உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாவ விமோசனத்திற்கு ஸ்டாலின் பிரயாக்கிற்கு செல்ல வேண்டும்

பாவ விமோசனத்திற்கு ஸ்டாலின் பிரயாக்கிற்கு செல்ல வேண்டும்

நாராயணசாமி நாயுடுவின் பெருமைகளை குறிப்பிட்டு கடிதம் எழுதியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். நாயுடு தலைமையில் தான், 50 பைசா குறைக்க கூறி, பெருமாநல்லூரில் விவசாயிகள் போராடினர். அதற்காக, விவசாயிகளை சுட்டுக்கொன்றது தி.மு.க., அரசு. இதற்காக தி.மு.க., பாவ விமோசனம் செய்ய வேண்டும் என்றால், பிரயாக்கிற்கு சென்று, 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் குடமுழுக்கில் முதல்வர் ஸ்டாலின் ஸ்நானம் செய்ய வேண்டும். அப்போதுதான், தமிழகத்திற்கு தி.மு.க., செய்த பாவங்கள் விலகும்.தமிழக ரயில்வே திட்டங்களுக்காக மத்திய பட்ஜெட்டில் ரூ. 6,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை மறைத்து, மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிப்பதாக தி.மு.க., நாடகமாடுகிறது. எத்தனை பெரிய குற்றங்களை செய்தாலும், தி.மு.க., கொடியை கட்டி கொண்டு போனால் போலீசார் கண்டு கொள்ள மாட்டார்கள். அமைச்சர் சேகர் பாபுவின் இரும்பு கரத்தை விட எங்கள் முருகனின் வேல், பல மடங்கு பலத்தை கொண்டது. முருகனின் 12 கரமும், இவர்களது இரும்புகரத்தை அடித்து உடைக்கும்.தமிழிசை, மூத்த தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை