 3,800 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்* விருதுநகர், சேலத்தில் ராம்கோ சிமெண்ட் ரூ.999 கோடி முதலீடு.* தூத்துக்குடியில் ரூ.36,238 கோடியில் புதிய பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி ஆலை அமைக்க ஒப்பந்தம். இதனால் 1,511 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.* பேனக் இண்டியா நிறுவனம் காஞ்சிபுரத்தில் ரோபோடிக் மையத்தை அமைக்க ஒப்பந்தம்.* ராம்ராஜ் நிறுவனம் ஜவுளித்துறையில் ரூ.1000 கோடி முதலீடு

அதானி

* அதானி பசுமை எரிசக்தித்துறை ரூ.24,500 கோடி முதலீடு செய்துள்ளது. இதன்மூலம் 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.* அதானி கனெக்ஸ் நிறுவனம் ரூ.13,200 கோடி முதலீடு; ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு* அம்புஜா சிமெண்ட் ரூ.3,500 கோடி முதலீடு; 5000 பேருக்கு வேலைவாய்ப்பு* மஹேந்திரா நிறுவனத்துடன் ரூ.1,800 கோடியில் 4 பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் ஒப்பந்தம்.* சென்னையில் 'எல் அண்ட் டி' நிறுவனம் ரூ.3,500 பேருக்கு ஐ.டி பார்க் அமைக்கிறது. இதில் 40 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.

காவிரி மருத்துவமனை

* பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை அமைக்க காவிரி மருத்துவமனை ரூ.1,200 கோடியில் ஒப்பந்தம்* சிபிசிஎல் நிறுவனம் நாகையில் பெட்ரோ கெமிக்கல் திட்டத்திற்கு ரூ.17 ஆயிரம் கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்.* ஹிட்டாச்சி நிறுவனத்துடன் ரூ.100 கோடியில் ஒப்பந்தம்; 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு* சென்னையில் ஆட்டோமொபைல் துறையில் டாபே நிறுவனம் ரூ.500 கோடி முதலீடு* லாங் இன் நிறுவனம் ரூ.500 கோடி முதலீடு; 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு* ராணிப்பேட்டையில் ரூ.1,500 கோடியில் தொழிற்சாலையை அமைக்கிறது ஹாங் நூல் நிறுவனம்.* சிங்கப்பூர் நிறுவனம் ஹை குளோரி ரூ.2,032 கோடி முதலீடு; 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

மைக்ரோசாப்ட்

* ரூ.2,074 கோடியில் சென்னையில் டேட்டா சென்டரை அமைக்கிறது மைக்ரோ சாப்ட் இந்தியா நிறுவனம்.* ராயல் என்பீல்டு நிறுவனம் ரூ.3 ஆயிரம் கோடி முதலீடு; 2 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு* ஆனந்த் குரூப் ரூ.987 கோடி முதலீடு; 1,340 பேருக்கு வேலைவாய்ப்பு* செயின் கோபின் ரூ.3,400 கோடி முதலீடு* பெஸ்டோ இந்தியா நிறுவனம் ரூ.520 கோடி முதலீடு* கேப்லின் பாயிண்ட் நிறுவனம் ரூ.700 கோடி முதலீடு* லீப் நிறுவனம் ரூ.22,842 கோடி முதலீடு* சிபிடெக் நிறுவனம் ரூ.2,500 கோடி முதலீடு* இந்துஜா நிறுவனம் ரூ.1,250 கோடி முதலீடு* டிகேஜி நிறுவனம் ரூ.1,250 கோடி முதலீடு

முதலீட்டாளர் மாநாட்டில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள்:

உற்பத்தித் துறை ரூ.3.79 லட்சம் கோடிஎரிசக்தித் துறை ரூ.1.35 லட்சம் கோடிவீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை ரூ.62.93 ஆயிரம் கோடிதகவல் தொழில்நுட்பத் துறை ரூ.22.13 ஆயிரம் கோடிஎம்.எஸ்.எம்.இ., துறை ரூ.63.57 ஆயிரம் கோடி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

vbs manian
ஜன 09, 2024 09:14

வெளிநாட்டு அம்பானி அடானிக்கு ரத்தினக்கம்பள வரவேற்பு. உள்ளூர் அம்பானி அடானிக்கு கருப்பு கோடி.


R KUMAR
ஜன 09, 2024 03:48

நம்ப ஆள் இல்லாமல் ஒப்பந்தம் கையெழுத்து ஆக வாய்ப்பே இல்லையேன்னு பார்த்தேன் - அதாங்க நம்ப காவேரி மருத்துவ மனை.


sundara pandi
ஜன 08, 2024 21:36

ஆக மொத்தம் இந்திய கம்பெனிகள்தான் அதிக முதலீடு. அதானி நிறுவனம் பெரிய அளவில் முதலீடு. எப்படி நடக்குதுன்னு பார்த்துவிட்டு கருத்து சொல்வோம்


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜன 08, 2024 21:08

சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு என்று சொன்னார்கள். 90% க்கும் மேலே எல்லோரும் உள்ளூர் முதலீட்டாளர்கள். இதுக்கு எதுக்கு மாநாடு?


ayen
ஜன 08, 2024 19:49

ஓப்பந்தம் கையெழுத்து ஆகி விட்டது இன்னும் நடை முறைக்கு வரவில்லை. இந்த முதலீட்டார்கள் நிலம் வாங்க யாரை நாடுவார்கள்? முதலீட்டாளர்கள் சான்றிதழ்கள் வாங்க கட்டிங் கொடுக்க வேண்டும். இதையெல்லாம் தாண்டி companyயை ஆரம்பித்தால் communiste சங்கங்களை ஆரம்பித்து கம்பெனி நடத்தவிடாமல் செய்துவிடுவார்கள். கடைசியில் கம்பெனி மூடிவிட்டு அடுத்த மாநிலத்திற்கு சென்றுவிடுவார்கள்.


ஆரூர் ரங்
ஜன 08, 2024 19:24

இதில் பாதிக்கும் மேல் தமிழக நிறுவனங்கள். ..க்கு பயந்து இல்லாத திட்டங்களையும் அறிவிப்பு????? ஏற்கனவே பெரும் வங்கிக் கடன் வாங்கியவை. பூ...இதுக்கு ஒரு பில்டப் தேவையா?


ஆரூர் ரங்
ஜன 08, 2024 19:21

இதில் மூன்று அதானி நிறுவனங்கள். நாதஸ் (திமுக) திருந்திட்டதா அவங்களே சொல்றாங்க ????. நம்புங்க உ.பி ஸ்ஸ்.


Sampath
ஜன 08, 2024 19:08

37700 cr from Adani.....How Dengu, Maleriya and Kosu.....


Nagarajan D
ஜன 08, 2024 19:04

முன்னரே ஒப்பந்தம் போட்டவணுங்கெல்லாம் தொழில் தொடங்கி விட்டானுங்களா... புதுசு புதுசா ஒப்பந்தம் போட்டு என்னத்த கிழிக்க போறீங்க....


கருத்து சுந்தரம்
ஜன 08, 2024 18:59

புதுசா ஒண்ணும் வந்தா மாதிரி தெரியலையே. இருக்கும் Company-களின் capacity expansion மாதிரித்தானே இருக்கு. இதாவது நடந்தால் சரி. பாக்கத்தானே போறோம்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை